பாசிசம் வீழட்டும்.. இந்தியா வெல்லட்டும்! 3 நாளுக்கு தமிழகம் முழுக்க பொதுக்கூட்டம்! திமுக மாஸ் பிளான்
சென்னை: உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் 'பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்' என்ற முழக்கத்துடன் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றன.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் ஆளும் திமுக அனைத்து இடங்களையும் வென்று தனது கூட்டணி வெல்ல வேண்டும் என வியூகம் வகுத்து வருகிறது. அந்த வகையில், புதுவையையும் சேர்த்து மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வேட்கையுடன் தேர்தல் பணிகளை திமுக தலைமை முடுக்கிவிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆகியவைகளை அமைத்து, 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இருக்கும் திமுக நிர்வாகிகள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து தேர்தல் பணிகளை முன்னெடுத்ததன் அடுத்தக் கட்டமாக, இந்த பொதுக்கூட்டங்களை நடத்துகிறது.
ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாக சென்று தன்னார்வலர்கள் தொடங்கி, தொழில் நிறுவனங்கள், மக்கள் பிரதிநிகள் என அனைவரிடமும் கலந்து பேசி தேர்தல் அறிக்கையில் இடம் பெறக்கூடிய அம்சங்களை அவர்களிடம் இருந்தே பெற்று வருகிறது. இந்தியாவில் இனி ஜனநாயகம் நீடிக்குமா? தேர்தல் முறை என ஒன்று இருக்குமா ? அரசியல் சட்டம் நிலைக்குமா? என பல்வேறு கேள்விகளுக்கு விடை அளிக்கும் தேர்தலாக வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் இருக்கும் என சமீபத்தில் குறிப்பிட்டு இருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
அந்த வகையில், உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் 'பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்' என்ற முழக்கத்துடன் 16.02.2024, 17.02.2024 , 18.02.2024 என மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றன.
முதற்கட்ட பொதுக்கூட்டங்கள் இன்று, சிவகங்கை,நெல்லை, விழுப்புரம், தூத்துக்குடி, கடலூர், ஸ்ரீபெரும்புதூர், ஈரோடு, நாமக்கல், கன்னியாகுமாரி, மயிலாடுதுறை, திருவண்ணாமலை ஆகிய 11 மாவட்டங்களில் நடக்கின்றன. இந்த மாவட்டங்கள் முறையே அமைச்சர் இ.பெரியசாமி, கனிமொழி கருணாநிதி எம்.பி., ஆர்.எஸ்.பாரதி, பொன்.முத்துராமலிங்கம், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., திண்டுக்கல் ஐ.லியோனி, பேராசிரியர் சபாபதிமோகன், முனைவர் கோவி.செழியன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
-
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எப்படி வழங்கப்படும்? இப்போதே திட்டத்தை கையில் எடுக்கும் திமுக? கசிந்த தகவல்! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்!












Click it and Unblock the Notifications