"புதுஸ்ஸா இருக்கு".. எடப்பாடி பழனிசாமி சொன்ன கருத்து.. டக்குனு எழுந்த துரைமுருகன்.. அவையில் கலகல
சட்டசபையில் துரைமுருகன் எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு பதிலளித்தார்
சென்னை: சட்டபேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக மூத்த தலைவர் துரைமுருகன் கலகலப்பாக பதில் தந்து அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தினார்.
அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் இன்று சட்டசபையில் நிதியமைச்சரிடம் ஒரு கேள்வி எழுப்பினார்.. அபோது, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, இங்கே தானே இருந்தீர்கள்? எந்த அடிப்படையில் தேர்தல் அறிக்கையை தயாரித்தீர்கள்? என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த நிதியமைச்சர், "இடைக்கால பட்ஜெட்போது வெளிநடப்பு செய்து இருந்தோம். ஆனால் அதை செய்தித்தாளில் பார்த்து படித்து தெரிந்து கொண்டோம்" என்றார்...

தள்ளுபடி
"கடன் இருப்பது தெரிந்தும் நகை, கல்வி, விவசாய கடன் தள்ளுபடியை எப்படி தேர்தல் வாக்குறுதி அளித்தீர்கள்?" என்று சம்பத்குமார் கேட்டார்.. அதற்கு நிதியமைச்சர், "நாங்கள் ஆட்சிக்கு வந்து நூறு நாட்களில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்... மறுபடியும் மறுபடியும் இதே கருத்தை பேச வேண்டாம். ஆக்கபூர்வமான கருத்துக்களை உறுப்பினர்கள் பேச வேண்டும்" என்றார்.

கருத்து
அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குறுக்கிட்டு, "அமைச்சர்கள் விளக்கம் தரும்போது, சுருக்கமாக விளக்கம் அளிக்க வேண்டும். அப்போது தான் உறுப்பினர்கள் கேள்வி கேட்பதற்கு கூடுதல் நேரம் கிடைக்கும்" என்றார்... உடனே பிடிஆரும், "எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தை பின்பற்றுகிறேன் என்றார்.

துரைமுருகன்
அப்போது அவை முன்னவர் துரைமுருகன் எழுந்து, "இதே கருத்தை நீங்கள் ஆட்சியில் இருக்கும்போது நான் 1000 முறை கேட்டிருக்கிறோமே.. நாங்கள் ஒரு கேள்வி கேட்டுட்டு, டீ குடிச்சிட்டு வரை நீங்க அதையேதான் விளக்கி கொண்டிருப்பீர்கள்" என்றதும் எடப்பாடி பழனிசாமி முதல் அனைவருமே சிரித்துவிட்டனர்.

மக்கள் பிரச்சனை
மறுபடியும் எடப்பாடி பழனிசாமி தொடரும்போது, "நிதியமைச்சர் வெளிநாடுகளுக்கு சென்று பொருளாதாரத்தை படித்துவிட்டு வந்திருக்கிறார்... ஆனால், பொருளாதாரம் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை... மக்கள் பிரச்சனையை பேசதான் இங்கு வந்துள்ளோம்.. பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசிக்க நாங்க வரவில்லை... ஆனால், மக்கள் பிரச்சினை குறித்து தெரியாமல் பொருளாதாரம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் நிதியமைச்சர்" என்றார்.

பதிலடி
எடப்பாடி பழனிசாமி இப்படி சொன்னதுமே மறுபடியும் துரைமுருகனே அதற்கு பதிலளித்தார்.. "பொருளாதாரம் குறித்து படித்த எனக்கே நிதியமைச்சர் பேசுவது முழுசா புரியவில்லை... சில நேரங்களில் நிதியமைச்சர் சொல்வது எனக்கே புதுசு புதுசாக இருக்கிறது.. ஆனால், மற்றவர்களுக்கும் புரிய வேண்டும், புரிய வைக்க வேண்டும் என்பதற்காக அவர் ஆர்வமாக எடுத்து சொல்கிறார்" என்றார்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications