எனக்கும் அமைச்சர் மூர்த்திக்கும் பாதி பாதி வருகிறது! திமுக எம்.எல்.ஏ.பேச்சால் சட்டசபையில் கலகலப்பு!
சென்னை: மதுரை வண்டியூர் கண்மாயை பொறுத்தவரை தனக்கு பாதி அமைச்சர் மூர்த்திக்கு பாதியாக வருகிறது என திமுக எம்.எல்.ஏ. கோ.தளபதி பேசியது சட்டசபையை கலகலப்பாக்கியது.
அதாவது திமுகவில் அமைச்சர் மூர்த்தியும் மாவட்டச் செயலாளர், கோ.தளபதி எம்.எல்.ஏ.வும் மாவட்டச் செயலாளர் என்பதால் மாவட்ட நிர்வாக எல்லையை குறிப்பிட்டு வண்டியூர் கண்மாய் பாதி பாதி வருவதாக கூறியிருக்க வேண்டும்.
ஆனால் பொத்தாம் பொதுவாக வண்டியூர் கண்மாயை பொறுத்தவரை எனக்கும் அமைச்சருக்கும் பாதி பாதி வருகிறது எனப் பேசியதால் சக உறுப்பினர்கள் அமைச்சர் மூர்த்தியை பார்த்து கலாய்த்தனர்.

வண்டியூர் கண்மாய்
மதுரை வண்டியூர் கண்மாயை தூர்வாருவது தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. கோ.தளபதி சட்டசபையில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கடந்த மார்ச் மாதமே வண்டியூர் கண்மாய் டெண்டர் விடப்பட்டு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். மேலும், 15 ஆண்டுகளுக்கு முன்பே அவைத்தலைவராக இருந்த மறைந்த பி.டி.ஆர். வைத்த கோரிக்கை காரணமாக அப்போதும் திமுக ஆட்சியில் அந்த கண்மாய் தூர்வாரப்பட்டதாக தெரிவித்தார்.

கோ.தளபதி
இதனிடையே இதற்கு நன்றி தெரிவித்த திமுக எம்.எல்.ஏ. கோ.தளபதி, மதுரை மக்களுக்கு மீனாட்சியம்மன் கோயிலையும், திருமலை நாயக்கர் மகாலையும் விட்டால் வேறு எங்கும் செல்வதற்கும் இடமில்லை என்றும் இதனால் இப்போது தூர்வாரப்படக் கூடிய வண்டியூர் கண்மாயில், நடைபயிற்சி பூங்கா, படகு சவாரி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி அதையும் சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அமைச்சர் துரைமுருகன்
வண்டியூர் கண்மாயில் நடைபயிற்சி பூங்கா, செயற்கை நீருற்று உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படும் என அறிவித்தார். அப்போது அதற்கு மீண்டும் நன்றி தெரிவித்து பேசிய கோ.தளபதி எம்.எல்.ஏ., மதுரை வண்டியூர் கண்மாயை பொறுத்தவரை தனக்கு பாதி அமைச்சர் மூர்த்திக்கு பாதியாக வருகிறது என பொத்தாம் பொதுவாக பேசினார். அதாவது, திமுகவில் அமைச்சர் மூர்த்தியும் மாவட்டச் செயலாளர், கோ.தளபதி எம்.எல்.ஏ.வும் மாவட்டச் செயலாளர் என்பதால் மாவட்ட நிர்வாக எல்லையை குறிப்பிட்டு வண்டியூர் கண்மாய் பாதி பாதி வருவதாக கூறியிருக்க வேண்டும்.

பேரவையில் சிரிப்பு
ஆனால் பொத்தாம் பொதுவாக வண்டியூர் கண்மாயை பொறுத்தவரை எனக்கும் அமைச்சருக்கும் பாதி பாதி வருகிறது எனப் பேசியதால் சக உறுப்பினர்கள் அமைச்சர் மூர்த்தியை பார்த்து கலாய்த்தனர். தற்போது தூர்வாரும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய சூழலில், அவர் இவ்வாறு பேசியது வருமானத்தில் தான் பாதி பாதியாக வருகிறதோ என எண்ணி சக உறுப்பினர்கள் சிரித்தனர். இதனால் பேரவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே சட்டசபை கலகலப்பாகியது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications