நான்தான் கவுன்சிலர்! போலீசாரிடம் கெட்ட வார்த்தை பேசி.. சீறிய திமுக நிர்வாகி! ஆக்சன் எடுத்த முதல்வர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை சேர்ந்த திமுக கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

Recommended Video

    நான்தான் கவுன்சிலர்...நீ வாடா...சென்னையில் போலீசை வசைபாடிய திமுக நபர் - சாட்டை சுழற்றுவாரா முதல்வர்

    தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றிபெற்றது. சென்னையில் 200 வார்டுகளில் பெண்கள்தான் அதிகம் வென்றனர். 101 வார்டுகளை பெண்கள் பிடித்து புதிய சாதனை படைத்தனர்.

    பல இடங்களில் பெண் கவுன்சிலர்கள் அதிக அளவில் வென்று இருந்தாலும் அவர்களின் கணவர் அல்லது அப்பாதான் களத்தில் பணிகளை செய்து வருகின்றனர். பெண் கவுன்சிலர்களை வீட்டில் இருக்க சொல்லிவிட்டு அவர்கள் வீட்டு ஆண்கள்தான் தினமும் ஆய்வு பணிகளை செய்கின்றனர்.

    பெண் கவுன்சிலர்கள்

    பெண் கவுன்சிலர்கள்

    இது தொடர்பாக முன்பே திமுக எம்பி கனிமொழி எச்சரிக்கை விடுத்து இருந்தார். பெண் கவுன்சிலர்கள் சிறப்பாக பணி செய்ய வேண்டும். அவர்களின் பணிகளில் குடும்பத்தினர் மூக்கை நுழைக்க கூடாது. பெண் கவுன்சிலர்களை சுயமாக பணி செய்ய விடமால் வீட்டு ஆண்கள் தலையிடக் கூடாது. வீட்டில் உள்ள கணவர், அப்பா, அண்ணன் ஆகியோர் வேலைகளை பார்த்துக்கொள்வார்கள் என்று பெண் கவுன்சிலர்கள் சும்மா இருந்துவிடக் கூடாது என்று குறிப்பிட்டு இருந்தார்.

    திமுக கவுன்சிலர்கள்

    திமுக கவுன்சிலர்கள்

    ஆனால் அதையும் மீறி சில இடங்களில் திமுக கவுன்சிலர்களில் பெண்களுக்கு பதிலாக அவர்களின் கணவர்கள் பணிகளை செய்கின்றனர். அதோடு சில இடங்களில் கவுன்சிலர்கள் மக்களை மிரட்டுவதாகவும், கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களில் வாக்குவாதம் செய்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. முக்கியமாக சென்னையில், சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட் கொடுங்கையூர் பகுதியில் வீடு கட்டி வந்த தேவி என்ற பெண்ணிடம், வீடு கட்ட அனுமதி பெற்றீர்களா என்று 16-வது வார்டு கவுன்சிலர் ஷர்மிளா காந்தியின் கணவர் கருணாநிதி கேட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

     கவுன்சிலர் புகார்

    கவுன்சிலர் புகார்

    கவுன்சிலர் பேசாமல் அவரின் கணவர் இப்படி வாக்குவாதம் செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு தீரும் முன்பே சென்னையை சேர்ந்த திமுக கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் போலீசாரிடம் வாக்குவாதம் செய்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட 51 வது வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நிரஞ்சனா. இவரின் கணவர் ஜெகதீசன்தான் அங்கு மனைவிக்கு பதிலாக ரோந்து பணிகளை செய்து வந்தார்.

    திமுக உறுப்பினர்

    திமுக உறுப்பினர்

    இவர் திமுக உறுப்பினராகவும், உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்ற சென்னை வடக்கு மாவட்ட செயலாளராகவும் இருந்துவந்துள்ளார். இந்த நிலையில் ராயபுரம் பகுதியிலுள்ள ஜேபி கோவில் தெருவில் இவர் ரோந்து பணிகளில் கும்பலாக ஈடுபட்டு வந்தார். இதை பார்த்து அங்கு வந்த போலீசார் ஏன் கும்பலாக நிற்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு நான்தான் கவுன்சிலர் என்று கூறி இவர் சண்டை போட்டுள்ளார்.

    கோபம் ஜெகதீசன்

    கோபம் ஜெகதீசன்

    ஜெகதீசனிடம் போலீசார் மேலும் விசாரிக்க.. கோபம் அடைந்த அவர் கெட்ட வார்த்தைகளால் போலீசாரை திட்டி இருக்கிறார். அதோடு நான்தான்டா கவுன்சிலர்.. என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ என்றும் பேசி இருக்கிறார். அங்கு இருந்த போலீசார் ஒருவரை அடிப்பது போல அருகில் சென்ற ஜெகதீசன் வா வா மோதிப்பார்க்கலாம் என்று சண்டைக்கு போய் இருக்கிறார். அதோடு வீடியோ எடுத்த போலீசையும் கண்டபடி திட்டி இருக்கிறார்.

    கவுன்சிலர் ஜெகதீசன்

    கவுன்சிலர் ஜெகதீசன்

    இந்த வீடியோ வெளியாகி இணையம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெகதீசன் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். அவருடன் திமுகவினர் தொடர்பு வைக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. கழகக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அவர் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார். அவர் மீதான புகார்கள் பற்றி விசாரிக்கப்படும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+