கருணாநிதிக்கு ஆறடி நிலம் கொடுத்த மறுத்தவர்களுக்கு.. தமிழ்நாட்டில் இடம் கொடுக்கலாமா? ஸ்டாலின் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரசாரத்தின்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகளை பட்டியலிட்ட ஸ்டாலின், முதலமைச்சர் பழனிசாமி தான் செய்தவை குறித்துப் பட்டியலிடத் தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அண்ணா அருகில் ஓய்வெடுக்க விரும்பிய கருணாநிதிக்கு இடம் கொடுக்காதவர்களுக்குத் தமிழ்நாட்டில் இடம் கொடுக்கலாமா?" என்று பிரசாரத்தில் பேசினார்.

தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அனைத்து முக்கிய கட்சிகளும் தங்கள் பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கும்மிடிப்பூண்டியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

கும்மிடிப்பூண்டி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் டி.ஜெ.கோவிந்தராஜன், பொன்னேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் துரை. சந்திரசேகர் ஆகியோருக்கு ஆதரவாக அவர் வாக்குகளைச் சேகரித்தார்.

படிப்படியாக முன்னேறியவன்

படிப்படியாக முன்னேறியவன்

அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், "50 ஆண்டுகால அரசியல் பாரம்பரியத்தை - வரலாற்றைப் பெற்றிருப்பவன் தான் இந்த ஸ்டாலின் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். பள்ளி மாணவனாக இருந்த போதே, திருவாரூர் நகர வீதிகளில், "ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள் - நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இது அல்லவே" என்று போர்க்குரல் பாடியவர் கருணாநிதி. அவருடைய மகன் ஸ்டாலின். திமுகவில் ஒரு தொண்டனாக 14 வயதில் கோபாலபுரத்தில் என்னை இணைத்துக் கொண்டு, அங்கே இருக்கும் மாணவர்களை ஒன்று திரட்டி ஒரு முடித் திருத்தும் நிலையத்தில் இளைஞரணி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி, படிப்படியாக முன்னேறி திமுகவின் தலைவனாக பொறுப்பேற்று பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.

கருணாநிதியின் திட்டங்கள்

கருணாநிதியின் திட்டங்கள்

5 முறை தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து தமிழக மக்களுக்காக எத்தனையோ அற்புதமான திட்டங்களை கருணாநிதி நிறைவேற்றி தந்திருக்கிறார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், அரசு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகள், மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரை சூட்டி, அவர்களுக்கு ஒரு நலவாரியம் ஏற்படுத்திக் கொடுத்தார், எல்லா மதத்தை சார்ந்தவர்களும், ஜாதி மதங்களை கடந்து, அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமை உணர்வோடு ஒருமித்த கருத்தோடு மக்கள் வாழவேண்டும் என்பதற்காக 'சமத்துவபுரம்' திட்டத்தை தந்தை பெரியார் பெயரில் ஏற்படுத்திக் கொடுத்தார்.

பட்டியிட தயாரா?

பட்டியிட தயாரா?

இதேபோல இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் பழனிசாமி தான் செய்தவற்றைப் பட்டியல் போட்டு சொல்வதற்கு தயாராக இருக்கிறாரா? ஆளுங்கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அதாவது தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பியடித்து வெளியிட்டிருக்கிறார்கள். செய்ய முடியாத காரியங்களை - வாய்க்கு வந்த படியெல்லாம் - பொத்தாம் பொதுவாக பல உறுதி மொழிகளை சொல்லி இருக்கிறார். அதில் எது நடக்கும் எது நடக்காது என்று மக்களுக்கு தெரியும்.

நீட் தேர்வு

நீட் தேர்வு

அதேபோல கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், நீட் தேர்வை நாங்கள் உள்ளே விட மாட்டோம் என்று சொன்னார்கள். இதுவரையில் அது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறதா? இதுவரையில் சகோதரி அனிதா தொடங்கி பல பேர் அந்த நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள். இந்த நீட்டுக்காக சட்டமன்றத்தில் நாங்கள் தீர்மானமே போட்டோம். இதுவரையில் அது என்ன நிலையில் இருக்கிறது? என்று மத்திய அரசிடம் - மாநில அரசு கேட்கத் தயாராக இல்லை. அவர்கள் கைகட்டி - வாய் பொத்தி ஓர் அடிமை ஆட்சியைத் தமிழ்நாட்டில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா நிதியுதவி

கொரோனா நிதியுதவி

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் கொடுங்கள் என்று சொன்னோம். நிதி இல்லை என்று வெறும் 1,000 ரூபாய் மட்டும் கொடுத்தார்கள். மீதம் 4,000 ரூபாய் நாம் ஆட்சிக்கு வந்த அடுத்த நாள் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிச்சயமாக வழங்கப்படும் என்ற அந்த உறுதியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மேம்படுத்தும் வரையில் சொத்துவரி அதிகரிக்கப்படாது. மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்.

கும்மிடிப்பூண்டிக்கு சிறப்புத் திட்டங்கள்

கும்மிடிப்பூண்டிக்கு சிறப்புத் திட்டங்கள்

மீஞ்சூர் - பொன்னேரியில் புறவழிச் சாலை அமைக்கப்படும். கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும். கும்மிடிப்பூண்டியில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும். மெட்ரோ ரயில் சேவை திருவொற்றியூரில் இருந்து மீஞ்சூர் வழியாக கும்மிடிப்பூண்டி வரையிலும் நீட்டிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கும்மிடிப்பூண்டிக்கு கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும். எல்லாபுரம் ஒன்றியம் ஏனம்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்படும். பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் அருகில் சுற்றுலாத் தலம் அமைக்கப்படும். கும்மிடிப்பூண்டியில் குளிர்பதனக் கிடங்கு உருவாக்கப்படும். பொன்னேரி அரசு மருத்துவமனை நவீன வசதிகள் கொண்ட சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தி வழங்கப்படும் என்ற உறுதி மொழிகளைச் சொல்லி இருக்கிறோம்.

ஆறடி இடம் கொடுக்க மறுத்தவர்கள்

ஆறடி இடம் கொடுக்க மறுத்தவர்கள்

கருணாநிதி இறுதி விருப்பம் பேரறிஞர் அண்ணாவின் அருகே ஓய்வெடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால் இந்த ஆட்சியாளர்கள் அதைச் செய்ய விடவில்லை. இதே பழனிசாமி வீட்டிற்கு நான் சென்றேன். கருணாநிதி சாதாரண தலைவர் அல்ல, 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்திருக்கிறார். இந்திய நாட்டிற்கு பல ஜனாதிபதிகளை அடையாளம் காட்டியிருக்கிறார். பல பிரதமர்களை உருவாக்கி இருக்கிறார். அப்படிப்பட்ட கருணாநிதிக்கு ஆறடி இடம் கொடுக்க மறுத்தவர்கள். அதற்குப் பிறகு நாம் நீதிமன்றம் சென்று வெற்றி பெற்று பேரறிஞர் அண்ணாவிற்கு பக்கத்தில் அவரை அடக்கம் செய்தோம். எனவே உங்களையெல்லாம் நான் அன்போடு உரிமையோடு கேட்க விரும்புவது, கருணாநிதிக்கு இடம் கொடுக்காத இந்த பழனிசாமிக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்கலாமா?" என்று அவர் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+