"லிஸ்ட்".. அதுதான் காரணம்.. வருத்தத்தில் "சீனியர்".. அப்படில்லாம் இல்லை.. தெம்பூட்டும் அறிவாலயம்
திமுக தரப்பில் அமைச்சர்கள் லிஸ்ட் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது
சென்னை: "துரை.. துரை"..ன்னு ஒவ்வொன்னுத்துக்கும் கலைஞர் கூப்பிட்டு கருத்து கேட்பார்.. ஆனால், இப்போ நிலைமை அந்த மாதிரி இல்லை" என்று துரைமுருகன் ஆதரவாளர்கள் வருத்தமாக சொல்லி வருகிறார்களாம்.. இதற்கு காரணம் அந்த "லிஸ்ட்"தான்..!
திமுக தான் எப்படியும் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்ற கணிப்புகள் உலா வரும் நிலையில், அக்கட்சியும் அமைச்சர் பட்டியலை ரெடி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
அந்த லிஸ்ட் பற்றின தகவல்கள் வெளியானதில் இருந்தே திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் குறித்த செய்திகளும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

துரைமுருகன்
முதலில், இந்த லிஸ்ட்டில் தன் பெயரையே காணோமே என்று பதறிப்போய் விட்டாராம் துரைமுருகன்.. உடனே ஸ்டாலினுக்கு போனை போட்டு, "தம்பி, என்னப்பா என் பேரை காணோமே" என்று கேட்டுள்ளார்.. அதற்கு ஸ்டாலினோ, அண்ணே.. நீங்க இல்லாமலா? உங்களுக்கு மிக முக்கிய பதவி காத்துக்கிட்டு இருக்கு" என்று சொன்னாராம்.

சபாநாயகர்
ஆனாலும், துரைமுருகன் மனம் ஏற்கவில்லையாம்.. அது என்ன பதவியாக இருக்கும்? ஒருவேளை சபாநாயகர் பதவியா? அப்படி பதவி தந்து தன்னை உட்கார வைத்துவிடுவார்களோ என்றுகலங்கி போய் உள்ளதாக செய்திகள் வந்தன. இதற்கு அடுத்தபடியாக இன்னொரு செய்தி வெளியானது.. அதாவது, துரைமுருகனுக்கு சட்டத்துறை அமைச்சர் பதவியை தருவதாகவும், இதைக்கேட்டு துரைமுருகன் அப்செட் என்றும் சொல்லப்பட்டது.

லிஸ்ட்
இப்படிப்பட்ட சூழலில்தான் மற்றொரு செய்தி கசிந்து வருகிறது.. துரைமுருகனுக்கு போன் போட்டு ஸ்டாலின் பேசும்போது, "கேபினட் லிஸ்ட் ரெடி பண்ணணும்.. உங்க கருத்துகளை சொல்லுங்க" என்று கேட்டுள்ளார்.. அதற்கு துரைமுருகனோ, தேர்தலுக்கு வேட்பாளர் லிஸ்ட்டையே நீங்கதான் ரொம்ப நல்லா ரெடி பண்ணீங்களே, அந்த மாதிரியே இந்த லிஸ்ட்டையும் சிறப்பா பண்ணிடுங்க என்று சொன்னாராம்.

சீனியர்
இதற்கு காரணம், சீனியரான தன்னை கேட்காமலேயே லிஸ்ட்கள் ரெடியானதால், சற்று வருத்தத்தில் இருந்தாராம் துரைமுருகன்.. பொதுச் செயலாளர் என்ற முறையில்கூட தன்னை கலந்து ஆலோசிக்கவில்லையாம்.. அதேபோல, அமைச்சர் லிஸ்ட்டில் தன் பெயர் உள்ளதா என்பதைகூட துரைமுருகனுக்கு நெருக்கமானவர்களால் தெரிந்து கொள்ள முடியாமல் போய்விட்டதாம்..

பொதுப்பணித்துறை
இது எல்லாவற்றிற்கும் மேலாக, அடுத்து ஆட்சி அமைந்தால், பொதுப்பணித்துறை பதவியை தருவார்கள் என்று எதிர்பார்த்து காத்துள்ள நிலையில், சட்டத்துறை மட்டும்தான் என்றும் சலசலக்கப்பட்டு வருகிறது.. இதெல்லாம் கேள்விப்பட்டுதான் துரைமுருகன் நொந்து போய் அப்படி ஒரு பதிலை ஸ்டாலினுக்கு சொன்னதாக கூறப்படுகிறது.

முக்கியத்துவம்?
எனினும், இந்த தகவல் குறித்து நாம் சிலரிடம் விசாரித்தோம்.. அவர்கள் சொல்லும்போது, "இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஆனால், அடிப்படையில் அப்படி இருக்க வாய்ப்பில்லை.. காரணம், துரைமுருகனுக்கான முக்கியத்துவம் தொடர்ந்து கட்சியில் இருந்து கொண்டுதான் வருகிறது.. எத்தனையோ பேர் துரைமுருகனுக்கு இந்த முறையாவது சீட் தராமல் இருங்க என்று சொந்த தொகுதியில் இருந்தே அறிவாலயத்துக்கு லெட்டர் போட்டார்கள்..

பதவி
ஆனாலும், கட்சியின் மிக முக்கியமான சீனியர் இல்லாமல், தேர்தலை சந்திக்க முடியாது என்பதால்தான் மறுபடியும் சீட் தரப்பட்டது. அதேபோல, தற்போது பல இளம் வேட்பாளர்களுக்கு அமைச்சர் பதவி தரப்போவதாக சொல்கிறார்கள்.. அப்படி நிறைய இளம் அமைச்சர்கள் இருந்தால், கட்சியை வழிநடத்த சீனியர்கள் வேண்டாமா? அதனால்தான் துரைமுருகனுக்கு இந்த முறையும் அமைச்சர் பதவி தரப்படுகிறது.

வதந்தி
எல்லாவற்றிற்கும் மேலாக, கட்சி தலைவருக்கு இணையான பொதுச்செயலாளர் பதவியில் அவரை அமர வைத்துள்ளனர்.. இதெல்லாம் உதயநிதிக்கு, சபரீசனுக்கு எதிரானவர்கள் யாராவது கிளப்பி விட்ட செய்தியாகும்.. துரைமுருகனுக்கான இடம் திமுகவில் அப்படியேதான் இருக்கிறது.." என்றனர்.












Click it and Unblock the Notifications