"இந்தியா" கூட்டணி பிரதமர் வேட்பாளர் யார் தெரியுமா? தருமபுரி திமுக எம்பி.யின் பரபர ட்வீட்
சென்னை: "வருங்கால பிரதமர் உடன் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில்" என திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பது "இந்தியா" கூட்டணிக்குள் புதிய விவாதங்களை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
"இந்தியா" கூட்டணி என்பது பாஜகவுக்கு எதிரான பிரதான எதிர்கட்சிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன. லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை விரைவாக தொடங்குவது எனவும் "இந்தியா" கூட்டணி முடிவு செய்துள்ளது.

"இந்தியா" கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக்க அறிவிக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என அக்கட்சித் தலைவர்கள் திட்டவட்டமாக கூறி வருகின்றனர். அதேநேரத்தில் நிதிஷ்குமாரை 'இந்தியா" கூட்டணி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த ஜேடியூ முயற்சிக்கிறது.
இந்த பிரதமர் வேட்பாளர் பஞ்சாயத்து இப்போது வேண்டாம்... லோக்சபா தேர்தல் முடியட்டும்.. அப்போது பார்க்கலாம் என்பது "இந்தியா" கூட்டணி கட்சிகள் பலவற்றின் நிலைப்பாடு. திமுகவைப் பொறுத்தவரை கடந்த தேர்தலின் போதே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என முதன் முதலில் அறிவித்தது. ஆனால் "இந்தியா" கூட்டணி உருவான பின்னர் பிரதமர் வேட்பாளர் குறித்து திமுக இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
வருங்கால #பிரதமர் உடன் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில். pic.twitter.com/8HU3OmcirP
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) September 19, 2023
இந்நிலையில் லோக்சபா திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார், "வருங்கால பிரதமர் உடன் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில்" என ராகுல் காந்தியுடன் இன்று எடுத்துக் கொண்ட படத்தை தமது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் இன்று முதல் சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறுகிறது. அப்போது எடுக்கப்பட்ட படத்தைத்தான் இப்படி ஒரு வாசகத்துடன் டாக்டர் செந்தில் குமார் பதிவிட்டுள்ளார். அதேநேரத்தில் திமுக அதிகாரப்பூர்வமாக பிரதமர் வேட்பாளர் யார் என அறிவிக்காத நிலையில், வருங்கால பிரதமர் ராகுல் காந்தி! என்கிற திமுக எம்பியின் முழக்கம் "இந்தியா" கூட்டணிக்குள் புதிய சலசல்லப்புக்கு காரணமாக அமையும் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள். டாக்டர் செந்தில்குமாரின் இந்த ட்விட்டர் பக்கத்தில் ராகுல்தான் பிரதமர் என்ற கருத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் விமர்சனங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications