அதிகாரப் பகிர்வு குறித்து பேச மாணிக்கம் தாகூர் யார்? கொந்தளித்த டிகேஎஸ் இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிகாரப் பகிர்வு குறித்து பேசுவதற்கு எம்பி மாணிக்கம் தாகூர் யார் என திமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் எம்பியுமான டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து டிகேஎஸ் இளங்கோவன் கூறியிருப்பதாவது: மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் கட்சிக்கு கட்டுப்படவில்லை என்பதையே காட்டுகிறது. அவரது கட்சித் தலைமை, திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐவர் குழுவை நியமித்து அந்த குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

TKS Elangovan

அதிகார பகிர்வு உள்ளிட்டவை குறித்து காங்கிரஸ் கட்சியால் நியமிக்கப்பட்ட அந்த ஐவர் குழுவினர்தான் திமுக தலைமையுடன் பேச வேண்டும். ஆனால் ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்வதற்கு மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும் அல்ல, தேசிய தலைவரும் அல்ல.

ஒரு கருத்தை தனது தலைமையிடம் சொல்ல வேண்டுமே தவிர ,இப்படி வெளிப்படையாக சொல்லக் கூடாது. இப்படி வெளிப்படையாக கருத்து சொல்லி காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்திக் கொண்டிருப்பதை உணராமல் உள்ளார் மாணிக்கம் தாகூர்.

காங்கிரஸ் கட்சியில் ஆரம்பத்திலிருந்தே உள்ளே இருக்கும் நிர்வாகிகள்தான் பலவீனப்படுத்தி வருகிறார்கள் என்பதற்கு மாணிக்கம் தாகூர் பேச்சை ஒரு உதாரணமாக நான் பார்க்கிறேன். இவ்வாறு டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

கூட்டணியின்றி தமிழகத்தில் யாரும் வெல்ல முடியாது என்றும், அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: "யாருக்கு வாக்கு?" - IPDS தரவு சொல்லும் தகவல். தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை. ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது. இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன். ஆனால், கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது. அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல - அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே!" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் குரலாக எதிரொலிக்கிறார் என விமர்சித்த புதுகை அப்துல்லாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் சகோதரர் @pudugaiabdulla அவர்களுக்கு ... நான் காங்கிரஸ் காரன். நேற்று .. இன்று .. நாளை என சங்கிகளை எதிர்த்து பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் என் தலைவர் அவர்களின் தலைமையில் அஞ்சாமல் குரல் கொடுப்பது என் கடமை.

காங்கிரஸ் இயக்கத்தின் நிலைப்பாடு குறித்து பேசுவேன். இது எங்கள் இயக்கத்தின் பேச்சுவார்த்தைக் குழு தலைவர் கிரிஷ் சோடங்கர் அவர்கள் கூறிய கருத்து. இது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலை என குறிப்பிட்டு கிரிஷ் டோங்கரின் பேச்சு அடங்கிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் கிரிஷ், ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என கூறியிருக்கிறார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தேர்தல்களில் வியூகத்தை பயன்படுத்தி போட்டியிடுகிறோம். தமிழகத்தின் வளர்ச்சிக்காக தேர்தல் அறிக்கைகளை தயாரிக்க காங்கிரஸ் சார்பில் ஒரு குழு முழு வீச்சில் இயங்கி வருகிறது. இந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சியும் திமுக ஆட்சியில் பங்கு வகிக்க வேண்டும் என அவர் கூறியிருக்கிறார். தான் மட்டுமில்லை தமிழக தேர்தல் பொறுப்பாளர் கிரிஷும் ஆட்சியில் பங்கு என்றுதான் கூறியிருக்கிறார் என்பதை மாணிக்கம் தாகூர் சுட்டிக் காட்டியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+