Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்படி ஆயிடுச்சே குஷ்பு.. ட்விட்டர் பதிவையே நீக்கிட்டாரே! ஸ்க்ரீன்ஷாட் எடுத்து திமுக நிர்வாகி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீதிமன்றங்களில் காந்தி, திருவள்ளுவர் படங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறி சென்னையில் உள்ள அம்பேத்கர் படத்தை அகற்ற உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டதற்கு திமுக அரசை விமர்சித்து ட்வீட் செய்து நீக்கிய குஷ்புவை அக்கட்சியினர் கண்டித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் பிறப்பித்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம், சென்னையில் புதிதாக கட்டப்பட்ட ஆலந்தூர் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டு உள்ள அம்பேத்கர் படத்தை அகற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்ற பதிவாளர் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் படங்களை தவிர பிற புகைப்படங்களை நீதிமன்ற வளாகங்களில் வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டார்.

DMK questioned BJP actress Khushbu who criticised DMK govt for Ambedkar photo removal in courts

இந்த சுற்றறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர். விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என பல்வேறு நீதிமன்ற பதிவாளரின் உத்தரவை வாபஸ் பெற வலியுறுத்தினர்.

நேற்று தமிழ்நாடு முழுவதும் அம்பேத்கர் படத்தை நீதிமன்றத்தில் வைக்கக்கூடாது என்ற உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசியலில் இந்த விவகாரம் பெரும் விவாதப் பொருள் ஆனது. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா பூர்வாலாவை சந்தித்து அம்பேத்கர் படத்தை அகற்ற வேண்டாம் என்ற தமிழ்நாடு அரசின் நிலைபாட்டை தெரிவித்தர்.

இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதியும் இருக்கும் நிலையே தொடரும் என்று கூறி அரசின் நிலைபாட்டை ஏற்றுக்கொண்டார். இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்பு.

நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படும் என்ற செய்திகள் பரவியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியைத் தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலாவைச் சந்திக்க உத்தரவிட்டார். சந்திப்பில், நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது.

தலைமை நீதிபதி, இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படாது என்றும், தற்போது உள்ள நடைமுறையே தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த தகவல் வழக்கறிஞர் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது." இதனை தொடர்ந்து பலரும் அரசுக்கும் தலைமை நீதிபதிக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு, நீதிமன்றங்களில் அம்பேத்கர் படத்தை அகற்றும் உத்தரவுக்காக திமுக அரசை விமர்சித்து இருந்தார்.
இந்திய அரசியலமைப்பை வடிவமைத்த அம்பேத்கரின் புகைப்படங்களை நீதிமன்றங்களில் வைக்க திமுக அரசு மறுத்து உள்ளது. இது அகங்காரமான செயல்." என்று சாடி இருந்தார்.

நீதிமன்ற பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கும் திமுக அரசுக்கும் என்ன தொடர்பு என்றும் நீதிமன்றங்கள் எப்படி திமுக அரசு கட்டுப்பாட்டிற்குள் வரும் எனவும் கேள்வி எழுப்பினர். உடனே ட்விட்டரில் தான் வெளியிட்ட பதிவை நடிகை குஷ்பு நீக்கிவிட்டார். ஆனால், அவரது பதிவின் ஸ்க்ரீன்ஷாட்டை எடுத்து விமர்சித்து உள்ள திமுக செய்தித் தொடர்பு இணை செயலாளர் சையது ஹபீசுல்லா.

DMK questioned BJP actress Khushbu who criticised DMK govt for Ambedkar photo removal in courts

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், "சம்பந்தமே இல்லாமல் திமுக அரசை விமர்சித்து பதிவை நீக்கி இருக்கிறார் பாஜகவை சேர்ந்த குஷ்பு.
அம்பேத்கர் படம் தொடர்பாக நீதிமன்ற பதிவாளர்‌ எடுத்த முடிவுக்கு தி.மு.க வை குற்றம் சாட்டுவது எந்த விதத்தில் நியாயம்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+