"நம்பர் 1" முதல்வர்.. நான் காணோமாம்.. எடப்பாடி சொல்றாரு.. அவ்வளவு பாசம் என்மேல.. கிண்டலடித்த உதயநிதி
எடப்பாடி பழனிசாமிக்கு பதில்ளித்து பேசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்
சென்னை: "உதயநிதியை காணோம்.. நான் காணோமாம்.. நான் எங்கே போயிட்டேன்.. நேற்று கரூரில் இருந்தேன்.. இப்போ இங்கே இருக்கேன்.. எடப்பாடி பழனிசாமி என்னையே தேடிக் கொண்டிருக்கிறார்... ஏன்னா, என்மேல் அவ்வளவு பாசம் வைத்துள்ளார்" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்..
இன்றையதினம் தஞ்சையில் அவர் பிரச்சாரத்தில் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்து 8 மாதம் தான் ஆகிறது. அதுக்குள்ள கொடுத்த வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றியாகிவிட்டது.. கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் கொடுக்கப்பட்டது.

திமுக அரசு
இதேபோல் நகர பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைத்தது, இப்படி எத்தனையோ தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது... முதல்வர் எப்பவுமே சொல்றதை தான் செய்வார், செய்வதை தான் சொல்லுவார்... ஆட்சிக்கு வந்த புதிதில் கொரோனா 2-வது அலை உச்சத்தில் இருந்தது. அப்போது முதல்வர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததன் விளைவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது... இதுக்கு பிறகு 3-வது அலை வந்த போது ஆரம்பத்திலேயே துரித நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின்
ஆட்சிக்கு வந்த 8 மாதத்தில் இதுவரை 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது... ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் 1 கோடி பேருக்கு மட்டும்தான் தடுப்பூசி போடப்பட்டது... இதிலிருந்தே அவர்கள் எந்த மாதிரியான நடவடிக்கை எடுத்தார்கள் என்பது உங்களுக்கே தெரியும்... இந்திய அளவில் நடந்த சர்வேயில் சிறந்த நம்பர் ஒன் முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது... இந்திய அளவில் சிறந்த முதலமைச்சராக செயல்படுகிறார்.

மோடி
ராகுல்காந்தி அவர்கள் பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறார் மோடி அவர்களை பார்த்து, திராவிட முன்னேற்ற கழகம் இருக்கிற வரைக்கும் தமிழ்நாட்டில் நீங்க தலைவைத்துகூட படுக்க முடியாது.. கனவில்கூட நினைக்காதீங்க என்று சொல்லி இருக்கார்.. அந்த அளவுக்கு பாசிச பாஜகவுக்கும், அடிமை அதிமுகவுக்கும் சிம்மசொப்பனமாக திமுகவும், முதல்வரும் விளங்கி கொண்டிருக்கிறார்கள். சிறப்பான ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி
முன்னாள் முதல்வர், இன்றைய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரச்சாரத்தில் பேசியுள்ளார், என்ன தெரியுமா பேசியிருக்கார்? என்னை பற்றி பேசியிருக்கிறார்.. உதயநிதியை காணோம்.. நான் காணோமாம்.. நான் எங்கே போயிட்டேன்.. நேற்று கரூரில் இருந்தேன்.. இப்போ இங்கே இருக்கேன்.. எடப்பாடி பழனிசாமி என்னையே தேடிக் கொண்டிருக்கிறார்... ஏன்னா, என்மேல் அவ்வளவு பாசம் வைத்துள்ளார்... நான் எங்கேயும் செல்லவில்லை. தினமும் பிரசாரத்தில் தான் இருக்கிறேன்" என்றார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications