கூட்டாட்சி தத்துவத்தை பேணி காப்போம் - அண்ணா நினைவு நாளில் கனிமொழி ட்வீட்
கூட்டாட்சி தத்துவத்தை பேணி காப்போம் என அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. கூட்டாட்சி தத்துவத்தை பேணி காப்போம் என திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டரில் பதிவுசெய்துள்ளார். அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்த அனுமதி இல்லை என தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
திமுக நிறுவனரும் பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான அண்ணாவின் 53வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அதிமுகவினரும், திமுகவினரும் அண்ணாவை நினைவு கூர்ந்து புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக என்னும் மாபெரும் இயக்கத்தை விதைத்தவர் பேரறிஞர் அண்ணா. மாநில சுயாட்சியின் மையப் புள்ளியும் அவரே என்று பதிவிட்டுள்ளார். அவரது நினைவு நாளான இன்று நமது உரிமைகளை தேக்கி வைத்திருக்கும் அதிகாரக் குவியலை உடைத்து, கூட்டாட்சி தத்துவத்தை பேணி காப்போம் என உறுதி ஏற்போம் எனவும் கனிமொழி எம்பி தனது டவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கோவில்களில் சமபந்தி விருந்து நடைபெறும். தற்போது நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால், விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்வினை நடத்த அனுமதிப்பது குறித்து தக்க அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஜனவரி 26 ஆம் தேதி முதல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்வினை நடத்த அனுமதிக்க இயலாது என தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை குறிப்பிட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications