"காசு நீங்க ஏன் கொடுத்தீங்க?".. எடப்பாடி பழனிசாமியை நறுக்கென கேட்ட தங்கம் தென்னரசு.. நச் பதிலடி..!
எடப்பாடி பழனிசாமிக்கு தங்கம் தென்னரசு பதிலடி தந்துள்ளார்
சென்னை: குட்கா போன்ற பொருட்கள் பிரபலமானதற்கு அதிமுகவே காரணம்.. அம்மா மினி கிளினிக் கட்டிடங்களுக்கு கூட அதிமுக வாடகை செலுத்தவில்லை.. அதிமுக ஆட்சியில் முறைகேடாக நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது.. அரசியில் காழ்ப்புணர்ச்சி இல்லை என்பதற்கு அம்மா உணவகங்கள் இன்னும் செயல்படுவதே உதாரணம் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி தந்துள்ளார்.
திமுக அரசை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்...
இதையடுத்து, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது, ஆளும் திமுக அரசை கண்டித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

திமுக ஆட்சி
குறிப்பாக, "கடந்த 8 மாத கால திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது... கொலை கொள்ளை திருட்டு கற்பழிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.. .திமுக ஆட்சியில் பெண்களுக்கும் பொது மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.. பொங்கலுக்கு ரூ.2500 கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது ஆனால் திமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக பணம் ஏதும் வழங்கப்படவில்லை.. ஏழை எளிய மக்கள் அந்தந்த பகுதிகளிலேயே பயன்பெறும் வகையில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டது. ஆனால் திமுக அரசு அது அம்மா பெயரில் செயல்படுவதால் காழ் புணர்ச்சி கொண்டு அதனை மூடி உள்ளது" என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.

தங்கம் தென்னரசு
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் புகார்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்தார்.. செய்தியாளர்களிடம் பேசிய தங்கம் தென்னரசு, "பொங்கலுக்கு நாங்க பணம் தரவில்லை என்று சொல்கிறார்களே... நீங்க எதுக்கு பொங்கலுக்கு பணம் தந்தீங்க? ஆட்சியில் 5 வருஷமா இருந்தீங்களே, அப்போ அப்போ ஏன் பணம் தரல? தேர்தல் வரப்போகுது என்பதால், நீங்க பணம் தந்தீங்க..

கொரோனா நிவாரணம்
ஆனால் இந்த ஆட்சி அப்படி இல்லை.. சொன்னதை நிறைவேற்றி இருக்கிறோம்.. ஆட்சி பொறுப்புக்கு வந்தால் கொரோனா நிவாரணம் வழங்குவதாக சொன்னோம்.. சொன்னபடியே 4 ஆயிரம் நிவாரணத்தொகையை முழுமையாக வழங்கி இருக்கிறோம். சொன்னதை செய்திருக்கிறோம்.. இப்போதுகூட பொங்கல் பரிசாக 19 பொருட்களை தரமாக தந்திருக்கிறோம்.. கரும்பும் சேர்த்தே வழங்கக்கூடிய ஆட்சியாக இது இல்லை.. இதெல்லாம் பொறுத்து கொள்ள அவங்களால முடியல..

நர்ஸ்கள்
அம்மா மினி கிளினிக் பற்றி சொல்றாங்க.. இந்த ஆட்சி காழ்ப்புணர்ச்சிக்கான ஆட்சி இல்லை. அம்மா மினி கிளினிக்கை ஆரம்பித்து வைத்து, டாக்டர்ரையும், நர்ஸையும் நீங்க நியமிக்கவே இல்லை.. பெயருக்கு திட்டத்தை ஆரம்பித்துவிட்டு, அந்த கட்டடங்களுக்கு வாடகையும் தராமல் போய்ட்டீங்க.. அங்கே நர்சும் இல்லாத, டாக்டரும் இல்லாத காரணத்துக்காகத்தான், அதேசமயம் அங்குள்ள மருத்துவ கட்டமைப்புகளை சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டி உள்ளது.

கிளீனிக்
அரசியல் காரணங்களுக்காக அம்மா கிளினீக்கை மூடவில்லை.. அப்படியென்றால் அம்மா உணவகத்தை மூடவில்லையே.. இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?நகைக்கடன் தரவில்லை என்று அடுத்த புகார் வருகிறது.. கடந்த ஆட்சியில் யாருக்கெல்லாம் நகைக்கடன் தந்தார்கள் என்று கணக்கெடுத்து பார்த்தால், திருவண்ணாமலையில் ஒரே ஒருத்தர் மட்டும் ஒன்றரை கோடி கோடிக்கு மேல் கடன் வாங்கியிருக்கிறாரு.. இந்த மோசடிக்கு துணை போனது யார்?

முறைகேடுகள்
யார் ஆட்சியில் நடந்தது? அந்த முறைகேடுகளைதான் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.. இதையடுத்து, உண்மையான, தகுதியான, சரியான நபர்களுக்கு அந்த நகைக்கடனை வழங்க இருப்பதாக மாண்புமிகு கூட்டுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.. முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகளை இந்த நாடும் ஏடும் பாராட்டுகிறார்கள்.. நாட்டு மக்களும் பாராட்டுகிறார்கள்.. அதிமுக ஆட்சியில் மழை வந்தபோது எந்த இடத்தில் சென்று முதலமைச்சர் நின்றார்?

முதல்வர் ஸ்டாலின்
ஆனால் இந்த ஆட்சியில் இரவு 1 மணி வரை நேரடியாக களத்தில் முதலமைச்சர் செல்கிறார்.. மழைநீர் வடிந்து பிறகும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்த ஒரே முதலமைச்சர் ஸ்டாலின்தான். மிகச்சிறப்பான நல்லாட்சியை, சிறப்பான முன்மாதிரியான நிர்வாகத்தை முதலமைச்சர் தந்துவருகிறார்.. அதிமுக வெளிநடப்பு செய்ததில் எந்த ஆட்சேபனையும் இல்லை பொய் உரைகளின் முழு தொகுப்பாக எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்" என்று தங்கம் தென்னரசு காட்டமாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications