அப்படியே கழுத்தை பிடித்து இழுத்து.. திமுக எம்எல்ஏ கணவரை நெரித்த நிர்வாகி?.. பரபர சம்பவம்.. பின்னணி
சென்னை: தமிழரசி எம்.எல்.ஏவின் கணவரின் கழுத்தை நெரித்து திமுக நிர்வாகி ஒருவர் தாக்கியதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Recommended Video
ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 64 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்விற்காக அரசியல் தலைவர்கள் பலர் வந்திருந்தனர். தமிழ்நாடு அரசு சார்பிலும் விழா ஒன்றில் பல தலைவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
மானாமதுரை திமுக எம்எல்ஏ தமிழரசி, அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜன், ராஜகண்ணப்பன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்கள். அதேபோல் ராஜா, வெங்கடேஷ், காதர்பாட்சா, முத்துராமலிங்கம், முருகேசன் ஆகிய திமுக எம்எல்ஏக்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்கள்.

மோதல்
இந்த நிகழ்வில் யார் முன்னே நிற்பது என்று திமுக நிர்வாகிகளுக்கு இடையில் சிறிய மோதல் ஏற்பட்டது. யார் கூட்டத்தின் முன்னே நின்று பேசுவது என்று சிலர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதில் மானாமதுரை எம்எல்ஏ தமிழரசியின் கணவர் ரவிக்குமார் வரிசையின் முன் பக்கம் நின்று கொண்டு இருந்தார். அப்போது திமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மாறி மாறி இமானுவேல் சேகரனின் நினைவை பகிர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

கேள்வி
வரிசையின் முன் பக்கம் நின்ற எம்எல்ஏ தமிழரசியின் கணவர் ரவிக்குமாரை பரமக்குடி வடக்கு நகர் திமுக பொறுப்பாளர் ஜீவரத்தினம் பின்பக்கம் செல்லும்படி கூறினார். நீங்கள் முன்னாடி நிற்க வேண்டாம். மற்றவர்களும் முன்னே நிற்க வேண்டும். அதனால் நீங்கள் பின்பக்கம் வாங்க என்று கூறியுள்ளார். ஆனால் இதை கேட்காமல் ரவிக்குமார் தொடர்ந்து முன் பக்கம் நின்றுள்ளார்.

கைகலப்பு
இதனால் பொறுமை இழந்த ஜீவரத்தினம் ரவிக்குமார் கையை பிடித்து பின்பக்கம் இழுத்துள்ளார். ஆனால் அப்போதும் ரவிக்குமார் வராத காரணத்தால் அவரின் கழுத்தை பிடித்து ஜீவரத்தினம் பின்பக்கம் இழுத்ததாக கூறப்படுகிறது. பின் பக்கத்தில் இருந்து கழுத்தை பிடித்து நெரித்து ஜீவரத்தினம் ரவிக்குமாரை இழுத்ததாக கூறப்படுகிறது.

வீடியோ
இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ரவிக்குமாரை கழுத்தை ஜீவரத்தினம் பிடித்து நெரித்து பின்பக்கம் இழுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கட்சியின் இரண்டு முக்கிய நிர்வாகிகள் இப்படி பொது இடத்தில் நடந்து கொண்ட சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன?












Click it and Unblock the Notifications