திமுக அமைச்சர்கள் பேச்சால் வேதனை.. முதல்வர் கவனத்திற்கு போயுள்ளது.. சொல்வது திருமாவளவன்
சென்னை: திமுக அமைச்சர்களின் பேச்சுகள் வேதனை அளிக்கக் கூடிய வகையில் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்மையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
அந்த வீடியோவில், "உங்கள் குடும்ப அட்டைக்கு ரூ.4 ஆயிரம் கொடுத்தாரா? இல்லையா? வாங்கினீர்களா? வாயை திறந்து சொல்லுங்கள். இப்போது பேருந்தில் எப்படி செல்கிறீர்கள்? இங்கிருந்து கோயம்பேடு செல்ல வேண்டும் என்றாலும், வேறு எங்கு சென்றாலும் ஓசி பஸ்ஸில் போகிறீர்கள்" என்று பேசி இருக்கிறார்.

அதிமுக கண்டனம்
மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தை 'ஓசி பஸ்ஸில் போகிறீர்கள்' என்று அமைச்சர் பொன்முடி கூறியதற்கு அதிமுக, அமமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், கேஎன் நேரு உள்ளிட்ட அமைச்சர்களும் மக்களை அவமதித்து வருவதாக அதிமுக தரப்பில் விமர்சிக்கப்படுகிறது.

திருமாவளவன்
இந்த நிலையில் சென்னை துறைமுகம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் கூறுகையில், அக்.2 காந்தி ஜெயந்தி தினத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அவ்வமைப்பு அரசியல் கட்சியல்ல. மதவாத இயக்கம் என அறியப்பட்ட நிலையில், அரசுக்கு எழும் அச்சத்தில் நியாயமுள்ளது.

விசிக பேரணிக்கு தடை
ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் இணைந்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி அதே நாளில் நடத்தவிருந்த மனித சங்கிலி அறப்போராட்டத்துக்குத் தடை விதித்திருப்பது எவ்வகையில் ஞாயம் என்னும் கேள்வி எழுகிறது என்று தெரிவித்தார்.

திமுக அமைச்சர்கள் பற்றி கருத்து
தொடர்ந்து திமுக அமைச்சர்களின் பேச்சு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைக்கும் போது, சில அமைச்சர்கள் பதில் அளிக்கிறார்கள். அந்த பதில்கள் விமர்சனத்துக்குரியவையாக இருக்கின்றன. சில சமயங்களில் வருத்தத்தை, வேதனையை உருவாக்கக் கூடியவையாக உள்ளன. இவை ஏற்புடையது அல்ல. இது முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications