எங்களுக்கு B டீமா..? “மண் குதிரை” ஓபிஎஸ்.. கடுமையாக விமர்சித்த திமுக! ஆஹா.. மொத்தமும் போச்சே!
ஓ.பன்னீர்செல்வத்திற்கு திமுக ஆதரவு கொடுத்து வருவதாக ஈபிஎஸ் தரப்பு விமர்சிக்கும் நிலையில் திமுகவும் ஓபிஎஸ்ஸை விமர்சித்துள்ளது.
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் திமுகவின் பி டீம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் விமர்சித்து வரும் நிலையில் ஓபிஎஸ் ஒரு மண் குதிரை என்ற திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது.
அதிமுகவில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராகப் பேசி வரும் எடப்பாடி அணியினர், ஓபிஎஸ்ஸுக்கு பின்னணியில் திமுகவின் கை இருப்பதாக விமர்சித்து வருகின்றனர்.
திமுக அரசை கடுமையான சொற்களில் ஓபிஎஸ் விமர்சிக்காததற்கும் அதுதான் காரணம் எனக் கூறி வருகின்றனர். மேலும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஓபிஎஸ்ஸுக்கே சபாநாயகர் ஒதுக்கியதையும் விமர்சித்தனர்.

அட்டாக் செய்த ஈபிஎஸ் தரப்பு
அதிமுகவில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் மோதல் வெடித்த நிலையில், ஓபிஎஸ் திமுகவோடு மறைமுக கூட்டு வைத்து அதிமுகவுக்கு துரோகம் செய்து வருவதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றனர். சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியை பற்றி ஓபிஎஸ் புகழ்ந்த பேசியதைச் சுட்டிக்காட்டி, ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்தனர். தீய சக்தி என்று ஜெயலலிதா தன் வாழ்நாளெல்லாம் விமர்சித்த தலைவரை ஓபிஎஸ் எப்படி பாராட்டலாம் என கண்டித்தனர்.

திமுகவின் பி டீம்
மேலும், தேனி நாடாளுமன்ற உறுப்பினரும் ஓபிஎஸ் மகனுமான ஓபி ரவீந்திரநாத் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசியதோடு திமுக ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று தெரிவித்தது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு அவல் கிடைத்தது போல அமைந்தது. திமுகவுடன் ஓபிஎஸ் மறைமுக கூட்டு வைத்திருப்பதற்கு இதுவே சான்று என ஈபிஎஸ் தரப்பினர் விமர்சித்தனர். உச்சமாக, ஓபிஎஸ் திமுகவின் பி டீம் என்று எடப்பாடி பழனிசாமியே கூட்டங்களில் பேசி வந்தார். ஓ.பன்னீர்செல்வமும் திமுகவை ஈபிஎஸ் போல கடுமையாக விமர்சிக்காமலேயே இருந்து வந்தார்.

எட்டப்பர்கள்
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கில், உச்ச நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தது. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வந்த நிலையில், திமுகவின் பி டீமாக இருந்து செயல்பட்ட எட்டப்பர்களின் முகத்திரை கிழிந்தது என்று மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார் எடப்பாடி பழனிசாமி. அந்தளவுக்கு திமுக ஓபிஎஸ்ஸின் பின்னணியில் இருப்பதாக தொடர்ச்சியாக ஈபிஎஸ் தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விளாசிய நிலையில், ஓபிஎஸ்ஸையும் சாடினார். "பாஜக என்பது ஆடியோ, வீடியோவை வைத்து மிரட்டுகின்ற கட்சி, பாஜக என்பது கவர்னர் டிரெயினிங் சென்டர். ஓ.பன்னீர்செல்வம் கவர்னராக விரைவில் அறிவிக்கப்படலாம், அவருக்கு வாழ்த்துகள். எடப்பாடி பழனிசாமி பாஜக தலைவராகிவிடுவார்" எனப் பேசினார்.

கவர்னர் பதவி
இந்நிலையில், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியும், ஓ.பன்னீர்செல்வத்தை அட்டாக் செய்துள்ளது. முரசொலி நாளேட்டில், பட்டிக்காடும் பட்டணமும் என்கிற தலைப்பில் ஒரு பத்தி வெளியாகியுள்ளது. அதில், ஒரு நாளேட்டில் வெளியான கார்ட்டூன் பற்றி இருவர் பேசும் வகையில் உள்ளது. "அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஓபிஎஸ் கவர்னராக பதவி ஏற்பார் என்று சொல்லிவிட்டார். அதனால் பி டீம் எனது குற்றம் சாட்டப்பட்டவருக்கு பரிந்துரை செய்கிறார் என்று அந்த கார்ட்டூனில் குறிப்பிட்டுள்ளனர். மத்திய பாஜக ஆட்சியில் கைவிடப்பட்டவர்களுக்கும் பரிந்துரை உள்ளவர்களுக்கும் கவர்னர் பதவி என்பது சூசகமாக பிடித்துக் காட்டி இருக்கிறார் உதயநிதி.

ஓபிஎஸ் ஒரு மண் குதிரை
ஓபிஎஸ் தனது மகனை அன்றி வேறு யாருக்கு சாதகமாக அரசியல் செய்கிறார் என்பது அவருக்கே தெரியாது. அவர் யாருக்கு வேண்டுமானாலும் பி டீமாக இருந்து விட்டுப் போகட்டும். நிச்சயமாக திமுகவுக்கு இல்லை. காரணம், திமுக எதைச் செய்தாலும் அனைவருக்கும் தெரிய வெளிப்படையாகத் தான் செய்யும் என்பதை தமிழர்கள் அறிவார்கள். மேலும் ஓபிஎஸ் ஒரு மண் குதிரை என்று எல்லோரும் அறிந்து வைத்திருப்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லையே என்பது சோகம் தானே?" என கிண்டல் செய்துள்ளது முரசொலி.
-
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications