யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்.. தான் படிச்ச காலேஜிலேயே.. எமோசனலான பத்மபிரியா வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் படித்த கல்லூரியிலேயே தலைமை விருந்தினராக அமரும் வாய்ப்பு வெகுசிலருக்கே அபூர்வமாக அமையும். அப்படியான ஒரு நிகழ்வு நடந்ததை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் திமுகவின் பத்மபிரியா.

தமிழச்சி என்ற பெயரில் சமூக வலைதளங்களில் இயங்கி வந்தவர் பத்ம பிரியா. இவர் கமல்ஹாசன் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். கடந்த சட்டசபை தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பெரிய அளவில் தோல்வியை தழுவியதால், பலரும் அக்கட்சியில் இருந்து விலகி பல்வேறு கட்சிகளில் சேர்ந்தனர்.

DMK Padma Priya share emotional video about Student to a Chief Guest in MWC collage

அப்படித்தான் பத்மபிரியா மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் பதவி வகித்து வருகிறார். எதிர்க்கட்சியினருக்கு சமூக வலைதளங்களில் அடிக்கடி பதிலடி கொடுத்து வருகிறார். இவர் அண்மையில் குஷ்புவிற்கு கொடுத்த பதிலடி பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் தான் படித்த கல்லூரியிலேயே தலைமை விருந்தினராக பங்கேற்றது குறித்து எமோசனலான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ குறித்து பத்ம பிரியா கூறும் போது, நான் எனது இளங்கலை படிப்பை மகாலட்சுமி பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் படித்தேன்.

நான் படித்த கல்லூரியிலேயே இப்போது தலைமை விருந்தினராக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றேன். இந்த மாரியாதை எனக்கு கிடைத்ததை பாக்கியமாக கருதுகிறேன். நான் பல கல்லூரிகளுக்கு விருந்தினராக பங்கேற்றுள்ளேன். ஆனால் படிச்ச கல்லூரிக்கே என்பது என்னை மிகவும் உணர்ச்சி வசப்பட வைத்துவிட்டது.

வெறும் 7 ஆண்டுகளில் இது நடந்ததுள்ளது. எனக்கு சொல்லிக்கொடுத்த பேராசிரியர்களின் மகிழ்ச்சியோடு என்னை வாழ்த்தி வரவேற்றது நெகிழ வைத்தது. இந்த வாழ்க்கை மிகவும் அழகானது. இதில் எதிர்பார்க்காத திருப்பங்கள் நடக்கிறது. எனவே இந்த நிகழ்வை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

தான் படித்த கல்லூரியிலேயே தலைமை விருந்தினராக பங்கேற்கும் வாய்ப்பை பெற்ற திமுக நிர்வாகி பத்ம பிரியாவை பலரும் பாராட்டி வருகிறார்கள். அவர் அந்த வீடியோவில் உணர்ச்சி வயப்பட்டாவரு ஆசிரியர்களுடன் நடந்து வருகிறார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+