“மாஸ்டர் மைண்ட்”.. அதிமுக - பாஜக பிளவில் திமுகவுக்கு செக்! விசிக, முஸ்லிம் கட்சிகளை வளைக்கவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டு இருப்பது பெரும் விவாதப் பொருளாகி உள்ள நிலையில், இதற்கு பின்னணியில் வேறு சில காரணங்கள் இருக்கலாம் என திமுக நிர்வாகிகள் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.

பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா போன்ற தலைவர்கள் குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த விமர்சனத்தை காரணம் காட்டி அக்கட்சியுடனான கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது அதிமுக. இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

DMK cadres suspect on ADMK - BJP alliance break is impress DMK alliance parties

இதுகுறித்து வெளியான அதிமுகவின் தீர்மான அறிக்கையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா அவர்களையும், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.

மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க, "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை" சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எங்கள் சுழகப் பொதுச் செயலாளர், மான்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களைப் பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 - திங்கட் கிழமை), கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த முடிவின் பின்னணியில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக திமுக நிர்வாகிகள் பலர் பல்வேறு சந்தேகங்களை தெரிவித்து உள்ளார்கள். குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், இஸ்லாமிய கட்சிகளை திமுக கூட்டணியைவிட்டு பிரித்து தேர்தலில் போட்டியிட்ட, தேர்தலுக்கு பின் பாஜகவுடன் சென்று கூட்டணி வைக்கலாம் என அவர்கள் தெரிவிக்கிறார்கள். இப்படி செய்யாமல் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது என்பதை உணர்ந்தே எடப்பாடி பழனிசாமி இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+