Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநர் ரவிக்கு “செக்”.. 2வது முறை அனுப்பினால் ஒப்புதல் தரணுமே.. கிடுக்கிப்பிடி போடும் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக அரசு சுப்ரீம் கோர்ட்டில் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நிலையில், 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் ரவி. இதையடுத்து, ஆளுநருக்கு கிடுக்கிப்பிடி போடும் வகையில் ஆக்‌ஷனில் இறங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

திருப்பி அனுப்பிய ஆளுநர்: தமிழக அரசு, சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 10க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் மீண்டும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு இருக்கின்றன. தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்த நிலையில் மீண்டும் சட்ட மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

DMK Government put checkmate to Governor RN Ravi on bills issue

ஆளுநரை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது மிகவும் கவலைக்குரியது என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் கூறியது. இந்த நிலையில் தமிழக ஆளுநர் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பு சட்டசபை கூட்டம்: இதையடுத்து ஆளுநர் விளக்கம் கேட்டு அனுப்பிய சட்ட மசோதாக்களை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. வரும் சனிக்கிழமை அன்று சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடத்தி, ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார். சபாநாயகர் அப்பாவு, வரும் சனிக்கிழமை சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

திமுக அரசுக்கும் தமிழக ஆளுநருக்கும் இடையே நீண்ட நாட்களாக பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. ஆளுநரின் செயல்பாடுகள் மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுவதாகத் தமிழக அரசு தொடர்ந்து கூறி வந்த நிலையில், ஆளுநரின் செயல்பாடுகள் இந்த குற்றச்சாட்டை வலுப்படுத்துவதாக அமைந்து வருகின்றன.

மீண்டும் நிறைவேற்றி அனுப்ப முடிவு: ஏற்கனவே தமிழக அரசால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் மீண்டும் தமிழக அரசுக்குத் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் உடனடியாக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது. நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றியது போலவே தற்போது ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள மசோதாக்களையும் நிறைவேற்றத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த நவம்பர் 10ஆம் தேஹி ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையின்போது தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு பல்வேறு முக்கிய கருத்துகளைத் தெரிவித்தது. அதில், அரசியல் சாசனம் 200-வது பிரிவின்படி சட்டசபையில் நிறைவேற்றிய அனுப்பிய மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காத நிலையில் மறுபரிசீலனைக்காக கூடிய விரைவில் ஆளுநர் சட்டசபைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் அனுப்பினால்: அப்படி திருப்பி அனுப்பப்படும் மசோதாக்களை சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால் அதற்கு தாமதம் இல்லாமல் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற கருத்தை தொடர்ந்து, ஆளுநர் மசோதாக்களை மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்பியுள்ளார். அதேசமயம், மீண்டும் அந்த மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப திமுக அரசு தயாராகி வருகிறது. மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் தாமதம் செய்யாமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருப்பதால், ஆளுநருக்கு நெருக்கடி உருவாகியுள்ளது.

கிடுக்கிப்பிடி: உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசு தொடர்ந்த வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்குள் மீண்டும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால், உச்ச நீதிமன்ற வழக்கிலும் ஆளுநருக்கு நெருக்கடி ஏற்படும், எனவே, மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதைத் தவிர வேறு வழியே இல்லை என தமிழக அரசு கணக்குப் போட்டுத்தான், உடனடியாக சிறப்பு சட்டசபை கூட்டத்தைக் கூட்ட திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+