Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாயும் எதிர்க்கட்சிகள்.. உண்மையில் எவ்வளவு செலவு? பொதுவெளியில் வெளியிட தயார்.. முதல்வர் அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்காக செலவழிக்கப்பட்ட நிதி குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், வெள்ள தடுப்பு திட்டங்களுக்கான செலவினங்கள் குறித்து விரிவான தகவலை வெளியிடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் எப்போது கனமழை பெய்தாலும் ஏற்படும் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, சென்னை வெள்ள இடர் தணிப்பு மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் நியமிக்கப்பட்டார். திருப்புகழ் குழு கடந்த மார்ச் மாதம் சென்னை பெருநகர மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அரசிடம் அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வந்தன.

DMK government plan to release details about expenditure of flood prevent projects in chennai

இந்நிலையில் சமீபத்தில் மிக்ஜாம் புயலால் சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் தேங்கியது. புயல், மழை பாதிப்பில் இருந்து மக்களை காக்க, தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும், பல இடங்களில் மழைநீர் தேங்கி இருந்தது. மழைநீரும், கழிவுநீரும் சூழ்ந்த பகுதிகளில் உணவின்றி மக்கள் தவித்தனர். இதனால் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.

மேலும், சென்னையில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகளுக்கு எவ்வளவு செலவழிக்கப்பட்டது, எவ்வளவு நிறைவடைந்தது என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. 4,000 கோடி செலவு செய்ததாக கூறி திமுக அரசு முறைகேடு செய்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. திருப்புகழ் குழுவின் அறிக்கைப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழக அரசு கூறுவதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இந்த நிலையில் பிரபல ஆங்கில நாளேடு ஒன்றுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.

அந்த நேர்காணலில், முதலமைச்சர் ஸ்டாலினிடம், சென்னையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக திருப்புகழ் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி அளித்த அறிக்கையின் படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்கின்றனவே? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் பதில் அளிக்கையில், "இந்த விஷயத்தில் அரசை விமர்சித்து அறிக்கை விடும் எதிர்க்கட்சிகள் பேரிடர் களத்திலும் இல்லை, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகளிலும் ஈடுபடவில்லை. திருப்புகழ் கமிட்டி அளித்த அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பல திட்டங்களை ஏற்கெனவே செயல்படுத்தி உள்ளது. இப்போதும் செயல்படுத்தி வருகிறது. இன்னும் செயல்படுத்த உள்ளது.

திருப்புகழ் கமிட்டி அளித்த அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இந்த திட்டங்களின் தற்போதைய நிலை உள்ளிட்டவற்றைத் தொகுத்து விரைவில் பொதுவெளியில் அறிக்கையாக வெளியிடுவோம். என்னைப் பொறுத்தவரை, இந்த அரசு ஒரு நேர்மையான, வெளிப்படையான, ஒளிவுமறைவற்ற வகையில் செயல்படும் அரசு.

திமுக ஆட்சிக்கு வந்த இந்த இரண்டரை ஆண்டுகளில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள தடுப்பு நடவடிக்கைகள், அதற்கு ஏற்பட்ட செலவினம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், நாங்கள் வெகு விரைவில் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடுவோம்" எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+