அதிகரித்த கடன் சுமை.. வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு.. எடப்பாடி பழனிச்சாமி கடும் தாக்கு
சென்னை: சட்டசபையில் எதிர்கட்சியினர் பேசுவதை நேரடியாக ஒளிபரப்பு செய்வதில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளதாகவும் 10 சதவிகித தேர்தல் வாக்குறுதிகளைக்கூட திமுக நிறைவேற்றவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்றைய தினம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கோடை காலத்தில் கடும் வெட்பம் நிலவும் என்று கூறப்படும் நிலையில் இந்த அரசு கோடை காலத்தின் மின் தேவையை சமாளிக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அறிய விரும்புகிறேன். கோடைகாலத்தில் வீடுகளில் அதிக அளவு மின் நுகர்வு செய்யப்படும். மேலும் வேளாண்மை, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், என்று அனைத்து தரப்பினருக்கும் தேவைப்படும் மின்சாரத்தை பெற இந்த அரசு எடுத்த நடவடிக்கைகளை அறிய விரும்புகிறேன்.

குறைந்தபட்சம் ஒருநாள் தேவை 19,000 மெகாவாட் ஆக அதிகரிக்கும் என்று தெரிய வருகிறது. ஏனெனில் தமிழகம் முழுவதும் அணைகளில் தண்ணீர் அளவு குறைவாக இருப்பதால் நீர்மின் நிலையங்களில் எதிர்பார்த்த மின்சாரத்தை எதிர்பார்க்க முடியாது.
எனவே முன் எச்சரிக்கையாக அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி கையிருப்பு, காற்றாலை, தனியார் மின் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட அனைத்து வழிமுறைகளையும் ஆராய்ந்து மின் ஒப்பந்தங்களை மேற்கொண்டு, வரும் கோடை காலத்தில் மக்களை காக்க அரசு எடுத்த நடவடிக்கைகளை அறிய விரும்புகிறேன்.
ஏற்கனவே இரண்டு முறை மின்கட்டணம் கடுமையாக உயர்த்தியதுடன், மின்சார நிலைக் கட்டணம், பீக் ஹவர் கட்டணம், சோலார் தகடுகள் பொருத்தி அதன்மூலம் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் என்று அனைத்துக் கட்டணங்களையும் உயர்த்தியதால்,தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகள், நூல் மில்கள், காட்டன் மில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இந்தத் தொழிலே முடங்கி உள்ளன.
தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு அடுத்து அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் நெசவுத் தொழிலின் இன்றைய நிலை என்ன? மாநில அரசின் அதிகமான மின்கட்டண உயர்வால் லட்சக்கணக்கான விசைத்தறிகள் இயங்க முடியாமல் மூடிக்கிடக்கின்றன. இத்தொழிலை நம்பியுள்ள நெசவாளர்கள் மாற்று தொழிலுக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இக்கட்டான இந்த காலக்கட்டத்தில் சிறு குறு தொழில்களுக்கும், விசைத்தறிகளுக்குமான மின் கட்டண உயர்வை கணிசமாக குறைப்பதோடு,உயர்த்தப்பட்ட நிலைக் கட்டணம், பீக் ஹவர் கட்டணம் மற்றும் சோலார் பேனல்கள் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கு விதித்த கட்டணத்தை ரத்து செய்தால்தான் இந்தத் தொழில்கள் புத்துயிர் பெற்று அதைச் சார்ந்த சுமார் லட்சக்கணக்கான மக்கள் புது வாழ்வை பெறமுடியும்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசு மற்றும் வேட்டி சேலை ஆகியவை அனைத்து பயனாளிகளும் பெறும் வரை தொடர்ந்து வழங்கப்படும். ஜெயலலிதா ஆட்சியிலும், தொடர்ந்து எனது தலைமையிலான அரசிலும், பொங்கல் பரிசு மற்றும் விலையில்லா வேட்டி மற்றும் சேலை அனைத்து பயனாளிகளும் பெற்றுக்கொள்ளும் வரை தொடர்ந்து வழங்கப்பட்டது. ஆனால் திமுக அரசு இந்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி முதல் 14-ஆம் தேதிவரை, 5 நாட்கள் மட்டுமே நேரடியாக பொங்கல் பரிசு மற்றும் விலையில்லா வேட்டி மற்றும் சேலை வழங்கியது.
