இடஒதுக்கீடு! அண்ணாமலையை ஐபிஎஸ் ஆக்கியது திராவிடம்! மீண்டும் "ஆடாக" மாற்றியது பாஜக! சிவசேனாபதி சுளீர்
சென்னை: அண்ணாமலை ஐபிஎஸ் ஆக காரணமாக இருந்தது திராவிடம் ஆனால் அவரை பாஜக மீண்டும் ஆடாக மாற்றிவிட்டது என்று திமுக சுற்றுசூழல் துறை செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு வேண்டும் என்று தீவிரமாக போராடியவர்களில் ஒருவர் கார்த்திகேய சிவசேனாபதி. காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மையத் தலைவராக உள்ளார்.
திமுகவில் இணைந்து செயல்பட்டு வரும் இவர் திமுகவின் திமுக சுற்றுசூழல் துறை செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். கொங்கு மண்டலத்தில் திமுகவை பலப்படுத்தும் நோக்கத்தில் இவர் செயல்பட்டு வருகிறார்.

அண்ணாமலை
கொங்கு மண்டலத்தில் கால் பதிக்க பாஜக தீவிரமாக முயன்று வரும் நிலையில் கார்த்திகேய சிவசேனாபதி, செந்தில் பாலாஜி ஆகியோர் திமுகவை வலுப்படுத்தி வருகிறார்கள். இதன் காரணமாக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், கார்த்திகேய சிவசேனாபதிக்கும் அவ்வப்போது வார்த்தை போர் மூள்வது வழக்கம். அண்ணாமலையின் அரசியல் நிலைப்பாடுகளை கார்த்திகேய சிவசேனாபதி பல முறை விமர்சனம் செய்துள்ளார். இந்த நிலையில்தான் அண்ணாமலையின் கல்வி குறித்தும் கார்த்திகேய சிவசேனாபதி கருத்து தெரிவித்துள்ளார்.

கார்த்திகேய சிவசேனாபதி
கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்த கருத்தில், மிஸ்டர் அண்ணாமலை பெரிய கல்வி நிறுவனத்தில் பொறியியல் படிக்க கருணாநிதியும், திமுகவும்தான் காரணம். அண்ணாமலையின் பிரிவிற்கு 1974ல் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் அங்கீகாரம் வழங்கியது நாங்கள்தான். இதன் மூலமே அவருக்கு கல்வியில் முன்னுரிமை வழங்கப்பட்டது. மண்டல் கமிஷன் வழங்கிய இடஒதுக்கீடு மூலம்தான் மிஸ்டர் அண்ணாமலைக்கு ஐஐஎம் எல்லில் வாய்ப்பு கிடைத்தது.

மேல் படிப்பு
மேல் படிப்புகளில் மண்டல் கமிஷன் பரிந்துரை செய்த இடஒதுக்கீடே இதற்கு காரணம். அதை வழங்கியது மண்டல் கமிஷன். அவர் யுபிஎஸ்சி தேர்வில் கொங்கு வேளாளர் பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்கான இடஒதுக்கீட்டை பயன்படுத்தி உள்ளார். அதன் மூலம்தான் அவர் ஐபிஎஸ் ஆனார். மீண்டும் சொல்கிறேன் இதை வழங்கியதும் கருணாநிதியும், திமுகதான் காரணம்.

விவசாய பின்பும்
ஒரு விவசாய பின்புலத்தை சேர்ந்த வேளாண் குடும்ப இளைஞரை ஐபிஎஸ் ஆக்க உதவியது திராவிட கொள்கைதான். திராவிட கொள்கை அவரை ஐபிஎஸ் ஆக்கியது. ஆனால் அவர் இருக்கும் பாஜக செய்தது என்ன?அவரை மீண்டும் ஒரு ஆடாக பாஜக? நமக்கு எது தேவை என்று சொல்லுங்கள்? என்று கார்த்திகேய சிவசேனாபதி கேள்வி எழுப்பி உள்ளார்.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications