நீங்க கிளம்புங்க.. திருமாவுக்கு ‘ஷாக்’ ட்ரீட்மெண்ட் கொடுத்த விஜய்! பதறிப் போன வைகோ! பரபர பனையூர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தரப்பிலிருந்து தோழமைகளுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை கள் தான் தவெக அமைச்சர்களிடம் தற்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஹாட் டாப்பிக்காக பேசப்படும் அந்த விவகாரம் என்ன?

பெரும்பான்மை பலம் இல்லாத தவெக அரசுக்கு காங்கிரஸ், விசிக, சி.பி.ஐ., சி.பி.எம்., ஐ.எம்.யூ.எல். கட்சிகள் ஆதரவு அளித்தன. இதில் வெளியிலிருந்து ஆதரவு தரும் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர மற்ற 3 கட்சிகளும் முதல்வர் விஜய் கேபினெட்டில் இணைந்துள்ளன. விஜய் தலைமையில் தவெக கூட்டணி அரசு அமைந்தது.

ஆனால், சமீப நாட்களாக விசிக தலைவர் திருமாவளவனின் பேச்சு முதல்வர் விஜய்க்கு சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, சட்டமன்றத்தில் அப்பாவை காணோம் என முதல்வர் விஜய் செய்த செய்கை மு.க.ஸ்டாலினை கிண்டல் பண்ணுவதாக இருந்தது.

Vijay Thirumavalavan Vaiko

விஜய்யின் இந்த செய்கையை தவெகவின் தோழமைக் கட்சிகளின் தலைவர்களான திருமா, சண்முகம், வீரபாண்டியன் ஆகியோர் கடுமையாக கண்டித்தனர். இதில் திருமாவின் கண்டிப்புத்தான் முதல்வர் விஜய்யை கோப படுத்தியுள்ளது. அதாவது, எங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை வேண்டாம் ; வேறு ஒரு பவர் ஃபுல் துறை ஒதுக்க வேண்டும். இல்லையேல் அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியதிருக்கும் என வெளிப்படையாகவே பேசி, தவெக அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தினார் திருமா.

தவிர, திருச்சி கிழக்குத் தொகுதியை விசிகவுக்கு ஒதுக்க வேண்டும், உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும், வாரிய பதவிகளில் விசிகவுக்கு இத்தனை இடங்கள் வேண்டும் என்றெல்லாம் விஜய்க்கு மறைமுகமாக கோரிக்கை வைத்தபடி இருந்தார். திருமாவின் இந்த 'வலியுறுத்தல்கள்' முதல்வர் விஜய்க்கு எரிச்சலை தந்தன.

இருப்பினும் இதனை அமைதியாக கடந்துபோன விஜய், அப்பாவை காணோம் என செய்த செய்கையை திருமா கண்டித்ததைத்தான் அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. இது குறித்து விஜய்யின் ஆலோசகர்கள் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, தனிச்செயலாளர் ஜெகதீஸ் ஆகியோர் விஜய்யை சந்தித்து பேசினர்.

அந்த சந்திப்பில், திருமாவின் நடவடிக்கைகள் குறித்துத்தான் அலசப்பட்டன. குறிப்பாக, ''இரண்டு எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு, ஒரு அமைச்சர் பதவியையும் வாங்கிகொண்டு விசிக கொடுக்கும் டார்ச்சர்கள் சகிக்க முடியவில்லை. திருமாவின் பேச்சு நாகரீகமாக இல்லை. அவரது தயவால் மட்டுமே நீங்கள் (விஜய்) முதலமைச்சராக இருப்பது மாதிரியான நினைப்பு அவருக்கு வந்துவிட்டது.

திமுக தலைவரை பற்றி அரசியல் ரீதியாக ஒரு விசயத்தை நீங்கள் செய்தால் உங்களை அவர் கண்டிப்பாரா? இப்பவும் அவருக்கு திமுக மீது தான் நட்பு இருக்கிறது. இப்படி இரட்டை வேடம் போடும் இவரை வைத்து எப்படி 5 ஆண்டுகாலம் நகர்த்த முடியும்? ஆதரவை வாபஸ் வாங்குவோம் என நேரடியாகவும் மறைமுகமாகவும் திருமா அடிக்கடி சொல்லி வருவதை ரசிக்க முடியவில்லை. அவரது தயவு நமக்குத் தேவை யில்லை. இதில் நீங்கள் (விஜய்) ஒரு முடிவை எடுங்கள். இடைத்தேர்தலில் நாம் பார்த்துக்கொள்ளலாம்'' என்று ஆலோசகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து ஆதவ் அர்ஜுனாவை அழைத்துள்ளார் விஜய். அவரும் ஓடோடி வந்ததும், ''நம் கூட்டணி ஆட்சியில் இருக்கும் திருமாவின் பேச்சுக்கள் சரியில்லை. ஒருவித மிரட்டல் பாணியில் இருக்கிறது. அதனால், நம்முடைய அரசுக்கு தரும் ஆதரவை அவர் வாபஸ் பெற்றுக்கொள்ளச் சொல்லி விடுங்கள். இதனை சாதாரணமாக திருமாவிடம் சொன்னாலும் சரி ; எச்சரிக்கையாக சொன்னாலும் சரி... நான் சொன்னதாக சொல்லி விடுங்கள்'' என்று உத்தரவிட்டுள்ளார் விஜய்.

இதனைத்தொடர்ந்து தான், விஜய்யின் எச்சரிக்கையை திருமாவுக்கு தெரியப்படுத்தினார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. அதைக்கேட்டு அதிர்ச்சிய டைந்த திருமா, ''முதல்வர் தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்'' என சொல்லி சில விளக்கங்களை கொடுத்துள்ளார். அதற்கு எந்த பதிலையும் சொல்லாத ஆதவ், ''முதல்வரிடம் இதனைத் தெரிவிக்கிறேன்'' என்று சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்துக் கொண்டார்.

இந்த எச்சரிக்கையை உணர்ந்த திருமாவளவன், உடனே விஜய்யை குளிர் வைக்கும் முயற்சியில் குதித்தார். அதாவது, டெல்லி பிரதிநிதியாக விஜய்யின் நண்பரும் கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபருமான வெங்கடநாராயணா நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தை அரசியல் கட்சிகள் அனைத்தும் கண்டித்த நிலையில், திருமா மட்டும் அதனை கண்டிக்கவில்லை. மாறாக, ஆதரித்துப்பேசினார். அந்த நியமனம் தவறில்லை என்றும் அழுத்தமாகச் சொன்னார்.

மேலும் தற்போது, '' தவெக அரசுக்கு எந்த டிமாண்டையும் வைக்க வில்லை ; திருச்சி கிழக்கில் நான் போட்டியிடவில்லை ; இலாகா மாற்றித் தாருங்கள் எனவும் நாங்கள் கேட்கவில்லை'' என்று பல்டி மேல் பல்டி அடித்தார் திருமா. இந்த மாற்றத்துக்கு காரணம், அவருக்கு விஜய் கொடுத்த எச்சரிக்கைதான் என்கிறார்கள் ஆலோசகர்களுக்கு நெருக்கமானவர்கள்.

இந்த நிலையில், மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கும் தவெகவின் தோழமை கட்சிகளுடனான ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்க தோழமைக் கட்சி களின் தலைவர்களை நேரில் சென்று அழைக்குமாறு விஜய்யின் உத்தரவை ஏற்று அமைச்சர்கள் ஆனந்தும் ஆதவ்வும் தலைவர்களை அழைத்துள்ளனர். திருமாவுக்கும் இந்த அழைப்பு வைக்கப்பட்டபோது, எங்கள் மீது எந்த கோபமும் இல்லையே என்று இயல்பாக திருமா கேட்க, அதெல்லாம் ஒன்றுமில்லை ; கூட்டத்தில் அவசியம் கலந்துக்கொள்ளுங்கள் என்று மட்டும் சொல்லி விட்டு அமைச்சர்கள் கிள்ம்பிவிட்டனர்.

திருமா விவகாரம் இப்படி இருக்க, மதிமுக எம்.எல்.ஏ.க்களை பதவி விலகச் சொல்லுங்கள் , இடைத்தேர்தலில் அவர்களை நிற்க வைத்து நான் ஜெயிக்க வைக்கிறேன் என்று விஜய் சொன்னதாக வைகோ சொன்னதும் சர்ச்சை யானது. ஆட்சி அமைக்கவும் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளவும் குதிரை பேர அரசியல் நடப்பதாக திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட எதிர்க் கட்சி கள் குற்றம் சாட்டி வரும் நிலையிலும், இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையிலும் வைகோவின் இந்த பேச்சு, முதல்வர் விஜய்க்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

குதிரை பேரம் நடக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அவரது கருத்துக்கள் இருக்கின்றன என்று விஜய்யிடம் உளவுத்துறையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறது. அதனால், சீனியர் லீடர் அவர் (வைகோ) . வார்த்தைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என அவருக்குத் தெரியலையே என்று ஆதங்கப்பட்ட விஜய், இது குறித்து ஆதவ் அர்ஜுனாவுக்கு சில இன்ஸ்ட்ரக்சன் கொடுத்துள்ளார்.

அதன்படி, தோழமைக்கட்சிகளின் கூட்டத்துக்கு அழைப்பதற்காக வைகோவை ஆனந்தும் ஆதவ்வும் நேரில் சந்தித்தனர். அழைப்பிதழ் கொடுத்த கையோடு, விஜய்யின் ஆதங்கத்தையும் சொல்லியிருக்கிறார்கள். அய்யய்யோ என பதறிய வைகோ, இதற்கு நான் விளக்கம் தந்து விடுகிறேன் என்றவர், அவர்கள் சென்றதும், மதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யச் சொல்லி நான் தான் சொன்னேன். முதல்வர் சொல்லவில்லை என்று பல்டி அடித்தார் வைகோ. ஆக, திருமா மற்றும் வைகோவுக்கு சூப்பர் சிகிச்சையளித்திருக்கிறார் முதல்வர் விஜய் என்கிறார்கள் தவெகவினர்.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+