சென்னை டூ டெல்லி விமானத்தில்.. பணிப்பெண்ணிடம் அத்துமீறிய திமுக கவுன்சிலர் கைது! பரபர தகவல்
சென்னை: சென்னையில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் விமான பணிப்பெண்ணிடம் குடிபோதையில் அத்துமீறிய திமுக கவுன்சிலர் மற்றும் அவரது நண்பரை சென்னை மீனம்பாக்கம் மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து டெல்லிக்கு பல்வேறு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இண்டிகோ விமான நிறுவனமும் சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானங்களை இயக்கி வருகிறது.

விமானப் பணிப்பெண்ணிடம் அத்துமீறல்
இந்த விமானத்தில் கடந்த 25 ஆம் தேதி சென்னையில் இருந்து டெல்லிக்கு திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் தியாகு என்ற இரண்டு பேரும் பயணித்துள்ளனர். அப்போது, விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றிய 25 வயது இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இளம்பெண்ணை ஒருமையில் அழைத்து அவரது ஊர் பெயரை கேட்டு அத்துமீறியதாகவும் சொல்லப்படுகிறது. குடிபோதையில் இருந்த இருவரும் இந்த அத்துமீறிய செயலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். திமுக கவுன்சிலர் மற்றும் அவரது நண்பரின் செயலால் அதிர்ச்சி அடைந்த விமான பணிப்பெண் சென்னை மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார்.
சென்னைக்கு திரும்பும் போது
இந்த புகாரின் அடிப்படையில் 26 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாரு திமுக கவுன்சிலர் மற்றும் அவரது நண்பர் தியாகுவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சம்மனை ஏற்று இருவருமே விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து நேற்று மாலை டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்பியுள்ளனர்.
விமான நிலையத்தில் வைத்தே கைது
அப்போது சென்னை விமான நிலையத்தில் வைத்தே போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர். பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண் வன்கொடுமை ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிரபாகரன் திருவள்ளூரில் 6-வது வார்டு கவுன்சிலர் என்பதும் தியாகு என்பவர் வழக்கறிஞராகவும், ரியல் எஸ்டேட் அதிபராகவும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தேவைப்பட்டால் அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications