டெல்லியின் கண்காணிப்பு வளையத்திற்குள் துரைமுருகன்.. கோப்பை தூசு தட்டி வரும் வருமான வரித்துறை..!
சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் டெல்லியின் கண்காணிப்பு வளையத்திற்குள் இருப்பதை அவரைச் சுற்றி நடக்கும் சமீபத்திய நிகழ்வுகள் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.
இதுவரை இல்லாத வகையில் தமிழக அரசியலிலும், வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளது பாஜக தேசியத் தலைமை.
ஆட்சியில் இல்லாதபோதே மத்திய அரசை கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்து வரும் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்துவிட்டால் இன்னும் குடைச்சல் கொடுக்கக்கூடும் என நினைக்கிறது பாஜக தலைமை.

துரைமுருகன்
வேலூர் மாவட்ட திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியிருப்பது அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகனின் தூக்கத்தை கலைத்துள்ளது. துரைமுருகன் திமுக பொருளாளராக இருந்தவரை கூட விட்டுப்பிடித்து வந்த டெல்லி இப்போது பொதுச்செயலாளராக வந்த பின்பு கடும் குடைச்சல் கொடுக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது துரைமுருகன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பண விவகாரம் இப்போது கிளறப்பட்டு வருகிறது.

உளவுத்துறை
துரைமுருகனின் மகனும் வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த நிலையில் அவரது நடவடிக்கைகள் தீவிரமாக நோட்டமிடப்பட்டுள்ளன. இதனிடையே தனது அறைக்குள் அத்துமீறி நுழைந்த உளவுத்துறையினர் தன்னை மிரட்டியதாக நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் புகார் எழுப்பிய நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பூஞ்சோலை சீனிவாசன் இல்லம் சிபிஐ அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

ஏன் சோதனை
கதிர் ஆனந்த வேலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் அவருக்கான தேர்தல் பணிகள் மற்றும் பண பரிவர்த்தனைகளை கவனித்துக்கொண்டவர் தான் பூஞ்சோலை சீனிவாசன். துரைமுருகனின் மிகவும் நம்பிக்கைக்குரியவர் என்பதால் அவர் மூலமே பணப்பரிமாற்றங்கள் நடந்திருக்கிறது. இப்படி தனக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நடைபெறும் நிகழ்வுகளால் துரைமுருகன் அப்செட்டில் இருக்கிறார்.

துரைமுருகன் அல்ல
துரைமுருகனை பொறுத்தவரை இப்போது தனி நபர் இல்லை, அவர் திமுகவின் பொதுச்செயலாளர். அவரை சுற்றி நடக்கும் நிகழ்வுகளால் துரைமுருகன் இமேஜுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படாது, அது திமுகவுக்கும் சேர்ந்தே ஏற்படும். இப்படி பல கணக்குகளின் அடிப்படையில் அரசியல் ஆடுபுலி ஆட்டத்தை தமிழகத்தில் நடத்த தொடங்கிவிட்டது டெல்லி.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications