என்ன இருந்தாலும்.. திமுக அதை மறக்கலாமா? குறும்படத்தில் மிஸ் ஆன காட்சிகள்.. கலங்கும் உடன்பிறப்புகள்
சென்னை: நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவு விழாவில் வெளியிடப்பட்ட குறும்படத்தில் முக்கியமான சில புகைப்படங்கள், காட்சிகள் இடம்பெறாதது திமுக நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாம்.
நேற்று நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவு விழாவை கொண்டாடியது தமிழ்நாடு அரசு. சென்னை சேப்பாக்கம் புதிய அரசினர் விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்ட நாவலரின் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
அவரின் திருவுருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், நாவலர் நெடுஞ்செழியனின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதற்கான அங்கீகாரமும் இதில் அளிக்கப்பட்டது.

நெடுஞ்செழியன்
இதன்படி அவர் எழுதிய நூல்களுக்கான அரசு உரிமை தொகையை இரா.நெடுஞ்செழியனின் குடுமபத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அந்த நிகழ்ச்சியின் போது, அரசியல் மற்றும் தமிழ்ச்சமூகத்திற்கு நாவலர் ஆற்றிய தொண்டினையும் அவரது வரலாற்று சிறப்புகளையும் இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் குறும்படம் ஒன்று வெளியிடப்பட்டது.

ஸ்டாலின் குறும்படம்
அந்த குறும் படத்தில் நாவலர் பற்றிய அனைத்து வரலாற்று பதிவுகளையும் பதிவு செய்திருந்தது தமிழக அரசு. அவரின் வாழ்க்கை வரலாறு முழுக்க இடம்பெற்று இருந்தது. திராவிடர் கழகத்தின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் இவர். சிறு வயதிலேயே பெரியார் பால் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தில் இணைந்தவர் நாவலர் நெடுஞ்செழியன்.

தமிழ் பற்று நெடுஞ்செழியன்
திருக்கண்ணபுரத்தில் பிறந்த இவர் தமிழ் மீது கொண்ட அளவற்ற காதலால் தனது பெயரான நாராயணசாமி என்பதை நெடுஞ்செழியன் என்று மாற்றினார். திராவிட முன்னேற்ற கழகம் தமிழ்நாட்டில் வேரூன்றிட முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஐவரும் ஒருவர். மொழிப்போர் இயக்கத்தில் கலந்து கொண்டு இந்தி திணிப்பிற்கு எதிராக மிக தீவிரமாக போராடிய தலைவர்களில் நெடுஞ்செழியன் தவிர்க்க முடியாத நபர்.

இந்தி திணிப்பு
தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்கு எதிரான விருட்சத்திற்கு பின் இருக்கும் விதைகளில் இவரும் ஒருவர். இப்படிப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனின் குறும்படம் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் அதில், இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்த புகைப்படம் பெரிய அளவில் இடம்பெறவில்லை. முக்கியமாக அண்ணாவும் நாவலரும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறையில் ஒரே அறையில் இருந்ததை பதிவு செய்யவில்லை.

ஏமாற்றம்
திராவிட கழக, திமுக வரலாற்றில் அந்த புகைப்படம் மிக முக்கியமானது, அந்த நிகழ்வு மிக முக்கியமான ஒன்று. திமுகவின் அரசியல் பரிணாம வளர்ச்சியில் இந்தி எதிர்ப்பு போராட்டங்களுக்கு அளப்பறிய இடம் உண்டு. அந்த வரலாற்று நிகழ்வுகள், நாவலர் நூற்றாண்டு நிறைவு விழா குறும்படத்தில் இடம்பெறாதது பெரிய அளவில் அதிர்ச்சியை, ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

திமுக நிர்வாகிகள் அதிருப்தி
திமுக நிர்வாகிகள் சிலரும், அங்கு குழுமி இருந்த நீண்ட கால திமுக நிர்வாகிகள் சிலரும் இந்தி எதிர்ப்பு குறித்த போதிய பதிவுகள் இதில் இடம்பெறவில்லை. குறும்படத்தில் முக்கிய நிகழ்வுகள் விடுபட்டு இருக்கின்றன என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுதான் நமது கட்சி கடந்து வந்த கடுமையான பாதை.. காலங்கள் மாறி இருக்கலாம் ஆனால் திமுக அதை மறந்துவிட கூடாது என்று மூத்த நிர்வாகிகள் சிலர் அந்த கூட்டத்திற்கு பின் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications