விஜயபாஸ்கருக்கு குறி?.. விடாத செந்தில் பாலாஜி.. உதயநிதி போடும் "மாஸ்டர் ஸ்கெட்ச்".. பரபரப்பு திமுக
கொங்குவை பலப்படுத்த திமுக முயன்று வருவதாக கூறப்படுகிறது
சென்னை: திமுகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? குறிப்பாக கொங்கு மண்டலத்தில் தனது பலத்தை விஸ்தரிக்க எடுக்க போகும் அஸ்திரம் என்ன என்பது குறித்த 2 முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன..!
தமிழ்நாடு முழுக்க ஓரளவு செல்வாக்கை திமுக பெற்றிருந்தாலும், கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏனோ திமுகவால் தன்னை நிலைநிறுத்தி கொள்ள முடியவில்லை..
கடந்த முறை திமுக ஆட்சியை இழக்க காரணமாக இருந்ததே இந்த கொங்கு மண்டலம்தான். இந்த முறை அபார வெற்றியை பெறமுடியாமல், ஓரளவு வெற்றியை பெற காரணமே இந்தகொங்கு மண்டலம்தான்..!

அரசியல்
அதிமுகவின் அரசியல் பலமும் & சாதி பலமும் திமுகவை ஒவ்வொரு முறையும் பதம் பார்த்து வருகின்றன.. இனி விரைவில் அடுத்தடுத்த தேர்தல்கள் வர போகிறது.. பஞ்சாயத்து தேர்தல், மற்றும் எம்பி தேர்தலில் எப்படியாவது கொங்குவை வளைத்து போட திமுக முயன்று வருகிறது.. அதற்காக 2 விதமான விஷயங்களை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.

மாஜிக்கள்
அதன்படி, முதலாவதாக, ஊழல் பட்டியல் ரெடியாகி கொண்டிருக்கிறது.. ஏற்கனவே, அதிமுக மாஜிக்கள் மீதான ஊழல் புகார்களை தூசி தட்டி எடுக்க போவதாக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்கான பணிகளையும் தற்போதை அதிகாரிகள் எடுத்து வருவதாகவும் சொல்லப்பட்டது.. ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீதான ஊழல் வழக்குகள் உள்ளன.. இது சம்பந்தமாகவே நடவடிக்கைகள் ஜரூராக நடந்து வருகின்றன.

செந்தில் பாலாஜி
ஆனால், விஜயபாஸ்கர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, செந்தில் பாலாஜி கோரிக்கை விடுத்துள்ளாராம்.. ஒருத்தரை விட்டுவிட்டு மற்றவர்கள் மீதான ஊழல் புகார்களில் மட்டும் நடவடிக்கை எடுத்தால், அது சரியாக இருக்காது என்றும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரின் மீதும் வழக்கு பாய்ந்தால், அது கொங்குவில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த அதிமுகவின் இமேஜை மொத்தமாக குலைக்க உதவியாக இருக்கும் என்றும் காரணம் சொல்லப்படுகிறதாம். அதனால் விஜயபாஸ்கர் பெயரையும் லிஸ்ட்டில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை திமுக தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கோரிக்கை
அதுமட்டுமல்ல, கடந்த வருடம், கொரோனா உச்சத்தில் இருந்தபோது, டாக்டர்கள், நர்ஸ்களுக்கான தங்குமிடம், உணவை முறைப்படுத்தியதில் தினந்தோறும் ரூ.30 லட்சம் சேமிக்கப்பட்டதாக தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்லி உள்ளதும் சுட்டிக்காட்டப்படுகிறதாம். இப்போதைக்கு விஜயபாஸ்கர் சுகாதார துறை குழுவில் இருந்தாலும், முதல்வர் ஸ்டாலின், விஜயபாஸ்கர் மீதும் ஊழல் புகாரை தூசி தட்டி எடுப்பாரா? செந்தில்பாலாஜியின் கோரிக்கை நிறைவேறுமா? என்ற ஆர்வம் எழுந்துள்ளது.

உதயநிதி
அதேபோல, கொங்கு மண்டலத்தை பலப்படுத்தும் பொறுப்பை உதயநிதிக்கு வழங்கலாம் என்றும் சிலர் சொல்லி வருகிறார்களாம்.. இப்போதைக்கு கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு செல்வாக்கு மிக்க மாவட்ட நிர்வாகிகள் இல்லை என்றே தெரிகிறது.. அதுமட்டுமல்ல, திமுக கொள்கைகளை, கொங்கு மண்டலம் அடிப்படையிலேயே ஏற்க மறுப்பதே அந்த கட்சி இன்றுவரை அங்கு காலூன்ற முடியாததற்கு காரணம் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.

ஆதரவாளர்கள்
இப்படிப்பட்ட சூழலில்தான் கொங்கு மண்டலத்தை சரி செய்ய உதயநிதி ஸ்டாலினே விரும்புவதாகவும் ஒரு செய்தி சில தினங்களுக்கு முன்பு கசிந்தது.. கொங்கு மண்டலத்தில் தற்போதுள்ள நிர்வாகிகள் பலரும் தனது ஆதரவாளர்களாகவும் இருப்பது மேலும் பிளஸ் பாயிண்ட்டாக இருக்கிறது... சென்னை சேப்பாக்கம் தொகுதியில் ஒரு லட்சத்திற்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி வெற்றி பெற்றுள்ளதால், அதே யுக்தியை வரப்போகும் தேர்தலிலும் பயன்படுத்தினால், திமுகவுக்கு பலம் என்று ஸ்டாலினிடம் சில மூத்த நிர்வாகிகளும் எடுத்துரைத்துள்ளனராம்.

திமுக கொடி
அதாவது ஊழல் புகார்கள் மூலம் ஒரு பக்கம், அதிமுகவை பலவீனப்படுத்தி, அதன்மூலம் திமுகவை கொங்குவில் பலப்படுத்துவதே இதன் நோக்கம்.. 2006ம் ஆண்டு முதலே திமுகவிற்கு கொங்கு மண்டலம் பெரும் தலைவலியாக உள்ள நிலையில், இந்த முறையாவது கொங்குவை திமுக அள்ளுமா? உதயநிதியை திமுக கொடியை அங்கு நிலைநாட்டுவாரா? பார்க்கலாம்..!
-
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்











Click it and Unblock the Notifications