“ஆடு திருடன்”.. ஆளுநர் ரவியை தாறுமாறாக தாக்கிய சிலந்தி! “சேடிஸ்டா?” பக்கம் முழுக்க விளாசிய முரசொலி
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சேடிச மனப்பான்மை இருப்பதாகவும், ஆடு திருடிய திருடன்போல் முழிப்பதாக கடுமையாக சாடியுள்ளது திமுகவின் முரசொலி.
இதுகுறித்து அந்த நாளிதழில் சிலந்தி என்ற பெயரில் வெளியான முழு பக்க கட்டுரையில், "தமிழ்நாட்டின் ஆளுநர் ரவியை நினைத்தால் பல நேரங்களில் "சிரிப்பதா? கோபப்படுவதா?" என்றே தெரியவில்லை! ஆடு திருடிய திருடன் என்பார்களே அதுபோல அவர் அகப்பட்டு முழிப்பதை நம்மால் உணர முடிகிறது! எதையும் யோசிக்காது முடி வெடுக்கும் 'முந்திரிகொட்டை' தனத்தால் அவர், தான் மட்டுமல்லாமல் தான் வகிக்கும் பதவியையும் தரம் தாழ்த்திக்கொண்டிருக்கிறார்.

தமிழ்நாடு எத்தனையோ ஆளுநர்களைப் பார்த்துள்ளது! சில ஆளுநர்கள் விமர்சனத்துக்கும் ஆளாகியுள்ளனர். ஆனால் இன்றைய ஆளுநர் ரவி போல எத்தனை சூடுபட்டாலும் திருந்தாத ஜென்மங்களாக யாரும் இருந்ததில்லை. தன்னைப் பெரிய வரலாற்று அறிஞராகக் கருதி பல்வேறு அபத்தக் கருத்துக்களை அவ்வப்போது அள்ளி வீசி வருகிறார்! ஆனால், திராவிட இயக்க வரலாற்றை அவர் படிக்கவில்லை என்பதை அவரது செயல்பாடுகள் தெளிவாக்குகின்றன.
இந்த இயக்கம் தன்மான உணர்வுகளை ஊட்டி வளர்த்த இயக்கம்! சுயமரியாதை எனும் அடித்தளத் தில் கட்டி எழுப்பப்பட்ட கொள்கைக் கோட்டம் இது! பதவிகளை எதிர்நோக்கி எழுந்த இயக்கமில்லை தி.மு.க. அதனைத்தான் தனது சமீபத்திய காணொலி பேச்சில் முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் துள்ளி யமாக எடுத்துரைத்தார்!
"நாங்கள் ஆட்சிக்காக கட்சி நடத்துகிறவர்கள் அல்ல: கொள் கைக்காக கட்சி நடத்து பவர்கள்..... மத வாதம், சாதிய வாதம், சனாதனம் பிறப்பால் உயர்வு - தாழ்வு. மேல்-கீழ் இந்த மாதிரியான மனித சமுதாயத்துக்கு விரோதமான பிற்போக்கு எண்ணங்களுக்கு எதிரானவர்கள் நாங்கள்...." எனப் பேசிய கழகத் தலைவர் தளபதியின் உரையில் காணப்பட்ட கனிவு - தெளிவு துணிவு ஆளுநர் ரவி அறிந்திட வேண்டிய ஒன்றாகும்! எதிரிகளின் வியூகங்களை எதிர் வியூகம் கொண்டு தகர்க்கும் ஆற்றலை தங்கள் தலைவர்கள் மூலம் கற்று அறிந்துள்ளது தி.மு.க.!
