Stalin is More Dangerous than Karunanidhi.. 2026 தேர்தல் ரேசில் No-1 திமுக! எதிர்கட்சிகளுக்கு பிரஷர்
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளை மற்ற கட்சிகளை விட மிக வேகமாக அதுவும் முதன்மையாவும் செய்து வருகிறது திமுக. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் பணிக்குழுவை ஆரம்பித்த நிலையில் தேர்தல் அறிக்கை குழு, பேச்சுவார்த்தை குழு என அனைத்து பணிகளிலும் முன்னணியில் இருக்கிறது. இந்த நிலையில் கட்சி முதல் வாரத்திலேயே தொகுதி பங்கீட்டு பட்டியலை வெளியிட்டு எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி தர காத்திருக்கிறது. அதற்கு அடுத்த சில நாட்களில் தொகுதி பட்டியலும் விரிவாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த தேர்தல்களை விட 2026 சட்டமன்ற தேர்தல் எந்த கட்சிக்கும் அவ்வளவு எளிதாக இருக்காது என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்து. காரணம் ஆட்சிக்கு எதிரான மனநிலை, அதிமுக பாஜக கூட்டணிக்கு எதிரான வாக்குகள் நாம் தமிழர், விஜய் ஃபேக்டர் என பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
இதுவரையிலான திமுக தேர்தல் வரலாற்றில் அடுத்தடுத்து இரண்டு தேர்தல்களில் வென்றதில்லை என்ற மோசமான சாதனையை தகர்க்க வேண்டும் என திட்டமிட்டு பணியாற்றி வருகிறார் திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலின்.

2026 சட்டமன்ற தேர்தல்
அதே நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு தேர்தல்களில் அதிமுக தோற்றதில்லை என்ற பெருமையை தக்க வைக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார. முதன்முறையாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ பதவியையாவது பெற்று பட வேண்டும் என துடியாய் துடிக்கிறார் சீமான். 'குறுக்க இந்த கௌசிக் வந்தா' என சினிமாவிலிருந்து அரசியலில் எண்ட்ரி கொடுத்திருக்கிறார் விஜய். இப்படி பலமுன்னை போட்டி தமிழக அரசியல் களத்தில் நிலவும் நிலையில் தேர்தல் ரேசில் முன்னணியில் யார் இருக்கிறார்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
அதிமுக பாஜக கூட்டணி
அதற்கான ஒரே பதில் திமுக தான். அதிமுக பாஜக கூட்டணி கடந்த மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், பத்தாண்டுகளாக கூட்டணியை உறுதியோடு வழிநடத்திச் செல்கிறது திமுக,.. 2 ஆண்டுகளுக்கு முன்பே கே என் நேரு, உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தேர்தல் பணிக்குழுவை ஆரம்பித்து பூத் கமிட்டி மாநாடுகளை பிரம்மாண்டமாக நடத்தி வருகிறது. மேலும் திமுக சார்பில் பேச்சுவார்த்தை குழுவை ஆரம்பித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தையை துவக்கி விட்டது.
கூட்டணி பேச்சுவார்த்தை
முஸ்லிம் லீக், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்து இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுடன் அடுத்தடுத்து பேச்சு வார்த்தைகள் நடக்க இருக்கிறது இந்த நிலையில் காங்கிரசுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கும் நிலையில், அந்த கட்சி உடனான தொகுதி பங்கீடு நிறைவுக்கு வரலாம் என சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க மார்ச் முதல் வாரத்தில் தொகுதி பங்கிட்டு பட்டியலை வெளியிட தீவிரம் காட்டி வருகிறது திமுக தலைமை
மு.க ஸ்டாலின் அரசியல்
ஏற்கனவே உலாவும் தகவல்களின்படி 170 தொகுதிகள் வரை திமுக போட்டியிடலாம். 25 தொகுதிகள் காங்கிரஸ்க்கும் ஆறு முதல் எட்டு தொகுதிகள் கூற கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட இருக்கிறது. சிறிய கட்சிகளுக்கு மூன்று முதல் இரண்டு தொகுதிகளும் அமைப்புகளின் தலைவர்களுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்படலாம். இதில் சிலர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.
திமுக தேர்தல் திட்டம்
மார்ச் முதல் வாரத்தில் தொகுதி பங்கீட்டு பட்டியலை வெளியிட்டு இரண்டாவது வாரத்தில் முழுமையான தொகுதி விவரங்களையும் அறிவிக்கும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது திமுக. மற்ற கட்சிகள் இன்னும் கூட்டணியையே இறுதி செய்யாத நிலையில் தொகுதி பங்கிட்டை முடித்து தேர்தல் ரேசில் முன்னணியில் இருப்பதை உறுதி செய்ய உத்தரப்பட்டுள்ளார் ஸ்டாலின் என்கின்றனர் திமுக உடன் பிறப்புகள்.












Click it and Unblock the Notifications