என்ன மனுஷன்யா.. சிகிச்சைக்கு உதவி கேட்ட பாஜக தலைவர்.. ஓடோடி வந்த திமுக எம்பி.. செந்தில்குமார் செம!
தனது நண்பரின் அம்மாவின் சிகிச்சைக்காக பாஜகவின் எஸ்ஜி சூர்யா உதவி கேட்க அவருக்கு உதவி செய்வதற்கு திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் முன் வந்துள்ளார்.
சென்னை: தனது நண்பரின் அம்மாவின் சிகிச்சைக்காக பாஜகவின் எஸ்ஜி சூர்யா உதவி கேட்க அவருக்கு உதவி செய்வதற்கு திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் முன் வந்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பில் தீவிர உறுப்பினரும், பாஜகவின் இளைஞரணி துணை தலைவருமான எஸ்ஜி சூர்யா சமூக வலைதளத்தில் தீவிரமாக செயலாற்ற கூடியவர். இவர் சமூக வலைத்தளங்களில் திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்களுடன் கடுமையாக சண்டை போட்டு இருக்கிறார்.
பலமுறை திமுகவை மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். முக்கியமாக திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் இவர் நிறைய முறை வாக்குவாதம் செய்துள்ளார்.

எப்படி இருக்கிறார்
எஸ்ஜி சூர்யா கேள்வி கேட்க அதற்கு செந்தில்குமார் பதில் சொல்ல, செந்தில் குமார கிண்டலாக தனது ஸ்டைலில் கேள்வி கேட்க அதற்கு எஸ்ஜி சூர்யா பதில் சொல்ல என்று செம எண்டெர்டெயின் இருக்கும். எஸ்ஜி சூர்யாவின் டிவிட்டுக்களால் தேசிய பாஜகவினர் கவனத்தை இவர் பல முறை ஈர்த்துள்ளார். தமிழக அரசியலில் வேகமாக வளர்ந்து வரும் பாஜக தலைவராக எஸ்ஜி சூர்யா பார்க்கப்படுகிறார்.
|
நேற்று செய்த டிவிட்
இந்த நிலையில்தான் நேற்று இவர் செய்த டிவிட் வைரலானது. அவர் தனது உறவினர் ஒருவருக்கு சிகிச்சைக்கு உதவி கேட்டு இருந்தார். அதன்படி, என் நண்பரின் அம்மாவிற்கு முஸினஸ் கார்சினோ வகை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அவரின் பெயர் பிரேமலதா. பிரேமலதா அம்மா தற்போது கேஎம்சிஎச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
|
சிகிச்சை செய்தார்
அவரின் சிகிச்சைக்கு 10 லட்சம் ரூபாய் தேவை. அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள நிதி உதவி தேவை. அப்போத்தான் அவரை காக்க முடியும். தயவு செய்து உதவுங்கள், என்று குறிப்பிட்டார். இந்த டிவிட்டை பார்த்தது திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் ஓடோடி வந்தார். செந்தில் குமார் இதற்கு அளித்த பதிலில், சூர்யா, என்னால் உங்கள் நண்பரின் அம்மாவிற்கு நிதி பெற்றுத் தரமுடியும்.

பிரதமர்
பிரதமரின் தேசிய நிதி உதவி பணத்தில் இருந்து உங்களுக்கு பணம் பெற்று தர முடியும். என்னிடம் விவரத்தை தெரிவியுங்கள். அனைத்து விதத்திலும் உங்களுக்கு கண்டிப்பாக உதவி செய்ய தயாராக இருக்கிறேன், என்று செந்தில்குமார் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த டிவிட்டை பலரும் பாராட்டி வருகிறார்கள். செந்தில் குமார் அரசியல் வேறுபாடு கடந்து இப்படி உதவி செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
|
என்ன பதில் சொன்னார்
இதற்கு தற்போது எஸ்ஜி சூர்யா டிவிட்டரில் செந்தில் குமாரிடம் நன்றி தெரிவித்துள்ளார்.உங்களையே தொடர்பு கொள்வேன், உங்களது மெயில் ஐடி கிடைக்குமா என்று கேட்டுள்ளார். இதற்கு தன்னுடைய மெயில் ஐடியை மெசேஜ் செய்து இருப்பதாக செந்தில் குமார் பதில் அளித்துள்ளார். இவர்களின் உரையாடல் இணையம் முழுக்க பெரிய வரவேற்ப்பை பெற்றது.
|
செம
மக்களுக்கு உதவ வேண்டும் என்றால் அரசியல்வாதிகள் இப்படித்தான் ஒன்றுசேர வேண்டும், கட்ச் வேறுபாடு பார்க்காமல் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள். இவர், ஆனா உங்க மனசு இருக்கு பாருங்க தோழர் ...நல்லா இருப்பிங்க தோழர் வேறு ஏதும் வார்த்தை இல்லை என்று பாராட்டி உள்ளார்.
-
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
CJP Protest LIVE: “கல்வி அமைச்சரே ராஜனாமா செய்..” ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சியினர் கோஷம் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி!












Click it and Unblock the Notifications