"கருணையே கிடையாது".. பற்றவைத்த ஆளுநர் ரவி.. யாரெல்லாம் இருந்தது? லிஸ்ட் எடுக்கும் தலைமை.. பரபரப்பு
சென்னை: ஆளுநர் ரவி தலைமையில் ஊட்டியில் துணை வேந்தர்கள் மாநாடு இரண்டாவது நாளாக இன்றும் நடந்து வருகிறது. ஊட்டியில் நடக்கும் இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அரசின் எதிர்ப்பிற்கு இடையில் ஆளுநர் ஒருவர் ஊட்டியில் தனியாக மாநாடு நடத்துவது இதுவே முதல்முறை. ஆளுநர்தான் பல்கலைக்கழக வேந்தர். இதனால் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி அவர் தற்போது துணை வேந்தர்கள் மாநாட்டை கூட்டி இருக்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு அரசு ஆளுநர்கள் துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை பறித்து மசோதா நிறைவேற்றி உள்ளது. தமிழ்நாடு அரசே துணை வேந்தர்களை நியமிக்கும் வகையில் மசோதாவை திமுக நிறைவேற்றி உள்ளது.

என்ன பேசினார்
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நேற்று நடந்த துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் பேசிய சில விஷயங்கள் ஆளும் தரப்பிற்கு கொதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. நேற்று ஊட்டியில் பேசிய ஆளுநர் ரவி, நாட்டை துண்டாட நினைப்பவர்கள், நாட்டின் ஒருமைப்பாட்டை குலைக்கும் முயற்சி மேற்கொள்பவர்களுக்கு கருணையே காட்ட கூடாது. அவர்களுக்கு கொஞ்சம் கூட கருணையே இல்லை என்று கடுமையாக பேசினார்.

ஆளுநர் ரவி உரை
இந்த நாடு ஒரே குடும்பம். இதில் வேறுபாடுகள் இருக்க கூடாது. காஷ்மீரில் பிரிவினை சக்திகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகள் வர தொடங்கி உள்ளனர்., வடகிழக்கு மாநிலங்களில் இருந்த பிரச்சனையும் தீர்க்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகள் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு துரிதமாக செயல்பட்டு இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது, என்று குறிப்பிட்டார்.

ஆளுநர் உரை
நாடு வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். என்றும் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார். நாடு குடும்பம் போல இருக்க வேண்டும்.. பிரிவினைவாதிகள்.. கருணையே இல்லை என்றெல்லாம் ஆளுநர் ரவி பேசியதை ஆளும் திமுக தரப்பு கவனமாக நோட் செய்து இருக்கிறதாம். ஆளுநர் இந்த மீட்டிங்கை கூட்டியதன் மூலம் அரசுக்கு எதிராக புதிய திரியை பற்ற வைத்து இருப்பதாக ஆளும் திமுக தரப்பினர் கருதுகிறார்களாம்.

அவசரம்
அதனால்தான் அவசர அவசரமாக ஆளுநருக்கு எதிராக நேற்று துணை வேந்தர்கள் மசோதா நிறைவேற்றப்பட்டது. இன்று ஆளுநர் கலந்து கொள்ளும் மாநாட்டின் இரண்டாவது நாள் விழா குறித்தும் ஆளும் திமுக தீவிரமாக நோட்டமிட்டு வருகிறதாம். அதோடு ஆளுனர் ரவி இன்னும் 5 நாட்கள் அங்குதான் இருக்க போகிறார். இந்த ஊட்டி கேம்பில் அவர் யாரை எல்லாம் சந்திக்க போகிறார் என்றும் அரசு தரப்பு உன்னிப்பாக கவனிக்க போவதாக தகவல் வருகின்றன.
Recommended Video

லிஸ்ட்
இது போக ஆளுனர் ரவி நடத்திய இந்த மாநாட்டில் 32 பேர் வரை கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதில் கல்வித்துறை சாராத சிலரும் கலந்து கொண்டனர். இவர்கள் யாரெல்லாம் என்றும் அரசு தரப்பு லிஸ்ட் எடுத்து நோட்டமிட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. நடவடிக்கை எதுவும் எடுப்பதற்கு இல்லை. மற்றபடி இங்கு என்ன விவாதிக்கப்பட்டது, அரசின் கொள்கைகளுக்கு எதிராக ஏதாவது ஆலோசிக்கப்பட்டதா என்று கண்டுபிடிப்பதற்காக அரசு தரப்பு இவர்களை கவனித்து வருகிறதாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications