பச்சோந்தி பழனிசாமி! வாயை கொடுத்து வாங்கி கட்டிக் கொள்ள வேண்டாம்! ஆர்.எஸ். பாரதி பாய்ச்சல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பச்சோந்தி பழனிசாமி வாயை கொடுத்து வாங்கி கட்டிக் கொள்ள வேண்டாம் எனக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பாய்ச்சல் காட்டியுள்ளார்.

'உத்தமபுத்திரன்' போல எடப்பாடி பழனிசாமி, இன்று வெளியிட்ட காணொலியில் அள்ளிவிட்டிருப்பதாக சாடியிருக்கிறார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

அமலாக்கத்துறை வழக்கு குறித்து நாங்கள் எதுவும் சொல்லவில்லை. செந்தில்பாலாஜியை எப்படி நடத்தினார்கள் என்பது குறித்தே எங்கள் கழகத் தலைவர் தளபதி கருத்து தெரிவித்திருந்தார். ஆனால்,பழனிசாமியோ சட்டமேதையைப் போல பேசியிருக்கிறார்.அமலாக்கத்துறையின் 18 மணிநேர விசாரணையின்போது செய்த சித்ரவதை காரணமாகவே செந்தில்பாலாஜி உடல்நலம் பாதிக்கப்பட்டது. நெஞ்சுவலி ஏற்பட அமலாக்கத் துறையே காரணம். இதுதான் உண்மை.

DMK Organisation Secretary R.S.Bharathi replied to Edappadi palanisamy

ஆ.இராசா கைதைக் கண்டித்து உளறிக் கொட்டியிருக்கிறார் பழனிசாமி. ஆ.இராசா கைது குறித்து தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மறைத்து பேசியிருக்கிறார். இல்லாத கட்டுக்கதைகளை அள்ளிவிடும் பழனிசாமி, திருமதி கனிமொழி கைது செய்யப்பட்ட போது, தளபதி சென்று பார்க்கவில்லையே என்கிறார்.

2011 சூன் மாதம் 27ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு கனிமொழியை திகார் சிறைக்கு நேரில் சென்று சந்தித்தார் கழகத் தலைவர் தளபதி. அப்போது, டி.ஆர்.பாலு, ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் உடன் சென்றனர். டெப்புடி சூப்பிரடெண்ட் அலுவலகத்தில் சந்தித்தார் தளபதி. பின்னர், ஆ.இராசா அவர்களையும் சந்தித்தார். கனிமொழியும், ஆ.இராசாவும் டெல்லியில் கைது செய்யப்பட்டார்கள். ஆனால், செந்தில் பாலாஜியின் கைது சென்னையில் நடந்துள்ளது.

ஊழலைப் பற்றிப் பேச பழனிசாமிக்கு அருகதை இல்லை. 4,000 கோடி ரூபாய் டெண்டர்களை உறவினர்களுக்குக் கொடுத்தவர் பழனிசாமி. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. உச்ச நீதிமன்றம் ஓடிப் போய் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கூடாது, முதலமைச்சராக இருந்து தன்னுடைய கட்டுப்பாட்டில் இருந்த மாநில காவல் துறையே விசாரிக்க வேண்டும் என தடையாணை வாங்கினார் பழனிசாமி.

இந்த வழக்கு, சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே பழனிசாமி கேட்டுக் கொண்டபடியே, மாநில காவல்துறை விசாரிக்கலாம் என்ற அவரது கோரிக்கைக்கு ஆட்சேபணை இல்லை என்ற நிலையில்தான் அந்த வழக்கை திரும்ப பெற்றேன். பழனிசாமி இதனைகூட அறியாமல் பேசியிருக்கிறார்.

வழக்கை தில், திராணியுடன் சந்திப்பதாக சொல்கிறார் பழனிசாமி, அப்படி தில், திராணி இருந்தால் உச்ச நீதிமன்றம் போய் தடை வாங்கினார் இந்த எடப்பாடி பழனிசாமி? முதலமைச்சருக்கு செந்தில் பாலாஜி பணம் கொடுத்ததாகச் சொல்கிறார் பழனிசாமி. அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.நான்கு ஆண்டு சிறைத் தண்டனை பெற்றவர் ஜெயலலிதா. நூறு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டவர் ஜெயலலிதா.

அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது என்று சவால் விடுகிறார் பழனிசாமி. ஆமாம், யாராலும் அழிக்க முடியாது என்று சொல்லிவிட்டு பழனிசாமியே அதிமுகவை அழித்துவிடுவார்.

துணிவு, நேர்மை இவையெல்லாம் என்னவென்றே தெரியாத பழனிசாமி எங்கள் தலைவர் பதற்றத்தில் இருப்பதாக அந்த காணொலியில் கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

தன் ஆட்சிக் காலம் முழுவதும் பதற்றத்திலேயே இருந்து இப்போது இந்தத் தற்காலிகத் தலைமைப் பதவிக்காகப் பதட்டத்துடனேயே பணிந்து, குனிந்து, வளைந்து இருப்பவர்தான் இந்த பழனிசாமி என்பதை நாட்டுமக்கள் எல்லோரும் அறிவார்கள். அவர் ஆட்சிக்கு மீண்டும் வரவும் - இப்போது கட்சியை நடத்தவும் இந்த பம்மாத்து பழனிசாமி எப்படியெல்லாம் பணிந்து கிடக்கிறார் என்பது எல்லோரும் அறிந்ததே.

