Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டிரைட்டா ஸ்டாலினுக்கே அனுப்பிய "மெசேஜ்".. அவருக்கு புது போஸ்டிங் ரெடியாமே?.. எகிறும் எதிர்பார்ப்பு

முதல்வர் ஸ்டாலின் உதயநிதிக்கு அமைச்சர் பதவி குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதிக்கு புது பதவி, எப்போது தரப்படும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கும் விஷயம் திமுக தரப்பில் தொடங்கிவிட்டதாம்.. இதற்கான பிள்ளையார் சுழியை போட்டும் விட்டார்கள்..!

திமுக ஆட்சி பொறுப்பேற்றதுமே, உதயநிதிக்கு எந்த மாதிரியான பொறுப்பு தரப்படும்? ஒருவேளை அமைச்சர் பதவி தரப்படுமா? அப்படியே தந்தாலும் எந்த துறை இவருக்காக ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால், உதயநிதிக்கு அமைச்சர் பதவி எதுவும் தரப்படவில்லை..

கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், திடீரென செய்தியாளர் சந்திப்பில், "உதயநிதிக்கு அமைச்சர் பதவி" என்ற பேச்சை ஆரம்பித்தார்..

நண்பர்

நண்பர்

உதயநிதியின் நெருங்கிய நண்பர் என்பதாலும், தன்னுடைய சொந்த விருப்பத்தை அன்பில் மகேஷ் இவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்றே அப்போது இந்த பேச்சு எடுத்துக் கொள்ளப்பட்டாலும், அதை அவர் பொதுவெளியில், குறிப்பாக உதயநிதி பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இந்த விஷயத்தை போட்டுடைத்ததுதான் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

வாய்ப்பு

வாய்ப்பு

அதற்கேற்றபடி, உதயநிதியும், கையில் இருக்கும் படங்களை முடித்து கொடுக்க ஷூட்டிங்கில் கவனம்செலுத்தி வருவதாகவும், ஒருவேளை படங்களை முடித்துவிட்டு முழு நேரமாக அரசியலில் கவனம் செலுத்துவார் என்றும் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.. அதற்கேற்றபடி, திமுக கூட்டணியில் இருந்தே உதயநிதிக்கு பதவி கொடுக்க வேண்டும் என்ற குரல் எழுந்தது.. அதுவும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று ஒருபடி மேலே சென்று கோரிக்கையை காங்கிரஸ் வைத்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

முதல்வர்

முதல்வர்

தமிழக காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு மனு ஒன்றை அனுப்பியிருந்தார்.. அதில், தமிழக முதல்வராகிய நீங்கள், உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கும் ஆழ்ந்த அரசியல் அறிவு, மக்களோடு அவருக்கு இருக்கும் நெருக்கம், கட்சியினரோடு இருக்கும் பிடிப்பு இதையெல்லாம் மதிப்பீடு செய்து, அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

உதயநிதி

உதயநிதி

இதற்கு பிறகும் பலமுறை உதயநிதிக்கான பதவி குறித்த சலசலப்புகள் வந்து கொண்டுதானிருக்கிறது.. ஆனால், அதிகாரப்பூர்வமாக எங்குமே இதை பற்றி பேச்சு எடுக்கப்படவில்லை.. இப்போது உதயநிதிக்கு பதவி தர வேண்டும் என்று திமுகவின் அணிகள் சார்பில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டுவிட்டது.. இதற்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது திமுகவின் சுற்றுச்சூழல் அணியாகும்.. கடந்த 11-ந்தேதி சென்னை மற்றும் திருவள்ளூர் மண்டல மற்றும் மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது.

திட்டங்கள்

திட்டங்கள்

சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திக்கேய சிவசேனாபதி தலைமையில் நடந்த அந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும், சுற்றுச்சூழல் தொடர்பாக கவனிக்க வேண்டிய திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன. கூட்டத்தின் முடிவில், சுற்றுச்சூழல் தொடர்பான பல தீர்மானங்களை நிறைவேற்றியவர்கள், சிறப்பு தீர்மானமாக, தமிழக அமைச்சரவையில் உதயநிதியை சேர்க்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

தீர்மானம்

தீர்மானம்

இந்த தீர்மானத்தை ஸ்டாலினை சந்தித்து கொடுக்கவிருக்கிறது திமுகவின் சுற்றுச்சூழல் அணி.. இதே பாணியில் திமுகவின் மற்ற அணிகளும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என சொல்லப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு, திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதியை நியமிக்க வேண்டும் என இப்படித்தான் ஒவ்வொரு அணியும் தீர்மானம் நிறைவேற்றி கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்தது.. அதே பாணியைதான் இப்போதும் கையில் எடுக்கப்பட்டுள்ளது.

மின்னிதழ்

மின்னிதழ்

இந்த கூட்டத்தில் மேலும் சில முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.. முதல்வர் தொடங்கி வைத்த மஞ்சபை இயக்கத்தை, அனைத்து மாவட்டங்களிலும் இலவசமாக கழக சுற்று அணியின் சார்பில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும், மாதாந்திர மின்னிதழ் தொடங்குவது, அதற்கான ஆசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பு குழு தொடங்குவது மற்றும் அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது..

 அடையாள அட்டை

அடையாள அட்டை

அதேபோல, இலவச நாற்று பண்ணையை செயல்படுத்துவது, 100 முதல் 200 தன்னார்வலர்களை இணைத்து, அவர்களுக்கான அடையாள அட்டையை கொடுப்பது, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள நச்சு தொழிற்சாலைகளில் இருந்து கழிவுகள் வெளியேற்றப்படும் நேரத்தை பொதுமக்கள் பார்வைக்கு தெரிவிக்கும் வகையில் தகவல் பலகை அமைப்பது உட்பட 10 வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன... எனினும் இதில் ஹைலைட்டானது உதயநிதிக்கு போஸ்டிங் தருவது தான்.. பொங்கல் முடிந்ததுமே இதற்கான அறிவிப்பும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!

Recommended Video

    சும்மா வாய் வார்த்தை பேசு மாட்டேன்.. 8 மாத செயல்பாடுகளை பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின் - வீடியோ!
    தீர்மானம்

    தீர்மானம்

    முன்னதாக, உதயநிதி ஸ்டாலினுக்கு, தமிழக அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும் என்று திருப்பூர் மத்திய மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது... அதேபோல, தஞ்சை மாவட்ட கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. அந்த வகையில் சென்னை - திருவள்ளூர் மாவட்டமும் தீர்மானத்தை நிறைவேற்றி முதல்வருக்கு அனுப்ப உள்ளது... பெரும்பாலான மாவட்டங்களில் இருந்து வரும் தீர்மானங்களின் அடிப்படையில், ஒருமித்த முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+