கொட்டும் மழையிலும் விடாமல் மணிக் கணக்கில் பேசிய திருச்சி சிவா! அசையாமல் கேட்ட தொண்டர்கள்!
சென்னை: கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கொட்டும் மழையில் உரையாற்றி உள்ளார் திமுக எம்.பி திருச்சி சிவா.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடத்தபட்டு வருகின்றன. அந்தவகையில், சென்னை தெற்கு மாவட்டம் மதுரவாயல் வடக்கு பகுதி திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். இந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே லேசாக மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடையைப் பிடித்துக்கொண்டே உரையாற்றினார் திருச்சி சிவா.
திருச்சி சிவா பேசுகையில், "எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் கருணாநிதியின் நினைவு தொடர்ந்து கொண்டே இருக்கும். கருணாநிதி ஒரு இயக்கத்தின் தலைவர், இனத்தின் தலைவர். மொழியின் காவலர். இன்றைக்கு தமிழ்நாடு இந்தியாவில் தலைநிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு அடித்தளம் இட்டவர்கள் பெரியாரும், அண்ணாவும். அவர்களின் ஓருருவாய் வாழ்ந்த தலைவர் கருணாநிதி.
கருணாநிதி ஒரு யுகத் தலைவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் இப்படி ஒரு மனிதர் வாழ்ந்து மறைய முடியும்.அவரது காலத்திலே வாழ்ந்து, அவரது திட்டங்களின் நன்மைகளை நேரடியாகக் கண்டவர்கள் அவரைப் பற்றி அனைவருக்கும் சொல்ல வேண்டியுள்ளது. அதற்காகவே இந்தக் கூட்டம். அவர் மறைந்த இந்த 6 ஆண்டுகள் மட்டுமல்ல, எத்தனை நூறாண்டுகள் ஆனாலும் அவரைப் பற்றி பேசிக்கொண்டே தான் இருப்போம்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் ஒரே கட்சி கூட்டணி வெற்றி பெற்ற மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான். அதற்குக் காரணம் நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலின் வகுத்த வியூகம். கூட்டணிக் கட்சிகளை அரவணைத்த பாங்கு. தேர்தல் நேரத்திலே அவரது உழைப்பு. இந்த 3 ஆண்டுகளின் சாதனைகளை மக்கள் மறக்கவில்லை என்பதற்கு உதாரணம்.
எல்லா கிராமங்களுக்கும் மின் இணைப்பு, எல்லா ஊர்களுக்கும் சாலை வசதி, 3 கி.மீ சுற்றளவுக்குள் ஒரு ஆரம்பப் பள்ளி, 5 கி.மீட்டருக்குள்ளே ஒரு உயர் நிலைப்பள்ளி, 7 கி.மீட்டருக்குள் மேல்நிலைப் பள்ளி, எல்லா இடங்களிலும் கல்லூரிகள் என அனைத்து மட்டத்திலும் கல்வியை கொண்டு போய் கொடுத்தோம். அந்தக் கல்வி இன்னும் பலருக்கு சென்று சேரவேண்டும் என்றுதான் காலை நேர உணவுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.
சராசரியாக வேலைக்குச் செல்லும் பெண்களின் சம்பளம் 3000 ரூபாய். தொலைதூரத்தில் வேலைக்குச் செல்பவர்களின் பேருந்துக்கு ஆகும் செலவே தனி. ஆனால், இப்போது எங்கு வேண்டுமானாலும் ஏறலாம். எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம். அதில் மிச்சப்படுகிற 1000 ரூபாய் பெண்களின் செலவுக்குப் பயன்படும். உரிமைத்தொகை தருகிறோம். இன்று நமக்கென்று ஒரு மரியாதை இருக்கிறது என்றால் நாம் செயல்படுத்திய திட்டங்கள்." எனப் பேசியுள்ளார்.
திருச்சி சிவா பேசிக்கொண்டிருந்த போதே மழை வலுத்த நிலையிலும், திமுகவினர் கலையாமல் பேச்சைக் கேட்டனர். அப்போது திருச்சி சிவா, மக்கள் நனையும்போது நாமும் நனையலாம் தப்பில்லை, மைக் மட்டும் நனையாமல் பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு தொடர்ந்து பேசினார்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications