அடுத்த பிரமாண்டத்துக்கு தயாராகும் திமுக.. பிப்ரவரி 8ல் ஸ்டாலின் தலைமையில் பூத் முகவர்கள் மாநாடு!
சென்னை: பிப்ரவரி 8 ஆம் தேதி திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி 8 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக தேர்தல் முகவர்கள் மாநாடு நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் பிப்ரவரி மாதம் முழுவதும் அடுத்தடுத்து மாநாடு நடத்துகிறது திமுக.
திமுக, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர மும்முரம் காட்டி வருகிறது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் நான்கு மண்டலங்களிலும் மாநாடுகள் நடத்தி பல லட்சம் பேரை திரட்டி திமுகவின் செல்வாக்கை உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.

திருவண்ணாமலையில் அண்மையில் திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு நடைபெற்றது. கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கொங்கு மண்டலத்தை குறி வைத்து "வெல்லும் தமிழ் பெண்கள்" என்ற பெயரில் பிரம்மாண்ட மாநாடு நடத்தப்பட்டது. அடுத்த கட்டமாக டெல்டா மண்டலத்தை நோக்கி கவனத்தை திருப்பியுள்ளனர்.
வரும் ஜனவரி 26 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, எம்.பி தலைமையில் "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" தி.மு.க டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறும்
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் வந்த பெண்கள்.. நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த கும்பல்.. அதிரடி கைது












Click it and Unblock the Notifications