அக்னி அஸ்திரம் எய்து அழிக்க நினைத்தால் வருணாஸ்திரம் ஏவி அதனை நிர்மூலமாக்கும் வியூகங்களை எங்கள் கழகத்தவர் அறிந்தவர்கள் என்பதை, சட்டமன்றத்தில் அரசு தயாரித்துத் தந்த உரையைப் படிக்காது தனது சொந்த சரக்குகளை இணைத்தும், சிலவற்றை தவிர்த்தும் படித்துவிட்டு தான் ஏதோ நாக அஸ்திரம் எய்துவிட்டதாகக் கருதி பெருமிதத்தோடு ஆளுநர் ரவி நிமிர்ந்தபோது அவர் சற்றும் எதிர் பார்க்காத வகையில் முதல்வர் ஸ்டாலின் எழுந்து ஆளுநர் ஆற்றிய உரை அவைக்குறிப்பில் ஏறாது, அரசு தயாரித்துத் தந்த உரைதான் அவைக் குறிப்பில் இடம்பெறும் என அவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் வீசிய நாக அஸ்திரத்தை, கருட அஸ்திரம் எய்தி முனை மழுங்கச் செய்தாரே அப்போதே ஆளுநர் உணர்ந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் தனது ஆட்டம் மேடை ஏறாது என்பதை!
பின்னர் தேவையின்றி சில சர்ச்சைகளில் ஈடுபடத் துவங்கினார். தமிழ்நாட்டு மக்களின் மொழி உணர்வோடு மோதிப் பார்த்தார், தமிழ்நாடு என்பது சரியல்ல: தமிழகம் என்பதே சரி எனப்பேசிவிட்டு, அவரே தன்னிச்சையாக தமிழ்நாடு ராஜ்பவன் என்பதை மாற்றி தமிழக ராஜ்பவனாக்கி எதிர்ப்பு வலுத்ததும் ஆமை ஓட்டுக்குள் முடக்கிக் கொள்வது போல முடக்கிக் கொண்டார். சமத்துவத்தை உருவாக்க பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஆட்சியில் சனாதன, வர்ணாசிரமக் கொள்கைகளுக்கு தூபம் போடும் வகையில் பேசினார்.
எல்லாவற்றிலும் தலையிட்டு அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறார்! தனது அதிகார வரம்பு என்ன என்பது அறியாது முடிவெடுக்கிறார்! பிறருக்கு தொல்லை தந்து இன்பம் காணும் 'சேடிச'த்தனம் தான் அவரது செயல்களில் பெருமளவு பிரதிபலிக்கிறது.
சமீபத்தில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து ஒரு திடுக்கிடும் தகவலைத் தந்தார். அதாவது அமைச்சர் செந்தில் பாலாஜி மீது, அமலாக்கத் துறையை ஏவி விடப்பட்ட சில நாட்களுக்கு முன்பே ஆளுநர், செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கடிதம் எழுதியதாகவும், அதற்கு முதலமைச்சர் ஆளுநரின் அதிகார எல்லையைத் தாண்டி செயல்பட வேண்டாம் என அறிவுறுத்தி பதில் கடிதம் எழுதியுள்ளார் என்றும் தெரிவித்தார்.
அப்படி ஒரு கடிதம், அதாவது செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கக்கோரி முதலமைச்சருக்கு எழுதியிருந்தார் என்பதே. ஆளுநர் ரவி அரசியல் சட்டம். ஆளுநர்களுக்கு அளித்த அதிகார வரம்பை உண ராது செயல்படுகிறார் என்பதைக் காட்டவில்லையா?
இதேபோன்று கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி கேரளத்தின் ஆளுநர், ஆரிப் முகமது கான். கேரள முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதி அவர் பட்ட பாட்டை ஆளுநர் ரவி படித்தறிந்திருப்பாரே! அவர் மறந்திருந்தால் நினைவுக் காக அந்த நிகழ்வை மீண்டும் அவருக்கு நினைவு படுத்துகிறோம்.
கேரளாவின் நிதி அமைச்சரை பதவி விலக்க வேண்டும் என்று அந்த மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் முதல்வருக்கு கடிதம் எழுதினார். தான் கோருவது அரசியல் சாசனப்படி 164 (1) விதிப்படி சரியானது என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்! முதலமைச்சர் பினராய் விஜயன் ஆளு நரின் கோரிக்கையை நீராகரித்து, பதில் கடிதம் அனுப்பினார்.
