விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து செஞ்சி மஸ்தான் அதிரடி நீக்கம்! திமுகவில் பரபரப்பு
சென்னை: விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து செஞ்சி மஸ்தான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வந்த நா. புகழேந்தி மறைவெய்திய காரணத்தால் கழகப் பணிகள் செவ்வனே நடைபெற டாக்டர் கவுதம சிகாமணி விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அது போல் மற்றொரு அறிவிப்பில், விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராக பணியாற்றி வரும் செஞ்சி கே.மஸ்தானை அந்த பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக டாக்டர் ப.சேகர் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்படுகிறது.
கருணாநிதி காலத்திலிருந்து திமுகவில் இருக்கும் செஞ்சி மஸ்தான் தற்போது அமைச்சராகவும் உள்ளார். அவரை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது ஏன் என்பது குறித்து தெரியவில்லை. விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் செஞ்சி மஸ்தானின் மாற்றம் என்பது முக்கியவத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications