நல்ல வெற்றிவாய்ப்பு உள்ள தொகுதிகளை கூட விட்டுத்தந்து.. பயங்கர ரிஸ்க் எடுக்கும் திமுக! கவனிச்சீங்களா?
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் திமுக நல்ல வெற்றிவாய்ப்பு உள்ள தொகுதிகளை கூட விட்டுக்கொடுத்து உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தனது கூட்டணியை இறுதி செய்துள்ளது. திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது என்று இங்கே பார்க்கலாம்.

லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டார். மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது.
இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது. 2024 மக்களவைத் தேர்தல்: திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு விவரம்.
திமுக - 21
காங்கிரஸ் - 9 + புதுச்சேரி
விசிக - 2 (சிதம்பரம், விழுப்புரம்)
சிபிஐ - 2
சிபிஎம் - 2
மதிமுக -1
இயூமுலீ - 1 (ராமநாதபுரம்)
கொமதேக - 1 (நாமக்கல்)
கடந்த வாரம் காங்கிரஸ் உடன் திமுக உடன்படிக்கையை மேற்கொண்டது. லோக்சபா தேர்தல்: காங். போட்டியிடும் 10 தொகுதிகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.
போட்டியிடும் தொகுதிகள் விவரம்:
திமுக - 21 ( வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்பத்தூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளகுறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பெரம்பூர், தஞ்சாவூர், தேனி , தூத்துக்குடி, தென்காசி, )
காங்கிரஸ் - 9 + புதுச்சேரி (தமிழ்நாட்டில் திருவள்ளூர், கடலூர், கிருஷ்ணகிரி, நெல்லை, சிவகங்கை, கரூர்,, கன்னியாகுமரி, விருதுநகர், மயிலாடுதுறையில் காங்கிரஸ் போட்டி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது)
விசிக - 2 (சிதம்பரம், விழுப்புரம்)
சிபிஐ - 2 (நாகை மற்றும் திருப்பூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது)
சிபிஎம் - 2 ( மதுரை, திண்டுக்கல்)
மதிமுக -1 (திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது)
இயூமுலீ - 1 (ராமநாதபுரம்)
கொமதேக - 1 (நாமக்கல்)
விட்டுக்கொடுக்கும் திமுக: 2024 லோக்சபா தேர்தலில் திமுக நல்ல வெற்றிவாய்ப்பு உள்ள தொகுதிகளை கூட விட்டுக்கொடுத்து உள்ளது. உதாரணமாக திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற திண்டுக்கல் தொகுதியை சிபிஎம் கட்சிக்கு விட்டுக்கொடுத்துள்ளது. திண்டுக்கல் லோக்சபா தொகுதி பாரம்பரியாக திராவிட கட்சிகளின் தொகுதி ஆகும். இங்கே திமுக, அதிமுக வென்றுள்ளது. காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கூட வென்றுள்ளது. ஆனால் சிபிஎம் வென்றது இல்லை.
ஆனால் இங்கே கம்யூனிச சித்தாந்த கொள்கை கொண்டவர்கள் அதிகம் உள்ளனர். தற்போது அங்கே எம்பியாக திமுக வேலுசாமி உள்ளார். இவர் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்தியாவில் அதிக வாக்கு வித்தியாசத்தில் கடந்த தேர்தலில் வென்றவர்களில் இவரும் ஒருவர். இதற்கு முன் அதிமுகவின் உதயகுமார் அங்கே எம்பியாக இருந்தார்.
அதற்கு முன் காங்கிரஸ், அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இங்கே எம்பி பதவிகளை வகித்து வந்தன. இந்த நிலையில் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் சிபிஎம் கட்சி போட்டி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் திண்டுக்கல் தொகுதியை திமுக சிபிஎம்க்கு கொடுத்தது உளவுத்துறை ரிப்போர்ட் அடிப்படையில் இருக்கலாம் என்கிறார்கள். சிபிஎம் இங்கே போட்டியிட விரும்பியதாலும், அங்கே சிபிஎம் வெற்றிக்கு திமுக உதவும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
ரிஸ்க்: இன்னொரு பக்கம் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது கூட்டணி கட்சியான சிபிஎம் இருக்கும் கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு சாதகமான தொகுதியான கோவையில் திமுக களமிறங்கும் ரிஸ்க்கை எடுத்துள்ளது.
கோவையில் பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி இல்லாத போதும் அங்கே திமுக நேரடியாக இறங்கும் முடிவை எடுத்துள்ளது. அதேபோல் காங்கிரஸ் தோல்வி அடைந்த தேனி தொகுதியை திமுக எடுத்துக்கொண்டு, திமுக வென்ற நெல்லை தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்துள்ளது. கூட்டணி கட்சிகளின் வெற்றியை மனதில் வைத்து திமுக இந்த முடிவுகளை எடுத்துள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications