இறங்கி வந்துட்டாரே ஸ்டாலின்.. தென் மாவட்டங்களில் குறைந்த இடங்களில் போட்டியிடும் திமுக! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் திமுக கட்சி தென் மாவட்டங்களில் குறைவான இடங்களில் போட்டி போடும் சூழல் ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி கட்சிகளே போட்டியிடும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது. 2024 மக்களவைத் தேர்தல்: திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு விவரம்.

DMK is contesting very less seats South Tamil Nadu in Lok Sabha elections 2024

திமுக - 21
காங்கிரஸ் - 9 + புதுச்சேரி
விசிக - 2 (சிதம்பரம், விழுப்புரம்)
சிபிஐ - 2
சிபிஎம் - 2
மதிமுக -1
இயூமுலீ - 1 (ராமநாதபுரம்)
கொமதேக - 1 (நாமக்கல்)

கடந்த வாரம் காங்கிரஸ் உடன் திமுக உடன்படிக்கையை மேற்கொண்டது. அதற்கு முன் மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் இப்போதுதான் கையெழுத்து ஆனது.

அதேபோல் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை மற்றும் திருப்பூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் சிபிஎம் கட்சி போட்டி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து போட்டியிடுகிறது.

மதிமுக கூட்டணி: இது போக திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது . லோக்சபா தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்று வைகோ அறிவித்துள்ளார். ஆனால் ராஜ்யசபா சீட் பற்றி பின்னர் பேசி முடிவெடுக்கப்படும் என்று வைகோ அறிவித்துள்ளார்.

ஏற்கனவே திமுக 2 தொகுதிகளின் பங்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மீண்டும் ராமநாதபுரத்தில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் கட்சி சார்பாக மீண்டும் ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த தொகுதி எம்பியாக அந்த கட்சியின் ஏகேபி சின்ராஜ் உள்ளார். ஆனால் புதுமுகத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று உங்கள் கட்சியிலேயே முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எம்பி ஏகேபி சின்ராஜ் வரும் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என கூறியுள்ளார். அதனால் புதுமுகம் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது போக மதிமுகவிற்கு வழங்கப்படும் தொகுதி குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறைவான தொகுதிகள்; 2024 லோக்சபா தேர்தலில் திமுக கட்சி தென் மாவட்டங்களில் குறைவான இடங்களில் போட்டி போடும் சூழல் ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி கட்சிகளே போட்டியிடும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

மதுரை, திண்டுக்கல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

ராமநாதபுரம் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

விருதுநகர் - காங்கிரஸ் அல்லது மதிமுக (மதிமுக திருச்சி செல்ல வாய்ப்பு அதிகம்)

தேனி, சிவகங்கை, கன்னியாகுமரி - காங்கிரஸ்

தென் மாவட்டங்களில் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மூன்றில் தான் உதயசூரியன் நிற்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. கடந்த முறை திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக இந்த முறை 3ல் மட்டுமே களமிறங்குகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+