பொங்கல் பண்டிகைக்காக முன்னரே சொந்த ஊர்களுக்குச் சென்றவர்களும், கூட்டம் குறைந்தவுடன் பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று எதிர்பார்த்தவர்கள், 18.1.2024 அன்று நியாய விலைக் கடைகளுக்குச் சென்று பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பை வழங்குமாறு கேட்டபோது, ஜனவரி 14-ஆம் தேதியோடு பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பை நிறுத்தச் சொல்லி அரசு உத்தரவிட்டதாவும், மேலும் வழங்கப்படாத மீதுமுள்ள இருந்த பொங்கல் பரிசுப் பணத்தை அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டதாகவும் நியாய விலைக் கடை ஊழியர்கள் தெரிவித்ததையடுத்து இந்த ஆண்டு பொங்கல் பரிசு வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
எனவே உடனடியாக பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பை வாங்காத பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்துகிறேன். இந்த அரசு பதவியேற்றதிலிருந்து பல குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் எத்தனைக் குழுக்கள் அறிக்கை அளித்துள்ளன. அந்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடுமா இந்த அரசு.
இந்த அரசு பதவியேற்றதிலிருந்து ஏதேனும் ஒரு பிரச்சனை ஏற்பட்டால், அதற்கு தீர்வு காண்பதற்கு பதிலாக அதைப் பற்றி ஆய்வு செய்ய குழு அமைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அப்படி அமைக்கப்பட்ட குழுக்களின் எண்ணிக்கை எவ்வளவு? அந்த குழுக்கள் அளித்த அறிக்கைகள் மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன ? இன்னும் அறிக்கை அளிக்காத குழுக்கள் எவ்வளவு ? இதை பற்றி விவரமாக ஒரு வெள்ளை அறிக்கையை இந்த அரசு வெளியிட கேட்டுக்கொள்கிறேன்.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 2005-2006ல் மொத்த கடன் அளவு ரூ.45,000 கோடியாக இருந்தது. இது திமுக ஆட்சியில், 2010-11ல் மொத்த கடன் அளவு ஒரு லட்சம் கோடியாக உயர்ந்தது. மார்ச் இறுதியில் 2021 அன்று மொத்த கடன் அளவு 5.18 லட்சம் கோடியாக உயர்ந்தது. (இதற்கு காரணம் 2020ம் ஆண்டு ஜனவரி முதல் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வரை கொரோனா நோய் தொற்று வருவாய் இழப்பு சுமார் 50 ஆயிரம் கோடி. மேலும் மின் வாரியத்தின் (உதய் திட்டம்) 22,000/- கோடி கடனை அரசு ஏற்றது
திமுக ஆட்சியில் இரண்டு ஆண்டுகள் வாங்கிய கடன் அளவு: 2021-2022 ரூ. 84,747 கோடி (திமுக ஆட்சி)
2022-2023 ரூ.5. 72,864 கோடி (திமுக ஆட்சி), திமுக ஆட்சியில் 2023-24ல் கடன் வாங்க உத்தேசம், 2023-2024 ல் ரூ.90,119 கோடி (திமுக ஆட்சி) ஆக திமுக அரசு மூன்று ஆண்டுகளில் கடன்அளவு 2,47,730 கோடி ஆகும். அதாவது 2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் வாங்கிய உண்மையான கடன்: 5.18 லட்சம் - 1 லட்சம் = 4.18 லட்சம் கோடி..
கொரோனா காலம் - அரசின் வருவாய் ஒரு வருடம் இல்லை. ஆனால் செலவினம் அதிகம். எனினும் கடன் அளவு கட்டுக்குள் இருந்தது. திமுக 3 ஆண்டுகளில் வாங்கிய கடன் 2,47,730 கோடி ஆகும். ஆனால் நிதிநிலை அறிக்கையில் மொத்த கடன் அளவு 7,26,028 கோடி என்று உள்ளது. அதாவது சுமார் 20 ஆயிரம் கோடி குறைவாக காணப்படுகிறது என்றும் பேசினார் எடப்பாடி பழனிச்சாமி.
இன்றைய தினம் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, சட்டசபையில் முதல்வர் அளித்த பதிலுரையில் திருப்தி இல்லை என்று கூறினார். கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில் புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்பட வில்லை. தேர்தல் வாக்குறுதிகள் 10 சதவிகிதம் கூட நிறைவேற்றாத நிலையில் 90 சதவிகித தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றியதாக கூறியது பச்சை பொய் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications