திமுக கூட்டணியில் மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை சீட்? நாளை இறுதி முடிவு
சென்னை: கூட்டணியில் மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு எத்தனை சீட்? என்பது தொடர்பாக நாளை திமுக முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்படும் என்று கடந்த மாதம் 20ம் தேதி அறிவிப்பு வெளியானது. ஆனால், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு எத்தனை சீட் என அறிவிக்கப்படவில்லை. தொடர்ந்து அவர்களுடன் திமுக தொகுதி பங்கீட்டுக் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதேபோல பாரிவேந்தரின், இந்திய ஜனநாயக கட்சியும் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதையொட்டி நாளையே அனைத்துக் கூட்டணிகளையும் இறுதி செய்ய ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதனிடையே இன்று காலை 11 மணியளவில், அண்ணா அறிவாலயத்திற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வந்தார். அவரை இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் சந்தித்து தங்கள் கட்சியின் ஆதரவை திமுகவிற்கு வழங்குவதாக அறிவித்தார்.
இதனிடையே, நாளையே விடுதலை சிறுத்தைகள், மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு அறிவிப்பு வெளியாக உள்ளது. பிற கட்சிகளுக்கு தலா 1 இடமும், மதிமுகவிற்கு ஈரோடு உட்பட 2 தொகுதிகளும் வழங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
விருதுநகர் அருகே திமுக தென் மண்டல மாநாடு மார்ச் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க வசதியாக, கூட்டணியை நாளையே இறுதி செய்துவிடலாம் என ஸ்டாலின் முடிவு செய்துள்ளார் என்கிறார்கள்.
-
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு?












Click it and Unblock the Notifications