ஆளுநரின் இந்தச் செயல் பெரிய அளவில் கேரள அரசியலில் விவாதிக்கப்பட்டது. பல ஏடுகள் ஆளுநரின் செயலைக் கண்டித்து எழுதின. "அமைச்சர்களை ஆளுநர் பதவி நீக்கம் செய்யும் எந்த ஒரு ஏற்பாடும் அரசியல் சாசனத்தில் இல்லை" என 'இந்து' போன்ற ஏடுகள் தலையங்கம் தீட்டின.
இந்து ஏட்டின் தலையங்கத்தில் ஒருபடி மேலே போய், "அரசியல் சாசனத்தின் கீழ் தங்களுக்கு இருக்கும் பொறுப்புகளைப் பற்றி அதீத எண்ணத்தில் ஆளுநர்கள் இருப்பது போல ஒரு தோற்றம் இருக்கிறது. அவர்கள்ளுக்கு அரசியல் சாசனத்தைக் காக்கும் பொறுப்பு இருப்பது உண்மைதான்! ஆனால் அதன் பொருள், எந்த ஒரு காலக் கெடுவும் விதிக்கப்படாததைப் பயன்படுத்தி, முடிவெடுப்பை தள்ளிப் போடலாம் என்பதோ, ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் விருப்புரிமை என்பதைப் பயன்படுத்தி (தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு) இணையான அதிகார மையமாக செயல்படலாம் என்பதோ அல்ல.
இப்படி ஏடுகள் பல கேரள ஆளுநரின் இதுபோன்ற செயல் அவருக்கு தரப்பட்ட அதிகாரத்தின் எல்லை தாண்டிய அத்துமீறல் என்பதை தெளிவாக்கின! அமைச்சரை விலக்க வேண்டும் என முதலமைச்சருக்கு கடிதம் எழுதி விட்டு அது குறித்து பலமுனைத் தாக்குதல்களுக்கு ஆளான ஆளுநர் ஆரிப்கான், டெல்லி சென்று திரும்பி வந்து தனது முடிவு குறித்து "Whatever advice I had to give, I have given and ultimately I accept the decision of Cheif Minister Pinarayi Vijayan"
அதாவது, "நான் என்ன அறிவுரை கூற வேண்டுமோ அதனை நான் தெரிவித்தேன். இறுதியாக முதலமைச்சர் முடிவை நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்று செய்தி யாளர்களை சந்தித்து கூறியது எல்லாம் நமது தமிழ்நாடு ஆளுந ருக்கு தெரியாதா? தெரியாதிருக்க நியாயமில்லை; தெரிந்திருந்தும் ஏன் அதிகார வரம்பு மீறி கடிதங்கள் அனுப்புகிறார்? - என்ற கேள்வி எழுவதும் நியாயமானதுதான்!
சிலருக்கு எதையாவது குத்தி, குதறிக் கொண்டே இருப்பதில் ஒரு வித ஆனந்தம்; அதனைத்தான் சேடிசம் என்று கூறுவார்கள்! நமது தமிழ்நாட்டு ஆளுநரின் நடவடிக்கைகளைக் காணும்போது இதுதான் நம் நினைவுக்கு வருகிறது! தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞரால் பதப்படுத்தப்பட்ட மண் தமிழ் நாட்டு மண்! இங்கே சனாதனம். வர்ணாசிரமம் எனும் விஷச்செடிகளை வளர்க்க எண்ணி விஷமத் தனங்களில் ஈடுபடாதீர்கள்!
இது திராவிட மண்; நடப்பது திராவிட மாடல் ஆட்சி! இதை நடத்துபவர்கள் கொள்கை மறவர்கள்!" என்று குறிப்பிட்டு உள்ளது.
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications