தமிழ்நாட்டை விமர்சிக்க.. தப்பான டேட்டாவை தந்த ஆர்.என் ரவி.. வரிந்து கட்டிக்கொண்டு வந்த திமுக! மோதல்
சென்னை: ஆளுநர் ஆர். என் ரவி தவறான டேட்டாவை கொடுத்து தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை விமர்சனம் செய்ததற்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாக ஆளுநர்கள் என்பவர்கள் அரசியல் ரீதியாக கருத்துக்களை பேச மாட்டார்கள். ஜனநாயக ரீதியாக இவர்கள் நடுநிலையாக இருக்க வேண்டும். ஆனால் கடந்த சில வருடங்களாக ஆளுநர்கள் தீவிரமாக அரசியல் ரீதியாகவும் பேசி வருகிறார்கள்.
அந்த வகையில்தான் சமீபத்தில் சர்வதோதைய பள்ளி திறப்பு விழா ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர். என் ரவி, தமிழ்நாட்டில் உயர்கல்வி சேரும் மாணவர்களின் சதவிகிதம் 50 சதவிகிதத்திற்கும் அதிகம் என்று கூறுகிறார்கள்.
ஆனால் தலித் மாணவ மாணவியர் உயர்கல்வி சேரும் சதவிகிதம் வெறும் 13-14 மட்டுமே என்று விமர்சனம் செய்தார்.

தவறு
ஆனால் ஆளுநர் கூறிய இந்த புள்ளி விவரம் தவறானது ஆகும். இதை திமுகவினர் பலரும் கடுமையாக கண்டித்து வருகின்றனர். நேற்று இது தொடர்பாக திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலன் சட்டசபையில் பேசுகையில், நியமன தலைவர்கள் தரவுகளை தவறாக வெளியே பேசுகிறார்கள். 51.7 சதவிகிதம் என்பதுதான் நம்முடைய தமிழ் நாட்டின் உயர் கல்வி சதவிகிதம் ஆகும். அதில் பட்டியலின மாணவ, மாணவியரின் எண்ணிக்கை என்பது 39.6. ஆனால் நியமன தலைமைகளை இதை தவறாக பேசுகிறார்கள். இந்த விவரத்தை பேசாமல் நியமன தலைமலைகள் தவறான விஷயங்களை பேசுகிறார்கள்.

தவறான தகவல்
தவறான தரவுகளை வெளியே சொல்கிறார்கள். இது போன்ற பேச்சுக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி செய்கிறது. ஏன் அவர்கள் இப்படி பேசுகிறார்கள் , ஏன் தரவுகளை தவறாக தருகிறார்கள் என்ற கேள்வியை கேட்க செய்கிறது. தமிழ்நாடு இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை விட உயர் கல்வியில் பல மடங்கு முன்னேறி உள்ளது என்பதை அவர்கள் மறைக்க பார்க்கிறார்கள்.

உதாரணம் என்ன?
உதாரணமாக பரத் லால் என்பவர் சமீபத்தில் ஒரு போஸ்ட் செய்து இருந்தார். அவர் ஒரு இன்டர்வியூ நடத்தி உள்ளார். அதற்கு பல பொறியியல் மாணவர்கள் வந்துள்ளனர். அந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள் எல்லோரும் ஐபிஎம் கிளவுட் கோர்ஸை படித்து உள்ளனர் என்று கூறியுள்ளனர். இந்த மாணவர்கள் எல்லோரும் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தில் கீழ் அந்த கோர்ஸை படித்துள்ளார்.

ஏன் இப்படி?
அதை பார்த்து அந்த இன்டர்வியூ எடுக்கும் அதிகாரி வியந்து போகிறார். வாவ் நாம் நாட்டில் ஒரு மாநிலத்தில் இப்படி ஒரு திட்டமாக என்று வியந்து போகிறார். ஆனால் மக்களுடைய வரிப்பணத்தில் செயல்படும் ஒரு நியமன பதவியை சேர்ந்தவர், நம் மாநிலத்தின் வரி பணத்தை பெற்றுக்கொண்டு, நம் மாநிலம் பற்றியே தவறாக பேசுகிறார், என்று திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

செந்தில் குமார்
முன்னதாக திமுக எம்பி செந்தில் குமாரும் இதை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அதில், கவர்னர் ஆர்.என்.ரவி தவறான தரவுகளை மேற்கோள் காட்டியுள்ளார் தமிழகத்தில் உள்ள பட்டியல் சமூகத்தினர்-SC GER-Gross Enrolment Ratio கவர்னர் மேற்கோள் காட்டியபடி 13% முதல் 14% இல்லை . ஆனால் தமிகத்தில் Scheduled castes GER 39.6%.. தேசிய அளவில் 23.4% மட்டுமே, என்று ஆளுநர் ஆர் . என் ரவியை எம்பி செந்தில் குமார் கடுமையாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications