சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டக்கென கிச்சனுக்குள் நுழைந்த உதயநிதி.. "அம்மா"வுக்கு நான் இருக்கேன்.. அப்படியே மிரண்ட அதிமுக !

அம்மா உணவகத்தில் உதயநிதி ஆய்வு செய்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக ஆட்சியானது, ஒவ்வொரு நாளும் மெருகேறிக் கொண்டிருக்கிறது.. அந்த வகையில், உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகளும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

Recommended Video

    தொகுதி தான் எல்லாமே..அதிரடி காட்டும் உதயநிதி.. பின்னணி என்ன!

    உதயநிதி ஸ்டாலின் இந்த முறை சேப்பாக்கத்தில் நின்று அபார வெற்றி பெற்றார்.. எம்எல்ஏவாக பதவியேற்ற கையோடு, தொகுதியில் முழு வேகத்தோடு களமிறங்கினார் உதயநிதி.

    அப்போது ஒரு செய்தியாளர், "நீங்க வெற்றி பெற்றதற்கு உங்க அப்பா என்ன சொன்னார்"? என்று கேட்டார்.. அதற்கு உதயநிதி, "சேப்பாக்கம் மக்கள் உன்னை நம்பி ஓட்டுப் போட்டீருக்காங்க.. போயி அந்த மக்களுக்கு நல்லது செய், அவங்க நம்பிக்கையை காப்பாத்து-ன்னு சொன்னார்" என்று பதிலளித்தார்.

    தமிழ் மட்டுமல்ல.. 8ஆம் அட்டவணை மொழிகள் அனைத்தையும் ஆட்சி மொழியாக்கிட பாடுபடுவோம்.. முதல்வர் ஸ்டாலின்தமிழ் மட்டுமல்ல.. 8ஆம் அட்டவணை மொழிகள் அனைத்தையும் ஆட்சி மொழியாக்கிட பாடுபடுவோம்.. முதல்வர் ஸ்டாலின்

    உதயநிதி

    உதயநிதி

    ஸ்டாலின் சொன்ன அந்த ஒரே வார்த்தைக்காக, அன்று முதல் இப்போது வரை தன்னுடைய தொகுயில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின்... கொரோனா நிவாரண பணிகள், வீடுகள், குடியிருப்பு பகுதிகளில் ஆய்வுகள், முகாம்களை பார்வையிடுதல் என தினம்தோறும் ஒவ்வொரு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.. குப்பை கூலங்கள் நிறைந்த பகுதியானாலும்சரி, சாக்கடைகள் தேங்கி கிடக்கும் தெருக்களானாலும் சரி, சங்கோஜமின்றி நடந்து சென்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் அழைத்து, உடனடியாக அவைகளை சீர்செய்ய உத்தரவிட்டு வருகிறார்.

     அம்மா உணவகம்

    அம்மா உணவகம்

    இந்நிலையில், உதயநிதி ஆய்வு மேற்கொண்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதற்கு காரணம், உதயநிதி ஆய்வு மேற்கொண்டது ஜெயலலிதா ஆரம்பித்த அம்மா உணவகத்தில்தான்.. தன் தொகுதியில் இருந்த அம்மா உணவகத்துக்குள் திடீரென உள்ளே நுழைந்தார் உதயதி.. அங்கே ஏற்கனவே நிறைய பேர் நின்று சாப்பிட்டு கொண்டிருந்தனர்.. ஊழியர்கள் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.. உதயநிதியை பார்த்ததும் அனைவரும் அப்படியே ஆச்சரியத்தில் உறைந்துவிட்டனர்.

    சுகாதாரம்

    சுகாதாரம்

    டக்கென ஒரு ஸ்பூனை எடுத்த உதயநிதி, அம்மா உணவக சாப்பாட்டை சாப்பிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தார்... சாப்பாடு எப்படி இருக்கு என்று சாப்பிட்டு கொண்டிருந்தவர்களிடமும் விசாரித்தார்.. பின்பு, அங்கிருந்த கிச்சனுக்குள் நுழைந்த உதயநிதி, சமையலறை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கிறதா? என்றும், சமையலுக்கு தேவையான இருப்பு இருக்கிறதா என்றும் ஆய்வு செய்தார்..

    அதிமுக

    அதிமுக

    மேலும், இந்த கொரோனா காலத்தில், அம்மா உணவகம் வந்து சாப்பிடும் அனைவருக்கும் உணவு கிடைக்கவும், உணவகத்தை சுகாதாரமாக வைத்திருக்கவும், முடிந்த உதவிகளை தான் செய்வதாகவும் தெரிவித்தார்.. உதயநிதியின் இந்த செயல்பாட்டைதான், அதிமுகவும், பாஜகவும் மலைத்து பார்த்து வருகின்றன..!

     திட்டங்கள்

    திட்டங்கள்

    பொதுவாக, ஒரு கட்சிக்கு ஆட்சிக்கு வந்தால், முந்தைய ஆட்சியில் இருக்கும் திட்டங்களை தங்கள் பெயருக்கு மாற்றி கொள்வார்கள்.. இல்லாவிட்டால், அந்த திட்டங்களே இல்லாமல் போக செய்து விடுவார்கள்.. இதுபோல, எத்தனையோ கோடியில் தயாரான திட்டங்கள் அப்படியே முடங்கிப்போன வரலாறும் தமிழகத்தில் உண்டு.. ஆனால், அம்மா உணவகத்தை திமுக அரசு எதுவுமே செய்யவில்லை.. வருங்காலத்தில் அம்மா உணவகம் என்ற பெயரிலேயே இயங்க வேண்டும், அந்த பெயர் எப்போதுமே மாற்றப்படாது என்றுதான் சொல்லி வருகிறார்.

    பொறுப்பு

    பொறுப்பு

    திமுக ஆட்சி பொறுப்பேற்ற அடுத்த தினங்களில், இதே அம்மா உணவகத்தில் திமுகவினர் சிலர் உள்ளே நுழைந்து ரகளை செய்தபோதுகூட, ஸ்டாலின் தன்னுடைய கட்சிக்காரர்களைதான் கண்டித்தாரே தவிர, அம்மா உணவகத்துக்கு ஒரு சேதாரமும் வரவிடவில்லை.. இத்தனைக்கும் கலைஞர் உணவகம் என்ற ஒன்றை விரைவில் கொண்டு வரப்போவதாகவும் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    பாராட்டு

    பாராட்டு

    இப்படி, எந்தவித கட்சி பேதமுமின்றி, அப்பாவும் - மகனும் மாறி மாறி மக்கள் நலனில் அக்கறை காட்டி வருவதை நினைத்து திமுகவினர் புளகாங்கிதம் அடைந்து போய் உள்ளனர்..!

    English summary
    DMK Udhayanidhi Stalin sudden inspect in Chepauk Amma Unavagam
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X