திமுக இளைஞரணி துணை செயலர் பதவி- வாரிசுகளுக்காக மல்லுக்கட்டும் டி.ஆர். பாலு- கே.என்.நேரு
சென்னை: திமுகவின் தலைமை கழக பொறுப்புகளுக்கு முட்டி மோதும் சீனியர்கள் அப்படியே வாரிசுகளுக்கான பதவிகளுக்கும் மல்லட்டுக்கட்டுவது தொடர் கதையாகி வருகிறது.
திமுகவின் அடுத்த பொதுச்செயலராக துரைமுருகனுக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதனால் அவரிடம் உள்ள பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு உள்ளிட்டோர் பெயர் அடிபடுகிறது.

டி.ஆர். பாலுவிடம் இருந்த முதன்மைச் செயலர் பதவி திருச்சி. கே.என். நேருவுக்கு கொடுக்கப்பட்டது. இதனால் சீனியாரிட்டி படி தமக்கே பொருளாளர் பதவி கிடைக்கும் என நினைக்கிறது டி.ஆர். பாலு தரப்பு.
இந்த பஞ்சாயத்து ஒருபக்கம் இருக்க, திமுக இளைஞரணி துணைச் செயலர் பதவி யாருக்கு என்பது குறித்த விவாதம் அன்பகம் வட்டாரங்கள் தலைதூக்கியுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் வலது கரமான அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ., திருச்சி மாவட்ட பொறுப்பாளர்களில் ஒருவராக அண்மையில் நியமிக்கப்பட்டார்.
அன்பில் மகேஷ் வசம் இருந்த இளைஞர் அணி துணை செயலாளர் பதவி யாருக்கு என்பதில் முட்டி மோதுகின்றனர் இரண்டு சீனியர்கள். திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் .பாலு, மகன் டி.ஆர்.பி.ராஜாவுக்காக இளைஞரணி துணை செயலர் பதவியை பெற போராடுகிறார்.
இன்னொரு பக்கம் திருச்சி அரசியலில் தமது கை எப்போதும் ஓங்கியே இருக்க வேண்டும் என்பதற்காக கே.என்.நேரு, மகன் அருணுக்காக முட்டி மோதுகிறாராம். ஆனால் உதயநிதிக்கு வலதும் இடதுமாக இருப்பவர்கள் திருச்சி கே.என். நேருவின் கால்நூற்றாண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது; இனி அவர் திருச்சி திமுகவில் தலை எடுத்துவிடக் கூடாது என்பதில் படுதீவிரமாக இருக்கின்றனராம்.
இதனால் இந்த ரேசில் டி.ஆர்.பி. ராஜாதான் தற்போதைய நிலையில் முந்துகிறாராம். அவருக்குத்தான் அதிக வாய்ப்பு இருக்கிறது என்கின்றன இளைஞர் அணியின் அன்பகம் வட்டாரங்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications