Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுற்றி வளைத்த ED.. தமிழக அரசு தப்புவது கஷ்டம்.. நாட்கள் எண்ணப்படுகின்றன: பரபரப்பை கிளப்பிய எச்.ராஜா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தமிழகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகார வர்க்கம் முழுவதும் ஊழல் மயம். தமிழக அரசு தப்புவது கஷ்டம். நாட்கள் எண்ணப்படுகின்றன." என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆற்று மணல் அள்ளுதல் மற்றும் விற்பனை செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் மணல் குவாரிகள் மற்றும் உரிமையாளர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

DMK regime days are counting: bjp senior leader H Raja about ED action

மேலும், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மணல் குவாரிகள் குறித்து, ஒப்பந்ததாரர்களை வரவழைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து விவரங்களை திரட்டினர். அதன் அடிப்படையில், நீர்வளத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினர். பெரும்பாலான இடங்களில் மணல் அள்ளுவதை உயர்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் உரிய முறையில் கண்காணிக்கவில்லை என அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமலாக்கத்துறையால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் வரும் நாட்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராவார்கள் எனத் தெரிகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இதனையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது.

DMK regime days are counting: bjp senior leader H Raja about ED action

இந்நிலையில், 10 மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது பற்றி பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "10 மாவட்ட ஆட்சியர்களுக்கு ED சம்மன். தமிழகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகார வர்க்கம் முழுவதும் ஊழல் மயம். தமிழக அரசு தப்புவது கஷ்டம். நாட்கள் எண்ணப்படுகின்றன." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+