சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து திமுக பேரணி... அமைதியான முறையில் நிறைவு

Google Oneindia Tamil News

Recommended Video

    குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து திமுக பேரணி... அரசியல் தலைவர்கள் பங்கேற்பு - வீடியோ

    சென்னை: குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து சென்னையில் அமைதியான முறையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

    அதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும், இஸ்லாமிய அமைப்பினரும், பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

    சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற பேரணியில் குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    கண்காணிப்பு

    கண்காணிப்பு

    குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சென்னையில் பிரம்மாண்ட பேரணியை நடத்தியது. அதில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி,ஐ.யூ.எம்.எல்., ஐ.ஜே.கே., கொ.ம.தே.க., எஸ்.டி.பி.ஐ., ம.நே.ஜ.க., பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என பல கட்சிகளின் தலைவர்களும் , தொண்டர்களும் பங்கேற்றனர்.

    4 வரிசைகள்

    4 வரிசைகள்

    குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான பேரணியில் தலைவர்கள் வரிசைப்படி நிற்கவைக்கப்பட்டனர். பேரணியின் முதல் வரிசையில் கூட்டணிக் கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு மட்டுமே இடம் கொடுக்கப்பட்டது. இரண்டாவது வரிசையில் சிறிய கட்சிகளின் தலைவர்கள் அணி வகுத்து நின்றனர். மூன்றாவது வரிசையில் எம்.பி.க்களும், மகளிரணியினரும் நின்றனர். மூன்றாவது வரிசைக்கு மேல் எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் அணி வகுத்து நின்றனர்.

    5,000 போலீஸ்

    5,000 போலீஸ்

    பேரணியில் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டிருந்தனர். பேரணி நடைபெறும் சாலையின் இரு மருங்கிலும் போலீஸ் நிற்கவைக்கப்பட்டனர். எந்த அசம்பாவிதங்களுக்கும் இடமில்லாமல் அமைதியான முறையில் பேரணி நிறைவு பெற்றது.

    மெதுவாக

    மெதுவாக

    சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு செல்லும் சாலை மிகவும் குறுகியது என்பதால், பேரணி மெதுவாக சென்றது. பேரணியின் முன் வரிசையில் ஸ்டாலின், சிதம்பரம், வைகோ உள்ளிட்டோர் நின்று அதனை வழிநடத்திச் சென்றனர்.

    English summary
    dmk and allaiance party rally for anti caa in chennai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X