நாதக இல்லையென்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது.. மு.க.ஸ்டாலின் முதல்வராக நான்தான் காரணம்.. சீமான்!
திமுக ஆட்சியமைக்க நாம் தமிழர் கட்சியே காரணம் என்று சீமான் கூறியுள்ளார்.
சென்னை: நாம் தமிழர் கட்சி இல்லையென்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது என்று சீமான் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பதற்கு நான் தான் காரணம் என்று கூறிய சீமான், அரசியலில் நான் தான் ராஜா, நாங்கள் தான் நம்பர் ஒன் என்று கூறியுள்ளார்.
சென்னை கேகே நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் தமிழ்ப் பழங்குடிகள் பாதுகாப்பு பாசறை தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார்.
இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து சீமான் கூறுகையில், முன்னதாகவே இந்த பாசறை கூட்டங்களை தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் தொடங்கி இருக்கிறோம் .

சீமான் பேட்டி
பிற மொழியாளர்களுக்கு இருக்கும் அரசியல் பாதுகாப்பு, அங்கீகாரம் கூட ஆதி தமிழ் குடிகளான வண்ணார், குயவர், தச்சர் போன்ற சமூகங்களுக்கு இல்லை. நாங்கள் வந்த பின்னர் தான் தேடித்தேடி அவர்களை தேர்தலில் நிற்க வைக்க வாய்ப்பு அளித்தோம். இவர்கள் சாதி சான்றிதழ் வாங்குவதற்கு கூட போராட வேண்டிய நிலை இருக்கிறது என்று தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சி போராட்டம்
தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் போராட்டம் பற்றிய கேள்விக்கு, திமுக அரசு காங்கிரஸ் கட்சிக்கு பயந்து கொண்டு முருகன், சாந்தன் உள்ளிட்ட நான்கு பேரை சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க தயங்குகிறது. 35 ஆண்டு கால போராட்டம் சிறையில் இருந்து சிறப்பு முகாம் என்ற சித்திரவதை குறித்து அடைப்பதற்காக அல்ல . சிறப்பு முகாமில் வைப்பதற்கு பதிலாக சிறையில் வைத்து விடுங்கள். அங்கே அவர்களுக்கு சகல வசதிகளும் இருக்கிறது. இந்த நாலு பேர் சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க கோரி வரும் 23ஆம் தேதி போராட்டம் நடைபெற இருக்கிறது என்று தெரிவித்தார்.

ஆன்லைன் சூதாட்ட மசோதா
பின்னர், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா பற்றிய கேள்விக்கு, ஆன்லைன் சூதாட்ட தடை செய்ய அரசுக்கு என்ன திறன் உள்ளது? அரசு சட்டம் இயற்றினால் மட்டும் போதாது. அதனை செயலாக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார். அதேபோல், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதில் இங்கு பிரச்சனை இல்லை. அன்னை தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும். அதுதான் முக்கியம் என்று தெரிவித்தார்.

திமுக ஆட்சிக்கு நாங்கள் தான் காரணம்
தொடர்ந்து, பாஜகவின் பி டீமான செயல்பட்டு திமுகவின் வாக்குகளை பிரிப்பதாக எழும் குற்றச்சாட்டு பற்றிய கேள்விக்கு, நான் வாக்குகளை பிரிக்க வந்த ஆள் இல்லை. நாட்டை பிடிக்க வந்த ஆள். நான் இல்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது. இன்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பதற்கு காரணம் நான் தான். அதற்காக நான் திமுகவின் பீ டீம் ஆகிவிடுவேனா? அரசியலில் நான் தான் ராஜா. நாங்கள் தான் நம்பர் ஒன் என்று தெரிவித்தார்.
-
ஒரு சதுர அடி வெறும் ரூ.4.5.. மொத்தம் 25 ஏக்கர்! சீமான் தன் மனைவிக்கு வாங்கிய சொத்து! இடிக்குதே! -
யாருக்கு ஓட்டு போட போறீங்க! வாரிசு அரசியலுக்கா? சீமான் சட்டசபைக்கு போகனும்! சீனுக்குள் வந்த சேரன்! -
Thirumavalavan: சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை திருமாவளவன் ஏற்பாரா? சீமான் கேள்வி -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
Land Rover Defender கான்வாயில் வரும் ஸ்டாலின் பெயரில் ஒரு வாகனம் கூட இல்லை! சீமான் சொத்து எவ்வளவு? -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
முதல்வர் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை.. கூலாக அமர்ந்திருந்த ஸ்டாலின்! பைபாஸில் பரபரப்பு












Click it and Unblock the Notifications