அவர் ஏதோ உத்தமர் போல இன்றொரு கருத்து வெளியிட்டிருக்கிறார். மாண்புமிகு அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் மீதான அமலாக்கத்துறை எடுத்திருக்கும் நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடவும் தயாராகவே இருந்தார் செந்தில்பாலாஜி. ஆனால் சோதனை என்ற பெயரில் அவர் வீட்டில் அமலாக்கத்துறை நடந்துகொண்டதும் - அவர் கையாளப்பட்ட முறை எப்படி என்பதையும் நாம் சொல்ல வேண்டியதில்லை தொலைகாட்சி உள்ளிட்ட ஊடகங்களில் மக்களே அதைப் பார்த்துள்ளனர்.

"இதுபோன்ற பூச்சாண்டிகள், ரெய்டு, மிசா உள்ளிட்ட அனைத்தையும் சந்தித்த இயக்கம் திமுக. எனவே இந்த இயக்கம் எப்போதும் அவருக்கு துணை நிற்கும்" என்பதை எடுத்துக் கூறவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செந்தில் பாலாஜி அவர்களை சந்தித்தார் ஆனால் அந்தச் சந்திப்பிற்குக் காரணமாக கற்பனைக் கதைகளையெல்லாம் அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார் பழனிச்சாமி.

இந்த நடவடிக்கைளால் திமுகவிற்கு எந்த சிக்கலும் வரப்போவதில்லை ஏனென்றால் எங்களுக்கு 'மடியில் கனமில்லை வழியில் பயமில்லை எனும் அளவிற்கும் 'மிஸ்டர் கிளீன்' என்ற பெயரெடுத்தவர் தான் எங்களது தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.

இவ்வளவு ஏன், இன்று இருக்கும் பழனிசாமியின் கட்சித் தலைவராக அன்று இருந்த ஜெயலலிதா, எங்கள் கழகத் தலைவர் கலைஞர்மீது மேம்பால ஊழல் வழக்கு போட்டாரே? நாடே பார்க்கும் வண்ணம் நள்ளிரவில் கைது செய்தாரே, இன்றைய எங்கள் தலைவர் தளபதி அவர்களை அந்த வழக்கில் இணைத்திருந்தார்களே! அந்தவழக்கில் ஒரு சார்ஜ்ஷீட் அவர்களால் போட முடிந்ததா? அவ்வளவுதான் அவர்கள் யோக்கியதை.

ஏனென்றால் எங்கள் தலைவர் மிஸ்டர் கிளீன் என்று பெயரெடுத்தவர். எனவே எங்களுக்குப் பதற்றம் ஏற்படுவதற்கான தேவையேயில்லை.

அமலாக்கத்துறையின் நோக்கமே முறைகேடான முறையில் செந்தில் பாலாஜி அவர்களை டெல்லிக்கு கொண்டு செல்வதாகத் தான் இருந்துள்ளது என்பதாலேயே முதலமைச்சர் அவர்கள் நேரில் சென்றார்.

இப்போதும் சட்டரீதியாகவே மாண்புமிகு அமைச்சர் அவர்களின் சிகிச்சை மற்றும் பாதுகாப்பிற்காக உயர்நீதிமன்றத்தினை நாடி உத்தரவுகளைப் பெற்றிருக்கிறோம்.

ஆனால், இந்த பம்மாத்துப் பழனிச்சாமி இதையெல்லாம் இட்டுக்கட்டி ஏதோ பச்சோந்தி என்றெல்லாம் பேசியிருக்கிறார், ஒரு பச்சோந்தியே பச்சோந்தி என்றெல்லாம் பேசலாமா?

இந்த பச்சோந்தி பழனிசாமி அம்மையார் ஜெயலலிதாவிடம் எப்படியிருந்தார், பதவிக்காக சசிகலா காலில் எப்படி விழுந்தார், இன்றைக்கு அமித்ஷாவிடமும் - மோடியிடமும் எப்படி பச்சோந்தித்தனமாக இருக்கிறார் என்பதனை எங்களை விடவும் அதிமுகவினரும், தமிழ்நாடு மக்களும் நன்கு அறிவார்கள்.

நாங்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் அது தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவே இருக்கும் என்பது நாடறிந்தது. அப்படி நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருந்திருந்தாலும், அதிமுகவினைப் போல 13 மாதங்களில் கூட்டணியைக் கவிழ்ப்பவர்கள் அல்ல நாங்கள் தமிழ்நாட்டின் நலனையும் மற்ற மாநிலங்களின் நலனையும் கருத்திற்கொண்டு 'குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின்' அடிப்படையிலேயே கூட்டணியில் இருந்தோம்.

உங்களைப் போல முத்தலாக், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றில் அடிமைத்தனமாக ஆதரித்து செயல்படும் இயக்கம் அல்ல திமுக.

வாஜ்பாய் காலத்தில் பாபர் மசூதி விவகாரம், காஷ்மீர் உரிமை பறிக்கும் நடவடிக்கை, பொது சிவில் சட்டம் போன்ற நடவடிக்கைகளுக்கு மூக்கணாங்கயிறு போடும் விதமாக மாநிலங்களுக்கு நலம் பயக்கும் 'குறைந்தபட்ச பொது செயல்திட்டம்' அடிப்படையிலேயே ஆதரித்தோம். அதற்குப்பின் பொடா, குஜராத் கலவரம் உள்ளிட்ட விஷயங்களால் அந்த ஆதரவையும் திரும்பப் பெற்றோம்.

எனவே, பச்சோந்தித்தனம் என்பது பிறவி குணம்; அது பழனிசாமிக்குத்தான் உள்ளதே தவிர, திமுகவுக்கு இல்லை. இது கொள்கை உணர்வுமிக்க கட்சி. அதை பேரறிஞர் அண்ணா உருவாக்கியபடி முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் மாண்புமிகு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் முன்னேற்றிச் செல்கிறார். எனவே பச்சோந்தி பழனிச்சாமி வாயைப் பொத்திக் கொள்வதே அவருக்கு நலம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+