சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நேருவை பார்த்து கேட்டாரு பாருங்க ஒரு கேள்வி.. "இருங்க.. தலைவர்கிட்டயே சொல்றேன்".. திகைத்த திருச்சி

திருச்சியில் கேஎன் நேரு பிரச்சாரம் மேற்கொண்டார்

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கை பற்றி ரொம்ப சீரியஸாக பேசி கொண்டிருந்தார் கேஎன் நேரு.. அப்போது, வாக்காளர் ஒருவர் கேட்ட கேள்வி அனைவரையும் வியக்க வைத்தது!

ஏப்ரல் 6-ம் தேதி நடக்க இருக்கிறது.. அதனால், தமிழக கட்சிகள் அனைத்தும் தீவிரமான பிரச்சாரத்தில் உள்ளன.. இந்த தேர்தலிலும் வழக்கம்போலவே, திமுகவும், அதிமுகவும் பலமாக மோத உள்ளன.

இரு கட்சிகளுக்குமே இது முக்கியமான தேர்தல்.. இரு கட்சிகளுமே தங்களது தேர்தல் அறிக்கைகளை போட்டி கொண்டு வெளியிட்டன.. இந்த அறிக்கையில் உள்ள ஸ்பெஷல் அம்சங்களை இரு கட்சி வேட்பாளர்களும், பிரமுகர்களும் அந்தந்த தொகுதிகளில் கொண்டு போய் சேர்த்து வருகிறார்கள்.

 குடும்ப தலைவி

குடும்ப தலைவி

அந்த வகையில், திமுகவின் தேர்தல் அறிக்கையில், "குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்" என்றும், அதேபோல, அதிமுக தேர்தல் அறிக்கையில், "குடும்பத் தலைவிக்கு மாதம் 1,500 ரூபாய் தரப்படும்" என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது குடும்ப பெண்களின் ஓட்டுக்களை மொத்தமாக அள்ளவே இப்படி ஒரு அறிவிப்பினை இரு கட்சிகளும் மாறி மாறி வெளியிட்டன.

 பிரச்சாரம்

பிரச்சாரம்

இந்நிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் ஶ்ரீரங்கம் தொகுதியில், திமுக வேட்பாளர்களை ஆதரித்து மூத்த தலைவரும், அக்கட்சியின் முதன்மைச் செயலாளருமான கேஎன் நேரு பிரச்சாரம் செய்து வருகிறார்.. அப்போது ஆண்டவர் கோவில் பகுதியில் பிரச்சாரம் செய்தபோது, திமுக ஆட்சி அமைத்ததும், அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும், தேர்தல் அறிக்கைகள் சிறப்பம்சங்கள் குறித்தும் லிஸ்ட் போட்டு பேசி கொண்டிருந்தார்.

 சிரிப்பலை

சிரிப்பலை

அப்போது, அங்கிருந்த நபர் ஒருவர் டக்கென மைக்கை வாங்கி, "ஐயா... தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய்ன்னு அறிவிச்சு இருக்கீங்க.. ஆனால், குடும்ப தலைவியை இழந்தவங்க நிறைய பேர் இருக்கோம்.. அவங்களுக்கு இருக்கா? இல்லையா?" என்றார்..

 தலைவர்

தலைவர்

இதை கேட்டதும் நேரு ஒரு நிமிஷம் ஆடிப்போய்விட்டார்.. இந்த கேள்வியை கொஞ்சமும் எதிர்பார்க்காத டக்கென சிரித்துவிட்டார்.. "இது ஒரு நல்ல கேள்வி.. கண்டிப்பா தலைவரிடம் சொல்றேன்" என்றார்.. இந்த கேள்வியை கேட்டதும் அங்கிருந்தோரின் சிரிப்பு சத்தமும் சிறிது நேரத்துக்கு கேட்டு கொண்டே இருந்தது.

English summary
DMK KN Nehru campaign in Trichy Constitution
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X