கருணாநிதி நினைவு தினம்.. பிரம்மாண்டமாக நடக்கும் "கலைஞர் மாரத்தான்".. பரிசுத் தொகை அறிவிப்பு!
சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திமுக சார்பில் கலைஞர் நினைவு மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினம் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. அந்த நாளில் அவரது நினைவை போற்றும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்து வருகிறது.

மாரத்தான் போட்டி
இந்த நிலையில் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி திமுக சார்பாக கலைஞர் மாரத்தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மெய்நிகர் வடிவில் நடத்தப்பட்டு வந்த இந்த மாரத்தான் போட்டி, இம்முறை நேரடியாக நடைபெற உள்ளது. இதற்காக பிரத்யேக தளமும் உருவாக்கப்பட்டுள்ளது.

4 பிரிவில் போட்டி
இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்க கலைஞர் மாரத்தான் தளத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும். பதிவுக் கட்டணமாக 42 கி.மீ. தொலைவு கொண்ட மாரத்தான் போட்டியில் பங்கேற்க ரூ.500ம், 21 கி.மீ. தொலைவு கொண்ட மாரத்தான் போட்டியில் பங்கேற்க ரூ.300ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் 10 கி.மீ. மராத்தான் மற்றும் 5 கி.மீ. மாரத்தான் போட்டிகளும் நடைபெறுகின்றன.
கலைஞர் நினைவு சர்வதேச மாரத்தான் 2022 ஆண்டில் சேகரிக்கப்படும் அனைத்து பதிவுக் கட்டணங்களும், வசதியற்ற குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்காகச் செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி எங்கு?
அதேபோல் முன்பதிவு செய்து மாரத்தான் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு டி ஷர்ட்டும், மாரத்தான் போட்டிக்கான உபகரணங்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கலைஞரின் நினைவிடத்தில் தொடங்கும் மாரத்தான் போட்டி பட்டிணப்பாக்கம், பெசண்ட் நகர் வழியாக மீண்டும் கலைஞர் நினைவிடத்தில் முடியும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

பரிசுத் தொகை அறிவிப்பு
அதேபோல் 42 கி.மீ. தொலைவு கொண்ட மாரத்தான் போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சமும், இரண்டாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே பரிசுத்தொகை 21 கி.மீ. தொலைவு மாரத்தான் போட்டியில் பங்கேற்பவர்களுக்கும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் 10 கி.மீ. மாரத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்கள் பிடித்து வெற்றிபெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.15 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 5 கி.மீ. மாரத்தான் போட்டியில் வெற்றிபெறுவோருக்கு ரூ. 25 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications