பொய் சொல்லிவிட்டு முதல்வர் ஏன் வெளிநாடு போகனும்...? மு.க.ஸ்டாலின் கேள்வி
Recommended Video
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் முதலீடுகளை ஈர்க்கப்போகிறோம் என ஏன் பொய் சொல்லிவிட்டு வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல மணவிழாவில் பேசிய அவர் இதனைக் கூறினார். ஆட்சிக்காலம் முடிவதற்கு முன்பே அரசு செலவில் உலகநாடுகளை சுற்றிப்பார்க்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சரும், அமைச்சர்களும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதாக கூறினார். போகட்டும், வேண்டாம் என்று தாம் சொல்லவில்லை என்றும், முதலீடுகளை ஈர்க்கப் போகிறோம் என ஏன் பொய் சொல்ல வேண்டும் என்பது தான் தமது கேள்வி எனவும் குறிப்பிட்டார்.

திமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது தானும் வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாகவும், ஆனால் மெட்ரோ ரயில் உள்ளிட்ட சில ஆய்வு பணிகளுக்காகவே தான் சென்றதாகவும், முதலீடுகளை பெறப்போகிறேன் என தாம் எந்த இடத்திலும் பொய் சொல்லிவிட்டு செல்லவில்லை எனவும் தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்காலத்தில் முதலீடுகள் தமிழகத்தை தேடி வந்ததாகவும், அதற்கு சாட்சியே அம்பத்தூர் முதல் ஸ்ரீ பெரும்புத்தூர் வரையிலான தொழிற்சாலைகள் எனவும், அதிமுக அரசு முதலீடு விவகாரத்தில் நாடகம் நடத்திக்கொண்டிருப்பதாகவும் சாடினார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications