எடப்பாடிக்கு எதிராக புரட்சி வெடிக்கும்.. கொந்தளித்த வேலுமணி ஆதரவாளர்கள்.. அதிமுகவில் டிவிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

கோவை: சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட அதிமுக பிடிக்கவில்லை. அதிமுகவில் பிளவு ஏற்பட்டு பல முன்னாள் அமைச்சர்கள் தவெக, திமுகவில் இணைந்து வருகிறார்கள். எடப்பாடிக்கும் அவரின் உற்ற தளபதியாக வலம் வந்த வேலுமணிக்கும் இடையே பனிப்வோர் நிலவுகிறது. கோவையில் அதிமுக கட்சி கொடியின்றி வேலுமணி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தனது மனகுமுறல்களை அவர் வெளியிட்டுள்ளார். வேலுமணியின் ஆதரவாளர்களும் எடப்பாடிக்கு எதிராக கடுமையாக கொந்தளித்துள்ளனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதிமுக கொடி, பேனர், போஸ்டர் எதுவும் கூட்டம் நடைபெற்ற மண்டபத்தில் வைக்கப்படவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தன. ஆதரவாளர்களிடம் பேசிய வேலுமணி, "உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் எந்நேரத்திலும் வந்து நிற்பேன். இதுவரை பொதுசெயலாளர் எடப்பாடியாருக்கு மரியாதை அளித்து வருகிறோம்.

Velumani Edappadi Palanisamy

திமுகவை ஏற்க மாட்டோம்

ஓ.பன்னீர்செல்வம் தேர்தலில் நம்முடன் இணைந்திருந்தால் பலம் பெற்றிருப்போம். தேர்தலுக்கு பிறகு திமுகவுடன் கூட்டணி என்று சொன்னதுதான் பிரச்சனை வந்தது. திமுகவை எதிர்ப்பதற்காக தான் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். திமுகவுடன், அதிமுக கூட்டணி வைப்பதை எப்படி ஏற்க முடியும். அதிமுகவின் 47 எம்எல்ஏக்களில் 25 பேர் எங்களுடன் வந்தனர். அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என நினைத்தோம். அதிமுக திமுகவுடன் சேர்ந்தால் யார்தான் ஏற்பார்கள். திமுகவுடன் யார் போனாலும் ஏற்கமாட்டோம் .

30 மாவட்ட செயலாளர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதிமுகவை அழிவு பாதையில் கொண்டு செல்ல முயற்சித்தனர். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது தான் என் கருத்து. கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் மீண்டும் எடப்பாடியாரிடம் வந்தோம். 21 வருடங்கள் மாவட்ட செயலாளராக இருந்திருக்கிறேன். கட்சியில் சாதாரண உறுப்பினராக இருப்பேன். என்னை நம்பி வந்தவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.

ஆதரவாளர்கள் கொந்தளிப்பு

தவறு செய்தால் நிச்சயமாக கேட்போம். திமுக எதிர்ப்பு எப்போதும் இருக்கும்.நிறைய பேர் வாட்ஸ் அப் குழு உருவாக்கி என்னை கேவலப்படுத்தி வருகிறார்க்ள. பழையபடி பதவி இருந்தால் செயல்பட முடியும். பொதுக்குழுவை கூட்டி விவாதிக்க வேண்டும் என நினைத்தோம். அதுநடக்கவில்லை. செங்கோட்டையன், ஓபிஎஸ், ஜேசிடி பிரபாகர் என ஓவ்வொருவராக வெளியேறினர. அதுபோல நானும் வெளியே செல்வேன் என நினைக்கின்றனர்" என்றார்.

வேலுமணிக்கு தலைமை நிலைய செயலாளர், மாவட்ட செயலாளர் பதவிகளை பறித்துவிட்டு டம்மியான பதவியை கொடுத்திருப்பது, ஆதரவாளர்கள் பதவியை பறித்திருப்பது போன்றவற்றால் வேலுமணி ஆதரவாளர்கள் கடுப்பில் உள்ளனர்.இந்த ஆலோசனை கூட்டத்திற்கு வந்த அதிமுக தொண்டர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "வேலுமணி மக்கள் நலனுக்காக செயல்படுபவர். தொண்டாமுத்தூர் மக்கள் அவருடன் துணை நிற்பார்கள். அவருடன் வந்தவர்களுக்கு மீண்டும் பொறுப்பு போட்டு கொடுக்க வேண்டும்.

எடப்பாடிக்கு வார்னிங்

வேலுமணி காட்டும் வழி தான் எங்கள் வழி. அவர் காட்டும் வழியில் பயணிப்போம். அதிமுக 32 வருட காலம் ஆட்சியில் இருந்தது. ஆனால் இந்த கட்சியை பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறார். அதிமுக தொண்டர்களின் உயிரை பறிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது.அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை கட்சியில் இணைக்க வேண்டும். வேலுமணி சொல்லும் நல்ல கருத்துகளை ஏற்கவில்லை என்றால் புரட்சி வெடிக்கும். கட்சி நலன் சார்ந்து செயல்பட வேண்டும்" என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+