''கட்சிக்கு அவப்பெயர்''! குடியாத்தம் குமரனை திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்த துரைமுருகன்!
சென்னை: திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குடியாத்தம் குமரனை கட்சியிலிருந்து மீண்டும் கட்டம் கட்டியிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

குடியாத்தம் குமரனை திமுகவிலிருந்து அமைச்சர் துரைமுருகன் நீக்குவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே ஒரு முறை நீக்கப்பட்டு ஆ.ராசா மூலம் மீண்டும் கட்சிக்குள் வந்தார் குடியாத்தம் குமரன். இந்நிலையில் இப்போது மீண்டும் அவரை 2வது முறையாக கட்சியை விட்டு வெளியேற்றி இருக்கிறார் துரைமுருகன்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை பூர்வீகமாக கொண்ட குமரன் தனது மாணவப் பருவத்தில் இருந்து திமுக மேடைகளில் முழங்கி வருகிறார். தொடக்கத்தில் துரைமுருகனின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர், ஒரு கட்டத்தில் அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறினார். துரைமுருகன் குறித்து தனக்கு நெருக்கமானவர் ஒருவரிடம் குடியாத்தம் குமரன் பேசியதை ரெக்கார்டு செய்த அவர் அதை அப்படியே துரைமுருகனிடம் ஓலிக்கவிட்டு காட்டியிருக்கிறார்.
இதையடுத்து கடந்த 2019ஆம் செப்டம்பர் மாதம் திமுகவிலிருந்து குடியாத்தம் குமரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பல மாதங்களாக அவர் மீண்டும் திமுகவில் இணைய பல முயற்சிகள் எடுத்தும் எதுவும் பலனளிக்காததால் ஆ.ராசாவின் உதவியை நாடினார். ஆ.ராசாவை பொறுத்தவரை சொற்பொழிவாளர்களை கைவிடாதவர் என்பதால் திமுக தலைமையிடம் பேசி மீண்டும் குடியாத்தம் குமரனை கட்சிக்குள் கொண்டு வந்ததோடு, கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியையும் பரிந்துரைத்து பெற்றுக்கொடுத்தார்.
இதனிடையே சமூக வலைதளங்கள் மூலம் எதிர்கட்சிகளுக்கு சற்று காட்டமான முறையில் அண்மைக்காலங்களாக பதிலடிகளை கொடுத்து வந்தார் குடியாத்தம் குமரன். இந்நிலையில் மீண்டும் என்ன நடந்ததோ தெரியவில்லை, இன்று இரண்டாவது முறையாக குடியாத்தம் குமரனை கட்சியிலிருந்து கட்டம் கட்டியிருக்கிறார் அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன். இது திமுக தலைமைக்கழக பேச்சாளர்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
-
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை












Click it and Unblock the Notifications