"கண்ணப்பனுக்கு ஜாதி ஆணவம்.." முதல்வர் நடவடிக்கை ஓகேதான்.. ஆனால்.. கூட்டணிக்குள் எழுந்த கண்டனக் குரல்
சென்னை: அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதாது என்று திமுக கூட்டணி கட்சிகளே குரல் கொடுக்க தொடங்கி உள்ளன.
ஜாதி ரீதியிலான புகாரில் சிக்கி இருக்கும் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. முதுகுளத்தூரில் ஒன்றிய நிர்வாகியாக இருப்பவர் ராஜேந்திரன். இவரை "எஸ்சி" என்று கூறி ஜாதி ரீதியாக திட்டியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது .
இதையடுத்து ராஜகண்ணப்பன்அமைச்சரவை இலாக்கா மாற்றப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

விமர்சனம்
பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிராக பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்று பலரும் ராஜ கண்ணப்பனுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்துள்ளனர்.

சிபிஎம்
இந்த நிலையில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிஷ்ணன் ராஜன்கண்ணப்பனை விமர்சனம் செய்துள்ளார்,. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23வது மாநில மாநாட்டு பொதுக்கூட்டம் மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெறுகிறது. அதில் பேசிய கே.பாலகிஷ்ணன், ராஜகண்ணப்பன் செய்தது தவறு. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அமைச்சராக இருந்தாலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் ராஜகண்ணப்பன் விவகாரத்தில் முதல்வர் உடனே கவனம் செலுத்தி உள்ளார்.

தவறு
உடனே அவரின் துறையை மாற்றி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அது மட்டும் தீர்வாகி விடாது. அவர் செய்தது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வரும். பிடிஓ ஒருவருக்கு இந்த நிலைமை என்றால் பொது மக்கள் நிலைமை எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள். அவரின் சாதி ஆணவத்திற்கு எதிராக, தீண்டாமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜகண்ணப்பன்
இதற்கு எதிரான நடவடிக்கையில் என்ன விலையையும் கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம், என்று குறிப்பிட்டார் . மேலும் பேசிய அவர் பாஜக மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்படுகிறது. மத பதட்டத்தை ஏற்படுத்த முடியாது. அப்படி ஏதாவது முயன்றால் உங்களை ஓட ஓட விரட்டுவோம். அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். ஆர்எஸ்எஸ் ஒரு ஓநாய் கூட்டம். அதன் குகையில் சென்று அவர்களின் செயல்களை தடுத்து நிறுத்துவோம், என்று கே.பாலகிஷ்ணன் பேசி இருக்கிறார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications